இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் முதல் பத்து நாட்களுக்குள் சுமார் 30,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கடந்த பத்து நாட்களுக்குள் இலங்கைக்கு மொத்தமாக 31,343 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இதில் ஒரு நாளைக்குச் சராசரியாக 3,134 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரையில் … Read more

மாந்திரீக நம்பிக்கையில் காவு கொள்ளப்பட்ட சிறுவன்! பரிசோதனையில் வெளிவந்த தகவல்

படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனுக்கு கோவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துர்மணம் வீசுவதாக பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய,  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன்போது, அவ்வீட்டில் உள்ள அறையொன்றின் கட்டிலில் 10 வயது சிறுவனின் சடலம் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவன் தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிறுவனது பெற்றோர் எவ்வித மருத்துவ … Read more

பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் விலைகள்

கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நீண்டகாலமாக நீடித்தால், பண்டிகைக் காலத்தில் பல உணவுப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிலர் கோதுமை மாவை இறக்குமதி செய்து தட்டுப்பாடு இருப்பதாக பாவனை செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன சிங்கள ஊடகம் ஒன்றுக்கு  தெரிவித்தார். கோதுமை மா தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை … Read more

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா? வெளியானது தகவல்

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், அரசாங்கத்திடம் மீளவும் யோசனை முன்வைத்துள்ளது. விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இந்த யோசனையை அனுப்பி வைத்துள்ளதாக, கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,  எவ்வாறிருப்பினும், குறித்த யோசனை தொடர்பில் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை. உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்கவேண்டிய அவசியத்தன்மை ஏற்பட்டுள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், … Read more

சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உட்பட 39 படையதிகாரிகளுக்கு சர்வதேச தடை

30 ஆண்டு காலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட 39 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கருதது வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பாதுகாப்பு தரப்பினருக்கு மாத்திரமல்லது எதிர்காலத்தில் ஏனைய துறைகளை சார்ந்த நபர்களுக்கும் இந்த நிலைமையை எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more

பிரித்தானியாவில் வேகம் எடுக்கும் புதிய காய்ச்சல்! முதல் மரணம் பதிவானது

இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் லஸ்ஸா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதி செய்துள்ளன. லஸ்ஸா காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி கடுமையான வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளால் பரவும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயால் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA)தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த தொற்றினால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து “மிகக் குறைவு” என்று இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. … Read more

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சார மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு – எப்போ சந்தைக்கு வருகிறது?

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மின்சார மோட்டார்  சுமார் 4 மணிநேரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில்,120 கிலோமீற்றர் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சசிரங்க டி சில்வா தெரிவித்துள்ளார். Source link

பூஸ்டர் தடுப்பூசிகள் இரத்த உறைவை ஏற்படுத்துமா? விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்

பூஸ்டர் டோஸாக வழங்கப்படும் பைசர் தடுப்பூசியால் உலகில் எந்த நாட்டிலும் இரத்த உறைவு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்தியநிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவிவரும் பிரசாரம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பைசர் தடுப்பூசி தற்போது உலகளவில் பில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இரத்த உறைவு எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இரத்த … Read more

இராவணன் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும்! – புத்திக பத்திரன கோரிக்கை

இலங்கை மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாததால் இராவணன் தொடர்பாக முறை சார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவர் முன்வைத்துள்ள பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இலங்கை மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத … Read more

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு! (PHOTO)

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2022.02.11ம் திகதியிடப்பட்ட 2266/55 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி, மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் இதனுடன் ஒத்ததான நோயாளர் பராமரிப்பு சேவைகள், வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகள் … Read more