சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பறிபோன உயிர்

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் உயிரிழந்துள்ளார். மகாவலி அதிகார சபையில் கடமையாற்றும் காணி உத்தியோகத்தரான கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த பேதுருஹேவகே ரஞ்சித் என்ற 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். உயிரிழந்த காணி அதிகாரியின் பிரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மேலதிக மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொக்குகேவினால் நேற்று (09) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. சுகயீனம் காரணமாக … Read more

கடன்களை திரும்பிச் செலுத்த முடியாது திணறுகிறதா இலங்கை? உண்மை நிலவரம் என்ன?

இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,  இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். அவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் எவ்வித அடிப்படைகளும் அற்றவை. அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அனைத்துத் … Read more

இலங்கையில் முட்டை விலை 50 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம்

கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம். பி. ஆர். அழகோன் குறிப்பிடுகிறார். அரிசி, சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதுடன் கால்நடை தீவன மூட்டை 3,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் தினசரி நுகர்வு செய்யப்படும் எட்டு இலட்சம் முட்டைகளில் கிட்டத்தட்ட 65 இலட்சம் வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன் அந்த மாகாணத்தில் சுமார் 400,000 விவசாயிகள் … Read more

இலங்கையின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி 27 வயதில் காலமானார்

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி குருப்பு தனது 27ம் வயதில் காலமானார். கடந்த 2020ம் ஆண்டு ஓஷதிக்கு புற்று நோய் ஏற்பட்டதுடன் இரண்டாண்டுகளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி 2015ம் ஆண்டில் இலங்கை தேசிய பூபந்து அணியின் சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருந்தார். கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் ஓஷதி பூபந்து போட்டியில் மகளிர் பிரிபில் … Read more

“என்னை நம்புங்கள்! வாக்குறுதியை நிறைவேற்றுவேன்’’ – கோரிக்கை விடுக்கும் கோட்டாபய

இலங்கையின் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சூழ்ச்சியால் அன்றி மக்களுக்கான பணிகள் ஊடாக முடிந்தால் அரசாங்கத்தை வீழ்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்த நிலையில், தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எதிர்வரும் மூன்று வருடங்களில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உறுதியளித்துள்ளார். ஆளும் பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரம் – சல்காது மைதானத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய … Read more

ஹிஜாஸ் உள்ளிட்ட பலர் விடுதலை! – கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள மதரசா ஒன்றில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை கற்பித்தமை தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார். 18 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சட்ட மாஅதிபரால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட … Read more

தடையை நீக்குங்கள்! – இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக பல ஐரோப்பிய தயாரிப்புகள் இலங்கை சந்தைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை  சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி தடை … Read more

வீடு அற்றவர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

மாலபேயில் 256 வீட்டுத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் வீடற்ற நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான 5,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நடுத்தர குடும்பங்களுக்கான இந்த அடுக்குமாடி குடியிருப்பு மாலபே புதிய புபுது மைதானத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 20 மாடிகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஜனவரி … Read more

டொலர் நெருக்கடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய வங்கியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டொலர்களுக்கு பற்றாக்குறை இருந்தால் கடந்த ஆண்டினுள் 22 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும், கடந்த மாதம் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும் இலங்கைக்கு இறக்குமதி செய்தது எப்படி என்று அவர் கேள்வி … Read more

அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் (Video)

டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து … Read more