போதைப் பொருள் வியாபாரியின் மனைவி பெயரில் நீர்கொழும்பில் ஆடம்பர ஹொட்டல்

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் அண்மைய காலமாக ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையாளரின் சொத்துக்கள் சம்பந்தமாக நடத்திய மிகப் பெரிய சுற்றிவளைப்பை இன்று காலை மேற்கொண்டுள்ளனர். தெமட்டகொடை வசந்த என்ற இந்த போதைப் பொருள் விற்பனையாளரின் மனைவியின் பெயரில் இருந்த இந்த சொத்துக்களின் பெறுமதி சுமார் 32 கோடி ரூபாய் என தெரியவருகிறது. நீர்கொழும்பு பிடிபன கடற்கரைக்கு எதிரில் அமைந்துள்ள 100 பர்ச்சஸ் காணி அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹொட்டல் என்பனவும் இந்த சொத்துக்களில் அடங்கும். கடந்த … Read more

யாழில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்! சந்தேகநபர் கைது

யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று காலை, யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றது. இந்த நிலையில் , மூதாட்டியின் படுகொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 73 வயதுடைய காணிக்கையம்மா ஜெயசீலி என்ற மூதாட்டியே பூச்சாடியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதேச … Read more

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய இணையவெளித் தாக்குதல் – பல சேவைகள் முடக்கம்

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், உக்கிரமான மோதல்கள் ஆரம்பித்துள்ளன. ரஷ்யாவின் இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரேன் மீது இணையவெளித் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரேன் அரசின் முக்கிய இணையதளங்கள், வெளியுறவுத்துறை, உட்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் சைபர் தாக்குதலால், உக்ரேன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. உக்ரேன் அரசாங்க சேவைகள் பெரிய அளவிலான DDoS தாக்குதல்களால் சீர்குலைவது இது … Read more

இராணுவத்தினர் குறித்து தமிழர்கள் வெளிப்படுத்திய விடயம்! காலம் கடந்து வெளியாகும் தகவல்

யுத்தத்தின் போது தமிழர்களை இனப்படுகொலை செய்ததாக கூறுவது பெரும் பொய்யாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்தம் முடிந்து ஒருவருடமாகுவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத் தளபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் அதிகளவிலான வாக்குகளை வழங்கினர். இதன்மூலம் யுத்தத்தின் போது தமிழ் மக்களை இராணுவத்தினர் கொன்று குவித்தனர் என தெரிவிப்பதை தமிழ் மக்கள் நம்பவில்லை என்றே தெரிகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். இது … Read more

ரோச் லைட்டுடன் நாடாளுமன்றம் வந்த ஹரின் பெர்னாண்டோ(Photo)

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் மலசலக்கூடத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில், டோச் லைட் கொண்டு வந்ததாகச் சபைக்கு அறிவித்தார். அதன் பின்னர், அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறான உபகரணங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும், எனவே அவையில் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் சபாநாயகரிடம் தெரிவித்தார். இதனால் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் … Read more

கோட்டாபயவுடன் இரகசிய உடன்படிக்கையில் ரணில் – ஆங்கில ஊடகம் தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவையும் அண்மையில் சந்தித்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 15ஆம் திகதி ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்ற ஒன்பதாவது பெரஹெர நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர்களை சந்தித்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் குழுவொன்று நேற்று காலை ரணில் விக்ரமசிங்கவிடம் இது தொடர்பில் … Read more

இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தது என்ன? சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் – செய்திகளின் தொகுப்பு

சர்வதேச அரங்கில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை அச்சமின்றி எதிர்கொள்வதற்கான திராணி கோட்டாபய – மஹிந்த அரசாங்கத்திற்கு இல்லை என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், முன்கள வீரர்களை விட பின்னால் இருந்த ஒரு சிலர் தவறுகளை இழைத்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். … Read more

சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கையைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 16 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்

கடந்த திங்கள்கிழமை (21.02.2022) இரவு 22:30 மணி அளவில் சுவிட்சர்லாந்து விமானநிலையம் ஒன்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த 10 ஆண்களும் (ஒரு முதியவர் உட்பட) 6 பெண்கள் உள்ளடங்களாக 16 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட இவர்கள் ஒரு தனி விமானம் மூலம் 45 சுவிஸ் பொலிஸாரின் பாதுகாப்புடன் மற்றும் 1 சுவிஸ் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியின் கண்காணிப்பில் இலங்கை விமான நிலையம் வரை சென்று நேற்றைய தினம் (22.02.2022) காலை 9:00 மணி அளவில் … Read more

இலங்கையில் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பேக்கரிகள்! செய்திகளின் தொகுப்பு

பேக்கரி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் அநாதரவான நிலையில் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி தொழிலை இனிமேலும் கொண்டு நடத்த முடியாது எனவும், சுமார் 200 – 300 சிறிய பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டு அவற்றின் உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உள்ள 7000 பேக்கரிகளில் சுமார் 4000 பேக்கரிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பாணை உற்பத்தி … Read more

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 6,000 மெற்றிக் டன் எரிவாயுவை விடுவிப்பதற்கு தேவையான டொலர்கள் இன்று வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயுவை விடுவிப்பதற்காக சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்பட்ட போதிலும், நேற்று பிற்பகல் வரை இலங்கை மத்திய வங்கி எந்தவொரு டொலர்களையும் வழங்கவில்லை. லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு எரிவாயுவுடனான … Read more