மின் வெட்டினால் வைத்தியசாலை கட்டமைப்பிற்கு பெரும் பாதிப்பு!

மின் வெட்டு காரணமாக வைத்தியசாலை கட்டமைப்புக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்த மின்வெட்டு நடவடிக்கைகளிலிருந்து வைத்திசாலைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. பிரதான வைத்தியசாலைகளில் மின்பிறப்பாக்கிகள் காணப்பட்டாலும் அவற்றுக்கு போதியளவு எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக மின்சாரத்தை பெற்றுக்கோள்வதில் தடைகள் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பினையும் பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் தடுப்பூசிகள் உள்ளிட்ட தடுப்பூசிகள் குளிர்சாதன பெட்டிகள், … Read more

வெள்ளவத்தை கடற்பகுதி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை (Video)

கொழும்பிலுள்ள வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி கடற்பகுதியில் ராட்சத முதலையொன்று சஞ்சரித்துள்ளமை புதிய பாதுகாப்பு கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்கள் மாலை வேளைகளில் பொழுதுபோக்கும் இடங்களை அண்மித்த கடற்கரை பகுதியில் இந்த முதலையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.  இந்த நிலையில் கரையோரப் பகுதியில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களும், பொழுதுபோக்குக்காக கடற்கரைக்கு செல்லும் மக்களும் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  கொழும்பின் கால்வாய்களில் இருந்து இந்த முதலைகள் கடலுக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. Source … Read more

இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு! – முதலீகளுக்கு தயாராகும் இந்தியா

 இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் குறைக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு நிலவுகிறது, இதனால் எரிபொருள் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் கடந்த சில நாட்களாக பரவலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்து வரும் நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். டிசம்பரில் இந்தியா வந்திருந்த … Read more

மணமேடையில் ஆசையாக மணமகன் கொடுத்த பொருள்! கோபத்தில் மணப்பெண் செய்த காரியம்

வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக பார்க்கப்படும் திருமணத்தில் சில மறக்கமுடியாத நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இங்கு திருமணம் முடிந்து மணமேடையில் மணமக்கள் நிற்கும் போது, மணமகன் ஐயர் கொடுத்த இனிப்பினை மணமகளுக்கு கொடுக்கின்றார். ஆனால் மணமகளோ அதனை வாயில் வாங்கிக்கொள்ளாமல் திடீரென கோபத்தில் தூக்கி வீசி விடுகின்றார். பின்பு ஐயர் மணமகளுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுக்கின்றார். அதனை மணமகள் மணமகனுக்கு கொடுத்த போது அதனை அவரும் தூக்கி வீசி தனது கோபத்தினை வெளிக்காட்டியுள்ளார். … Read more

தவறான செயலில் ஈடுபட்ட பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

வட்டவளை டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தில் உள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்குவை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்த உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றதாகவும், 21ம் திகதி குறித்த சிறுவனின் தந்தை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்ததாகவும் வட்டவளை பொலிஸார் … Read more

இலங்கையின் இரத்தினங்கள் துபாய் கண்காட்சியில்

துபாயில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள  எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 நீலக்கற்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. துபாயில் நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று  அலரி மாளிகையில் சந்தித்தனர். இலங்கையின் நீல கற்களுக்கு (Blue Sapphires) காணப்படும் உலகளாவிய கேள்வியை கருத்திற்கொண்டு நீலக்கற்களுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். அதன்படி, முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேருக்கு சொந்தமான … Read more

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த தம்பதிக்கு ஏற்பட்ட நெருக்கடி – கனவாக மாறிய ஆசைகள்

பாரிஸ் இருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட தம்பதி ஒன்று கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி குறித்த தம்பதி உட்பட 6 பேர் பாரிஸில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களின் பயணத்தை முடித்துக் கொள்ளும் திகதியாக கடந்த 27ஆம் திகதியை தெரிவு செய்திருந்தரனர். அதற்கேற்ப அனைத்த நடவடிக்கைகளையும் நிறைவு செய்துவிட்டு பிரான்ஸ் திரும்புவதற்காக PCR பரிசோதனை செய்த போது குறித்த தம்பதிக்கு கொரோனா தொற்று … Read more

டீசலின்றி நடுவீதியில் நின்ற பேருந்து! மக்கள் பெருந் தவிப்பு

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று டீசல் இன்றி வீதியில் நின்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை களுத்துறை நகர மையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மாத்தறை இலங்கை பேருந்து போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து களுத்துறை வீதியில் காலை 9 மணியளவில் நின்றுள்ளது. அப்போது பேருந்தில் சுமார் 80 பயணிகள் பயணித்ததால் அவர்கள் வேறு … Read more

இலங்கையில் கோவிட் வைரஸால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழக்கும் 30 வயதுக்குட்பட்ட அனைவரின் மரணத்திற்கும் கோவிட் தொற்று பிரதான காரணம் அல்ல என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.   நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறப்பிட்டார்.  தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,  கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழந்தவர்களில் பலர் சிறுவயது முதல் நாட்பட்ட நோய்களுக்கு நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் … Read more

12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து இந்த வாரம் தீர்மானம்

12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுவது குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்பட உள்ளது. தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு சிறுவர் நோய் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திடம், சுகாதார அமைச்சு கோரியுள்ளது. இந்த கோரிக்கைக்கு அமைய குறித்த சங்கம், தங்களது பரிந்துரைகளை முன்மொழிய உள்ளது. இதேவேளை, 12 முதல் 16 வயது வரையிலான ஏழரை லட்சம் சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மேலும், 16 முதல் 19 வயது வரையிலான வயதுப் பிரிவினை உடையவர்களில் … Read more