புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம் மற்றும் பணம் அனுப்பும் தொகையின் அடிப்படையில் வரிச் சலுகையில் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதேவேள, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அனுப்பும் ஒரு டொலர் ஒன்றிற்கு 240 ரூபாவை வழங்க முன்மொழிந்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் … Read more

நாட்டு மக்களுக்கு மேலும் நெருக்கடி! மீண்டும் உயர்கின்றது எரிபொருள் விலை

எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த கோரிக்கையை ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். IOC நிறுவனம் தனது விநியோக நிலையங்களில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்த தீர்மானத்துடன் ஒப்பிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது டீசல் லிட்டர் ஒன்றுக்கு 32.50 ரூவாவும், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாம் நட்டம் ஏற்படுவதாக அவர் மேலும் … Read more

மட்டக்களப்பில் அதிபர் கொடூரமாக படுகொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் (Video)

Courtesy: Saravanan மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதுடன் பிரேத பரிசோதனையில் உயிரிழந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்படாததையடுத்து சடலத்தின் உடற் கூறுகள் அரச பகுப்பாய்வுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை 04ம் திகதி திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குறித்த சடலம் செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான பாடசாலை அதிபர்  செபநாயகம் மங்களச்சந்திரா( 53 ) என அவரது சகோதரி … Read more

11 இலட்சம் இலங்கையர்கள் தொடர்பில் கசிந்த தகவல்: செய்திகளின் தொகுப்பு(Videos)

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். 20 – 29 வயதுக்கிடைப்பட்டவர்களில் 7 லட்சத்து 19,000 பேர் இதுவரை எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், 30 – 60 வயதுக்கிடைப்பட்டவர்களில் 03 இலட்சத்து 86 ஆயிரத்து 408 பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை … Read more

ஜப்பானிலிருந்து வந்த அதிதொழில்நுட்பம் – சிக்கப் போகும் இலங்கையர்கள்

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவியாகவே இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வைத்து இன்று (08) முற்பகல், ஜப்பான் தூதுவர் மிசூகொஷி ஹிடெயாக்கி (Mizukosi Hideaki) அவர்களினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. லேண்ட் குரூஸர் ரக வாகனங்கள் 28, ப்ராடோ வாகனமொன்று, … Read more

இலங்கை அரசின் அண்மைய செயற்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத தடை சட்ட மறுசீரமைப்பு, மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் காண்பிக்கும் வலுவான பங்களிப்பை வரவேற்க வேண்டுமே தவிர, அதுகுறித்து எதிர்ப்பை வெளிக்காட்ட கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உரியவாறு வரைவிலக்கணப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற … Read more

இந்தியாவின் ஆதரவைப் பெற இலங்கை வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு: செய்திகளின் தொகுப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர் பிரச்சினையைக் கண்டும் காணாமலும் இலங்கை அரசாங்கம் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரட்னம் இதனைக் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார். இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு, Source link

இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  தேர்தல் நடத்தப்பட்டால் அது சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும். தேர்தல் நடத்துவது குறித்து உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல், வாக்குச் சாவடிகள் நிறுவுதல் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தேர்தல் காலத்தில் சட்டங்களை அமுல்படுத்துவது குறித்து பொலிஸ் … Read more

மத்திய வங்கியின் தங்க கையிருப்பு முடியும் தருவாயில்! வெளியான தகவல்

இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பு முடியும் தருவாயில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்நிய செலாவணி கையிருப்பு சிக்கல் காரணமாக கடந்த மாதம் மத்திய வங்கி ஒரு தொகுதி தங்க கையிருப்பினை விற்பனை செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மத்திய வங்கியிடம் 175 மில்லியன் டொலர் தங்க கையிருப்பு காணப்பட்டதாகவும், அது கடந்த மாதம் 92 மில்லியன் டொலராக குறைவடைந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் தங்க கையிருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் … Read more

உறுப்பினர்களுக்கு தொற்று உறுதியாகி வரும் நிலையில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்கள் பலருக்கு கோவிட் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்றின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று இன்று நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 50 பேர் வரையில் அண்மையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பது … Read more