புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுமா? வெளியானது அறிவிப்பு

கோவிட் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளது. இதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  Source link

தங்கத்தின் விலை குறைய வாய்ப்பேயில்லை! உறுதியான தகவல் வெளியானது

தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தங்கநகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் கடந்த தினங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம் இலங்கையின் நாணயப்பெறுமதி டொலருக்கு நிகராக குறைந்த நிலையில் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் உள்நாட்டில் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். Source link

கொழும்பில் வீதியில் நடந்து செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வீதியில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தின் தெற்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருச்து 4 தங்க சங்கிலிகள் மற்றும் தங்க பென்டன்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இருவரும் 29 … Read more

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்ப இலகுவழி: செய்திகளின் தொகுப்பு(Videos)

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்குப் பணம் அனுப்பும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் கையடக்கத் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. LANKA REMIT என்ற செயலியே இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் வைத்து நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயலியின் மூலம் எந்த நாட்டிலிருந்தும் இலங்கையில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடி பணப் பரிமாற்றச் சேவைகளைப் பெற முடியும். இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,  … Read more

டொலர் நெருக்கடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய வங்கியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டொலர்களுக்கு பற்றாக்குறை இருந்தால் கடந்த ஆண்டினுள் 22 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும், கடந்த மாதம் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும் இலங்கைக்கு இறக்குமதி செய்தது எப்படி என்று அவர் கேள்வி … Read more

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறாக மாறியுள்ள ஆளும் கட்சி

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் முதலாவது பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஏனைய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பொது மக்கள் பேரணி நடைபெறவுள்ளது. நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக இருந்தாலும் இந்தப் பேரணியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள 3000 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக … Read more

2 ஆண்டுகளில் எத்தனை கோடி ரூபாவிற்கு மக்கள் முகக் கவசம் கொள்வனவு செய்துள்ளனர் தெரியுமா?

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக இலங்கை மக்கள் இரண்டாண்டு காலப் பகுதியில் பெருந் தொகை பணத்தை முகக் கவசம் கொள்வனவு செய்ய செலவிட்டுள்ளனர். கடந்த இரண்டாண்டு காலப் பகுதியில் முகக் கவசங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 18000 கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளனர். நுகர்வோர் விவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இந்த தகவலை நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இதன்படி, நாள் ஒன்றுக்கு முகக் கவசம் கொள்வனவு செய்வதற்காக 25 கோடி ரூபாவினை மக்கள் செலவிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். … Read more

ஹிட்லர், புட்டினை ஜனாதிபதி பின்பற்ற வேண்டும் – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி

சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி ஆட்சி செய்ய வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரியுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் கருத்து வெளியிட்ட போது, “நாம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தற்போதைய பிரச்சினைகள் பற்றி பேசினோம். நாம் அவரிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம். ஜனாதிபதி ஆட்சி … Read more

முன்னணி பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தரவரிசை!

சர்வதேச Webometrics தரவரிசையின் படி கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 சிமாகோ (எகிப்து) கூட்டுத்தாபன தரவரிசை சுட்டெண்ணின் படி கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையின் முதல் பல்கலைக்கழகமாக தரப்படுத்தப்பட்டு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிற பல்கலைக்கழக தரவரிசைகளின் பட்டியலில் கொழும்பு பல்கலைக்கழகமும் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு மையமான கொழும்புப் பல்கலைக்கழகம், ஒன்பது பீடங்கள், ஏழு நிறுவனங்கள், ஏழு மையங்கள், … Read more

தமிழர்களின் சுய உரிமையை உறுதி செய்யுங்கள்! – இந்தியா இலங்கைக்கு அழுத்தம்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி மற்றும் சுய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளார். புது டில்லியில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேவைப்படும் காலங்களில் இந்தியா எப்போதும் இலங்கையுடன் துணை நிற்கும் என்றும் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்தார் என்று இந்திய வெளிவிவகார … Read more