கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் பாலியல் பிரச்சினைகள்

கோவிட் தடுப்பூசி ஆண்மைக் குறைவை ஏற்படுத்துவதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இல்லை என மருத்துவர் பிரியங்கர ஜெயவர்தன தெரிவித்துள்ளார். கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சில பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம் என்றாலும், கோவிட் தடுப்பூசியால் ஆண்மைக்குறைப்பாடு பிரச்சினைகள் தொடர்பில் ஆதாரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, பாலியல் செயற்பாடு மற்றும் குழந்தையின்மை போன்ற சிக்கல்களைத் தவிர்க்க கோவிட் தடுப்பூசியை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உட்பட அனைவருக்கும் கோவிட் … Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக ரத்து செய்ய முடியாது! அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்

பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்று முழுதாக ரத்து செய்ய முடியாது என அரசாங்கம் கூறியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்தால் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 310 பேர் விடுதலைலயாகும் சாத்தியம் காணப்படுவதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்களை சுட்டிக்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாகவே தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணை செய்ய முடிந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை … Read more

இலங்கை வருகின்றார் அமெரிகாவின் புதிய தூதுவர்!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளார். அவர் தனது நற்சான்றிதழ்களை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அரசாங்கத்திடம் கையளிப்பார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். ஈராக்கின் … Read more

இலங்கையில் கோவிட்டுக்கு மருந்து கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தியவரின் வீட்டில் நடந்த சோகம்

கோவிட் நோயை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி, தயாரித்த வைத்தியர் உதுமாகம தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் ஹீன் பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு 58 வயது எனவும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த … Read more

செயலாளரை கடுமையாக திட்டிய இராஜாங்க அமைச்சர்? பதவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

பலம் வாய்ந்த அமைச்சு ஒன்றில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது அமைச்சின் செயலாளரை கடுமையா திட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கைகள் சட்ட விரோதமானவை எனவும் அவற்றை நிறைவேற்ற முடியாது எனவும் செயலாளர் தெரிவித்தமையே இதற்கான காரணம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த இராஜாங்க அமைச்சர் பதவி விலகும் வரை நிலைமை மோசமடைந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source … Read more

வடகொரியாவிலிருந்து 30,000 ஆர்பிஜி ஆயுதங்களுடன் இலங்கை வந்த கப்பல் மாயமான இரகசியம்! (Video)

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியிலேயே, வடகொரியாவிடம் கருப்பு பணத்தில் ஆயுதங்களை வாங்கிய தகவலை நிதி அமைச்சர் வெளியிட நேரிட்டதாக பிரித்தானியாவின் வேல்சில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் (அரூஸ்) தெரிவித்துள்ளார்.  லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அமெரிக்க புலனாய்வு அறிக்கையின் படி போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கை அரசாங்காம் வடகொரியாவிடம் இருந்து பெருமளவான ஆயுதங்களை பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், முதலாவது அணு குண்டு … Read more

சொத்துக்காக தகப்பனை கொலை செய்த இலங்கை கோடீஸ்வரர்?

1830 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த போரா சமூகத்தை சேர்ந்த பெரும்திரளான வியாபாரிகள் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் சிறு வியாபாரங்களாக ஆரம்பித்து இன்றைய காலப்பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்காளர்களாக மாறியுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் திகதி போரா சமூகத்தின் தலைவர் Dr. Syedna Mufaddal Saifuddin Saheb அவர்களை ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் சந்தித்தபோது கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியுடன் போஹ்ரா சமூகத்தின் தலைவரின் சந்திப்பு இவ்வாறிருக்க ஆடம்ஜி … Read more

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள அபாய நிலை! கவலை வெளியிட்டுள்ள அதிகாரிகள்

தற்போது வட மாகாணத்தில் மலேரியா நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர், ஆலோசகர் சமூக வைத்தியர் பிரசாத் ரணவீர  கவலை வெளியிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் நான்கு வாரங்களுக்குள் நாட்டில் நான்கு மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவற்றுள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்திற்குள் … Read more

அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

நிறுவனங்களின் பணியாளர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்கள் மிகை வரி சட்ட மூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு நிதியங்கள் உட்பட 11 நிதியங்கள் இந்த சட்டமூலத்திற்குள் உள்ளடங்காது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பான உறுதியான தகவலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். மிகை வரி சட்ட மூலம் தொடர்பில் அமைச்சரவை சந்திப்பில் நிதி … Read more

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் அரியவகை விலங்கினம் ஈன்ற கன்று!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள அருகி வரும் விலங்கினமான அரேபிய ஒரிக்ஸ் (Arabian oryx), கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த அரேபிய ஒரிக்ஸ் கன்று ஆரோக்கியத்துடன் இருப்பதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த புதிய குட்டி தனது தாயுடன் பொது மக்கள் பார்வைக்காக விலங்குகள் சரணாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. பாலைவன பாலூட்டிகளான அரேபிய ஒரிக்ஸ்கள், அரேபிய பாலைவனத்திற்கு உரித்தானவையாகும். அங்கு சுமார் 1,000 அரேபிய ஒரிக்ஸ் மட்டுமே வசித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் … Read more