ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொதி

ஐரோப்பிய நாடுகள் இருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பொதிகள் பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளன. தனியார் முகவர் நிறுவனங்கள் மூலம் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு போலியான முகவரியிட்டு பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

யாழில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற நபர் – பாராட்டும் தென்னிலங்கை மக்கள்

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70வது வயதில் பட்டம் பெற்றதனை அவரது மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் பட்டம் பதிவிட்டுள்ளார். “எனது தந்தை தனது 70வது வயதில் M.P.A பட்டம் பெற்றுள்ளார்” என மகன் பதிவிட்டுள்ளார். வைத்தியரான மகனின் பேஸ்புக் பக்க பதிவை சிங்கள பேஸ்புக் பக்கங்கள் மீள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன. … Read more

இலங்கை சீனாவிற்கு சொந்தமாக மாறும் அபாயம்!! செய்திகளின் தொகுப்பு

இன்னும் 10 வருடங்களின் பின்னர் கொழும்பு மாத்திரமல்ல, முழு நாடும் சீனாவிற்கு சொந்தமாக மாறி விடும் என தொழிற்சங்க தலைவர் பெர்னாட் பெர்னாண்டோ கூறியுள்ளார். அதிகரிக்கும் சீனப் பிரசன்னம் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், நமது நாட்டின் உள்நாட்டு வளங்களை சீனா பறித்து நம்மை கடனில் தள்ளியுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு, Source … Read more

இலங்கை மக்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடு

நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் என்பனவற்றை கொள்வனவு செய்ய முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலையங்களில் இவ்வாறான பொருட்கள் கணிசமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், எனவே மக்கள் அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். “சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக தனிநபர் ஒருவர் ஒரே … Read more

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் மீண்டும் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது அடையாளம் காணப்படும் அனைத்து கோவிட் நோயாளிகளும் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் ஆபத்தான நோய் அல்ல என தவறான கருத்து உள்ளதாகவும் ஆபத்தான நிலைக்குள்ளான நோயாளிகளும் உள்ளனர். ஆபத்துக்குள்ளானவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் கோவிட் … Read more

இந்தியப் பிரதமரின் வடபகுதி கரிசனை! பலாலியில் களமிறங்கவும் திட்டம்: செய்திகளின் தொகுப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பயணம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடி இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு செல்ல திட்டமிடுவதான செய்திகள் வெளிவந்துள்ளன. பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் குறித்து இந்தியத்தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவில்லை.  இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது … Read more

மருத்துவப் பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

மருத்துவ பணிப்பாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாவது நாளாகவும் மருத்துவ பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது ஏழு கோரிக்கைகளில் ஆறு கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சாதகமான பதிலை அளித்த போதிலும் உறுதி மொழி எதனையும் வழங்கவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எவ்வாறெனினும், இன்றைய தினம் காலை 9 மணிக்கு மீண்டும் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. மருத்துவப் பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தினால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். … Read more

ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி உத்தரவு

போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எந்தவொரு நபருக்கும் தாம் விரும்புவது போன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு இடமளிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள். ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மற்றும் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் … Read more

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு புதிய கடன் திட்டம்!

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு ‘விரு அபிமான’என்ற புதிய கடன் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. வீடுகள் கட்டுவதற்காக இந்த கடன் திட்டம் வழங்கப்படுகிறது.   Source link

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி! – சுங்கப் பிரிவு வெளியிட்ட விசேட அறிவிப்பு

அதிவேக நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் வாகன இறக்குமதிக்கான தடையை மீறி இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு சொகுசு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டடை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய காணொளி காட்சிக்கு பதிலளிக்கும் வகையில் சுங்க பிரதிப் பணிப்பாளரும் (சட்ட) ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா இதனைத் தெரிவித்தார். கடுவெல முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் பதிவுசெய்யப்பட்ட இலங்கை வாகன பழுதுபார்க்கும் தொழிற்சாலையினால் பெறுமதி கூட்டப்பட்டதன் … Read more