சடுதியாக குறைவடைந்த முட்டை விலை! பாதிக்கப்படும் நபர்கள்

தற்போது சந்தையில் ஒரு முட்டை 12 ரூபாய் முதல் 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை வீழ்ச்சி காரணமாக தமது தொழிலை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலை நீடித்தால் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த பண்டிகைக் காலத்தில் முட்டை ஒன்று ரூ.28 முதல் 32 வரை விற்பனை செய்யப்பட்டதால்  உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரித்தது. தற்போது சந்தையில் ஒரு … Read more

பெற்ற குழந்தையை கடத்தியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தந்தை! மரணத்திற்கான காரணம் வெளியானது

கொலை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 24 வயதுடைய சந்தேக நபரான நீலக சந்தருவன் என்ற இலிபே நீலகவின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது. துப்பாக்கி தோட்டாக்கள் காரணமாக உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சண்டையின் போது சந்தேக நபரின் மார்பு, கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு பதிவாகி இருந்தது. அங்குருவத்தோட்ட, வல்பிட்ட, பீடி கொல சந்தி பகுதியில் … Read more

மின் துண்டிப்பு இல்லை! வெளியானது புதிய அறிவிப்பு

இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் இன்று காலை மீண்டும் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்பட்டது. எனினும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை ஏற்பட்டு மின் தடை ஏற்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல அனல் மின் நிலையங்களில் எரிபொருள் இருப்பு குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மின்தடை செய்ய … Read more

வடக்கில் வாழும் ஏழை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! விரைவில் வீட்டு உரிமையாளராகலாம்

வடக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக காணி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடக்கில் வாழும் ஏழை மக்களுக்கு, ஆறு பேர்ச் அல்லது எட்டு பேர்ச் அளவில் எதிர்காலத்தில் இவ்வாறு காணிகளை வழங்குவதற்கு திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அதனைக் கொண்டு அபிவிருத்தியடைய நாங்கள் உதவிகளை செய்வோம். முதலில் காணியை வழங்கி அவர்களை அபிவிருத்தியடைச் செய்வதுடன், அவர்களை வீட்டு … Read more

நாடு முழுவதும் மின்சார விநியோகம் இன்றும் தடைப்படும்

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் உரிய முறையில் கிடைக்கவில்லை எனின் இன்றைய தினமும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சனிக்கிழமையான இன்று மின்சாரத்தின் தேவை குறைவாக இருக்கும் என்ற போதிலும், தற்போதைய சூழ்நிலையில் இன்றிரவு தடையில்லா மின்சாரத்தை வழங்க சிக்கல்  ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது. சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் நேற்று பிற்பகல் எரிபொருளின்றி செயலிழந்ததாகவும், சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் இன்று காலை கிடைக்கும் … Read more

இலங்கையில் வாகன பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி!

இலங்கையில் வாகன பாவனையாளர்களுக்கு ஏற்படவுள்ள கடுமையான நெருக்கடி குறித்து இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கவலை தெரிவித்துள்ளது. உதிரி பாகங்களை முன்பதிவு செய்வது தொடர்பான கடன் பத்திர வசதிகளை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள அந்த சங்கம், வங்கிகளின் இந்த உத்தியோகபூர்வமற்ற கட்டுப்பாடுகள் வாகன பராமரிப்பை முடக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. “இந்த கட்டுப்பாடுகள் பொருட்கள், மக்கள் போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். போக்குவரத்துத் துறை நிறுத்தப்பட்டால், அது நாட்டின் … Read more

போரில் உயிரிழந்த உறவினர்களை தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர முடியும்! – ஆணைக்குழு பரிந்துரை (Photo)

 பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும், எனினும், போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. முந்தைய மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸால் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் … Read more

தென்னிலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்! – காரணம் வெளியானது

தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டதுடன், அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் உயிரிழந்தவரின் மனைவியினது சகோதரர் ஆபத்தான நிலையில் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் தெற்கு அதிவேக வீதியில் … Read more

கல்முனையில் தமிழ் இளைஞரை வெள்ளைவானில் கடத்த முயற்சி? – பொலிஸார் வெளியிட்ட தகவல்

 புலனாய்வுப் பிரிவினர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான செய்தி தொடர்பில் பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். பெப்ரவரி 17ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், “அரச புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட இனந்தெரியாத நபர்கள் இளைஞர் ஒருவரை வெள்ளைவானில் கடத்திச் செல்ல முயற்சித்தனர் என குற்றம் சுமத்தியிருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் பிரிவு துணைச் செயலாளரான நிதான்ஷான் என்ற இளைஞரே இவ்வாறு இனந்தெரியாத … Read more

அதிகரிக்கப்பட்டது பணத்தொகை! சரியான தகவலுக்கு 25 இலட்சம் ரூபா: பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு

ரம்புக்கன, கொட்டவெஹெர ரஜமகா விகாரையில் கலைப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நம்பகத்தன்மையான தகவலை வழங்குவோருக்கு 25 இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என தற்போது பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 859 1772, 07 18591924, 011 2422176 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு தகவலை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதலாம் இணைப்பு வரலாற்று சிறப்புமிக்க ரம்புக்கனை விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் … Read more