கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப் போகும் கவர்ச்சிகரமான மாற்றம்

இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று காலை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நெரிசலைக் குறைக்க தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வரும்போது … Read more

சொத்துக்காக தகப்பனை கொலை செய்த இலங்கை கோடீஸ்வரர்?

1830 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த போரா சமூகத்தை சேர்ந்த பெரும்திரளான வியாபாரிகள் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் சிறு வியாபாரங்களாக ஆரம்பித்து இன்றைய காலப்பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்காளர்களாக மாறியுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் திகதி போரா சமூகத்தின் தலைவர் Dr. Syedna Mufaddal Saifuddin Saheb அவர்களை ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் சந்தித்தபோது கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. Leader of Bohra community meets President… இவ்வாறிருக்க … Read more

ஜனாதிபதி கோட்டபாயவிடம் பொய்யான தகவல்களை வழங்கிய உயர் அதிகாரி

புகையிரத பொது முகாமையாளர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடனுதவியுடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40 ரயில் பெட்டிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தமை உண்மைக்கு புறம்பானது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே பொது மேலாளரின் தகவலுக்கமைய, 40 பெட்டிகள் அல்ல 31 பெட்டிகள் மாத்திரமே செயற்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக நேரங்களில் பெட்டிகளை தொழில்நுட்ப ரீதியாக இயக்க முடியாது, … Read more

இலங்கையில் கோவிட்டுக்கு மருந்து கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தியவரின் வீட்டில் நடந்த சோகம்

கோவிட் நோயை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி, தயாரித்த வைத்தியர் உதுமாகம தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் ஹீன் பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு 58 வயது எனவும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த … Read more

மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிகளுக்கு அதிர்ச்சி – கழிப்பறைக்குள் சிக்கிய ரகசிய கமரா

கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருப்பதை, தனது மகள் உட்பட மாணவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். இவ்வாறான மோசமான செயற்பாடுகள் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளதாக மாணவிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் … Read more

இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம்! – அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம், மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப் புலனாய்வுத்துறையினரை பயன்படுத்தி அரசாங்கம்,  சமூக ஆர்வலர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் கருத்துக்களை நசுக்க முயல்வதாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய, சட்டத்தரணி சுனில் வட்டகல, அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், விமர்சனங்கள் எழுந்துள்ளமையை அடுத்தே அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக வட்டகல குற்றம் சுமத்தினார். அடக்குமுறையை கொண்டு பேச்சுரிமை நசுக்கப்படுவது, ஜனநாயக விழுமியங்களுக்கு பாரிய … Read more

தங்க நகைகள் அணியும் போது மிகவும் அவதானமாக இருங்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் நாட்டின் பல பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. அந்த வகையில், கஹதுடுவ – அம்பலாங்கொட வீதியில் பயணித்த நபரொருவரின் கழுத்தில் இருந்த நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர். இதனை அருகில் இருந்தவர் ஒருவரால் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அக்மீமன பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த நகையை அறுத்துச் சென்றுள்ளனர். இது … Read more

யாழில் பரிதாபமாக பறிபோன இரு இளையவர்களின் உயிர்! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இருவர் டெங்கு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அராலி வீதி, ஆனைக்கோட்டையைச் சேர்ந்த வி்.அஜேய் என்ற வயது 11 எனும் சிறுவனும், 2ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கஜந்தினி யோகராசா எனும்18 வயது யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். டெங்கு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளையில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணங்களின் பின்னர் யாழ். குடாநாட்டில் டெங்குக் காய்ச்சல் பரவல் அச்சமும் வெளிவந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் … Read more

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பா? – அறிவிப்பு வெளியானது

இலங்கைக்கு போதியளவு டீசல் கையிருப்பு கிடைத்துள்ளதுடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதன் பின்னணியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐஓசி நிறுவனம் பெப்ரவரி 06ம் திகதி முதல் எரிபொருள் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CPC) விலையேற்றத்திற்கு செல்ல அரசாங்கத்திடம் அனுமதி கோரியது, ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்ததையடுத்து, நுகர்வோர் … Read more

1987 போன்று பலாலியில் தரையிறங்கும் மோடி! தென்னிலங்கைக்கு கடுமையான செய்தி (Video)

இலங்கை தமிழர்கள் விடயத்தில் இந்தியா சாத்தியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் அரசியல் கட்சிகள் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதம் உரிய தரப்பினர்களுக்கு சென்றுள்ளமை உறுதியாகியுள்ளது. எனினும், காழ்ப்புணர்ச்சி கரணமாக இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்தியா எங்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளது. இந்நிலையில், நாங்கள் இந்தியாவிடம் … Read more