ராஜபக்ச தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த புதிய கருத்து கணிப்பு! ஆட்சியாளர்களுக்கு பேரடி தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் வழிநடத்தி வரும் தற்போதைய அரசாங்கம் தொடர்பான புதிய கருத்து கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகளுக்கு அமைய பெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொள்கைகள் தொடர்பான கற்கை கேந்திர நிலையம் இந்த கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. சில துறைகள் உள்ளடங்கும் வகையில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகள் என்ன?.தற்போதைய அரசாங்கத்தின் … Read more

கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? நீதி அமைச்சரிடன் கேள்வி எழுப்பும் மக்கள்

உயிரோடில்லாதவர்களை கேட்டால் எப்படி தருவது என்று நீதி அமைச்சர் கேட்கின்றார் எனில் கையளிக்கப்பட்ட மது உறவுகளிற்கு என்ன நடந்தது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உப செயலாளர் ரத்தீஸ்வரன் கவிதா கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் எதரிவரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள போராட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது குடும்பங்களின் சங்க … Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் வெளியிட்டுள்ள காணொளி

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கைக்கான தனது விஜயம் தொடர்பிலும், தன்னைப்பற்றியும் பகிர்ந்துள்ளார்.  குறித்த காணொளியில் அமெரிக்கத் தூதுவர் கூறும் விடயங்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வணக்கம் மற்றும் ரொம்ப நன்றி உள்ளிட்ட தமிழ் வார்த்தைகளையும் உச்சரித்துள்ளார். 🇺🇸 & 🇱🇰 have a lot in common – from our #democratic values to our shared commitment … Read more

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் சிறந்த சந்தர்ப்பம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது.  தற்போது அவுன்ஸூக்கு, 1,888 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. மேலும், இலங்கையின் இன்றைய தங்க நிலவரத்தின்படி தங்க விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று குறைவடைந்துள்ளது. அதன்படி, ஒரு பவ்ன் 24 கரட் தங்கத்தின் விலை – 108,050 LKR ஒரு பவ்ன் 22 கரட் தங்கத்தின் விலை –  99,100 LKR     ஆக இலங்கையில் இன்று பதிவாகியுள்ளது.  Source link

இன்று முதல் நாட்டில் நாளாந்த மின் துண்டிப்பு! சற்று முன் திடீர் அறிவிப்பு

நாட்டில் நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சற்றுமுன் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் வைத்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.  இதன்படி பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும்  என மின்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டானது இன்று முதல் அமுலாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தெரிவிக்கப்பட்டுள்ள நேர அளவு நாளாந்த … Read more

400 ரூபாவாகும் பாணின் விலை! வெளிவந்துள்ள தகவல்

இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகிறது. அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. . இன்று ஒரு இறாத்தல் … Read more

நாட்டில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகிறதா?

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித இதனை  வெளியிட்டுள்ளார்.  மேலும், இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  Source link

எரிபொருள் தட்டுப்பாட்டினால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் ஸ்தம்பிதம்

எரிபொருள் தட்டுப்பாட்டினால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டதனால் தேசிய ரீதியான மொத்த மின் உற்பத்தியில் 163 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.  இந்த மின் உற்பத்தி நிலையத்தில் நெப்தா எனப்படும் எரிபொருளைக் கொண்டு மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Source link

கனடாவில் தஞ்சம் அடைய தனது வீட்டில் தாக்குதல் நடத்தினாரா சமுதித்த?

இலங்கையின் பிரபல ஊடகவியலாளரான சாமுதித்த சமரவிக்ரமவின் வீடு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட பின்னணியில் குறித்து பல்வேறு கருத்து வெளிவருகின்றன. கனடாவில் அரசியல் தஞ்சம் பெறுவதாக தனது வீட்டை சமுத்தித்த தாக்கியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சமுத்தித்த, தனக்கு சில காலங்களுக்கு முன்னரே அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான நுழைவு விசா வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் தனது குடும்பத்துடன் கனடா செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் … Read more

இத்தாலியில் இலங்கை பெண் கொடூரமாக கொலை! – மகன் கைது

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனது வீட்டில் இலங்கைப் பெண்ணை கொலை செய்ததாகக் கூறப்படும் 25 வயது இளைஞனை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மகனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாத்தாண்டிய முதுகடுவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ரத்நாயக்க வயது 54 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை … Read more