வர்த்தகரிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பெண் தப்பியோட்டம்

கடுவலையை சேர்ந்த கோடிஸ்வரான வர்த்தகர் ஒருவரை இங்கிரிய பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மது திரவம் ஒன்றை வழங்கி மயக்கமுற செய்து, அவரிடம் இருந்த 39 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட அழகிய பெண்ணை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பெண், வர்த்தகருக்கு சொந்தமாக ஆடம்பர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அந்த வாகனத்தை இடையில் கைவிட்டுச் சென்றுள்ளார். 25 பவுண் எடை கொண்ட தங்கச் சங்கிலி, மாணிக்க … Read more

ஒமிக்ரோன் தீவிரமடைந்தால் நாட்டில் சுகாதார கட்டமைப்பு சரிவடையும்

ஒமிக்ரோன் பரவல் வீதம் அதிகரித்தால் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் தீவிர நிலையை அடையும் வீதமும் அதிகரிக்கும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் சுகாதார கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். கடந்த வாரத்தில் 202 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 60 சதவீதமானவை 60 வயதுக்கு மேற்பட்ட நாட்பட்ட … Read more

மின்துண்டிப்பு தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு! வெளியானது முழு விபரம்

நாளைய தினமும் மின்வெட்டு  நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  எரிபொருள் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்கள் நாளை மின்வெட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. இதன்படி, ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இரண்டு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ஏனைய பிரிவுகளில் மூன்று மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  என பொதுப் … Read more

இலங்கையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் அனைத்து அரச பணியாளர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். ஏதேனுமொரு கடமைக்காக நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் … Read more

கோவிட் தொற்றின் பின்னர் ஏற்படும் அபாயம்! வெளியான திடுக்கிடும் தகவல்

கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள்  அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அமெரிக்க ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.  ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்  நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இது தொடர்பில் தெரிவிக்கையில்,  கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக அமெரிக்க  சாதாரணமாக அதாவது கோவிட் தொற்றுக்கு உள்ளாகி தீவிர நிலைமையை அடையாவிட்டாலும் கூட,  இந்த பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது என … Read more

இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்த்தொற்று! இரண்டு மாதத்தில் பதிவான சடுதியான அதிகரிப்பு

நாட்டில் டெங்கு  நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 9,809 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு பரவுவதற்கு 40% முதல் 45% கழிவுகளே காரணம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார். Source link

கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய

நாட்டின் முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடத்தவுள்ளார். அதற்கமைய, இந்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில்  இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் முன்னணி வர்த்தகர்களான தம்மிக்க பெரேரா, இஷார நாணயக்கார, சுமல் பெரேரா மற்றும் பிரபல 20 வர்த்தகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த சந்திப்பின் போது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனை தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source … Read more

ஏற்கனவே கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஒருவர் பல முறை கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஒரு மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் ஏற்கனவே தொற்று உறுதியான நபருக்கு மீண்டும் கோவிட்  தொற்று உறுதியாகலாம் என பொது சுகாதார பரிசோகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.   கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இருந்தால் உனடியாக அதனை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கோரினார். அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களையும் உரிய வகையில் … Read more

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சில சமயங்களில் ஒரே நபர் பல சந்தர்ப்பங்களில் கோவிட் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் … Read more

உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம்! இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து இந்திய மக்களுக்கு அந்நாட்டு தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்து வரும் நிலையில், இந்திய மக்கள் வெளியேற தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளதுடன், உக்ரைனில் தங்குயிருப்பது கட்டாயமில்லை என கருதும் நபர்கள் வெளியேறலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கேற்ப உக்ரைனுக்கான இந்திய தூதரகத்தின் டுவிட்டர், … Read more