இலங்கையில் கட்டாயமாகும் தடுப்பூசி அட்டை! – வெளியாகியுள்ள அறிவிப்பு

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை அடையாளம் காணும் செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். “பொது இடங்களுக்குள் வருபவர்களுக்கு கட்டாயம் முழு தடுப்பூசி போடுவது ஏப்ரல் 30ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு தடுப்பூசி அட்டை தேவைப்படும்.” “இந்த நாட்களில் நாங்கள் மற்ற விஷயங்களில் வேலை செய்கிறோம். பொதுமக்களுக்கு எளிதான செயலி … Read more

இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வு! – வெளியாகியுள்ள விலை நிலவரம்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் நாள் குறித்து மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். பயன்படுத்திய வாகனங்களின் அதிக விலையே இதற்குக் காரணம். கோவிட் பரவல் தொடங்கியதில் இருந்து பல சந்தர்ப்பங்களில் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைத்த சுசுகி ஆல்டோ காரின் விலை தற்போது 4 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட சுசுகி வேகன் ஆர் இன் விலை … Read more

பலரின் முன்னிலையில் மனைவியை தாக்கிய இராணுவ அதிகாரி

பனாகொடை இரைாணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ மேஜர் ஒருவர் பௌர்ணமி தினமான நேற்று பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பிரபலமான விகாரை ஒன்றில் வைத்து தனது மனைவியை தாக்கியுள்ளார். சிறுவர்கள் உட்பட விகாரைக்கு வந்திருந்த பெருந்திரளான பக்தர்களுக்கு எதிரில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. மேஜரின் தாக்குதலுக்கு உள்ளான மனைவி, பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தேக நபரான இராணுவ அதிகாரியை பாணந்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். இருவருக்கும் இடையில் இருந்து வந்த குடும்ப சண்டை … Read more

போரின்போது இடம்பெற்ற கொடுமைகள்! வெளிவந்த தகவல்கள்

இலங்கையில் போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம்  என சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தில் தேர்ச்சிபெற்ற சட்டத்தரணியும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாலினம் தொடர்பான முன்னாள் ஆலோசகருமான பிரியா கோபாலன் தெரிவித்துள்ளார்.  மேலும், இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இன்றியமையாதது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.    ‘இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறும் போக்கிற்கு எதிரான போராட்டத்தை வலுவூட்டுதல்’ என்ற தலைப்பில் … Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்! பேராசிரியரின் அறிவுரைக்கும் எதிர்ப்பு (Video)

யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வேண்டி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்திற்கு வந்த யாழ். பல்கலைக்கழக  பேராசிரியர் ஒருவர் மாணவர்களை சமரசம் செய்து பல்கலையின் வாயில்களை திறப்பதற்கு முயற்சித்துள்ளார்.  எனினும் அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இவ்விடத்தில் சற்று குழப்பம் ஏற்பட்டிருந்ததாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடந்துவரும் நிலையில், சில மாணவர்களின் போராட்டத்தினால் பரீட்சைக்கு இடையூறு ஏற்பட்டதையடுத்தே போராசிரியர் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் அதற்கு மாணவர்கள் … Read more

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க யாருக்கும் அனுமதி இல்லை! ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் அறிவித்த அமைச்சர்

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதற்கமைய, அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ் மாவட்ட ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், இம்முறை யாத்திரிகர்களை அனுமதிப்பதில்லை எனவும் அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் … Read more

துப்பாக்கி முனையில் குழந்தையை கடத்திய நபர் பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் மரணம்

புதிய இணைப்பு ஹொரணை பகுதியில் துப்பாக்கி முனையில் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்ற சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். ஹொரணை − வெல்லம்பிட்டி பகுதியில் சிறுவனை மீட்க சென்ற பொலிஸாரை நோக்கி சந்நேகநபர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளார். இந்த நிலையில், பொலிஸார் நடத்திய பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.  முதலாம் இணைப்பு பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தையொன்று தந்தையால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொரணை கந்தானை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  குழந்தையின் தந்தையான ஹொரணை … Read more

தங்கத்தின் விலையில் ஏற்படும் அதியுச்ச அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து  காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 3.20 டொலர்கள் அதிகரித்து, 1874.70  டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. மேலும், தங்கத்தின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.  இலங்கையின் இன்றைய தங்க நிலவரத்தின்படி தங்க விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. அதன்படி, 24 கரட் தங்கத்தின் விலை – 125, 500 LKR 22 கரட் தங்கத்தின் விலை – 116, 100 LKR Source link

காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்படுபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மாத்திரமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என வைத்திய ஆலோசகரான வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகள் மருத்துவ ஆலோசனையைப் பெறாமல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotic) உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், கோவிட் தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்ற பின்னர் வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் குறுகிய கால காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள். சாதாரண காய்ச்சலுக்கு படுக்கை ஓய்வு சிறந்த … Read more

இரு கட்சி சின்னங்கள் நீக்கப்பட்டன! வெளியானது அதிவிசேட வர்த்தமானி

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இதுவரை ஒதுக்கப்படாமலுள்ள கட்சி சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதுடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.  குறித்த அறிவிப்பின் படி அந்த பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link