WhatsApp குழுவில் வந்த காணொளிகள்! – இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் சிறை தண்டனை

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்த இலங்கை நாட்டவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாகச் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதைக் காட்டும் 25 காணொளிகளைத் தமது கைபேசியில் வைத்திருந்த 25 வயதான கொலம்பகே தனுஷ்கா சமாரா பெரேரா என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மற்றும் ஒரு இலங்கையரான ஹிண்டாகும்புரே ஷரிந்து தில்ஷன் ராஜபக்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக The Straits Times … Read more

இலங்கையில் குறைந்த விலையில் அறிமுகம் ஆகும் நான்கு சக்கர வாகனம்!

இலங்கையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, நான்கு சக்கர வாகனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 1.2 மில்லியன் ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் எனவும், 200சிசி திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 814 கிலோ எடையை சுமந்து … Read more

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை! – வெளியானது தகவல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அனைத்து எரிபொருள் விலைகளையும் ஒரு வாரத்திற்குள் அதிகரிக்கும் என கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விற்பனை நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் விற்பனை நிலையங்களுக்கு படையெடுப்பார்கள். இதனால், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் நஷ்டம் தொடர்ந்து உயரும் என்றும், அதன் விளைவாக,எரிபொருள் விலை தவிர்க்க முடியாமல் உயரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க (ஜே.எஸ்.எஸ்) செயலாளர் ஆனந்த பாலித இதனை … Read more

வீதியில் கிடந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம்(Video)

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விழுந்து கிடந்த பணம் மற்றும் நகையை அதன் உரிமையாளரை தேடிச் சென்று சாரதி ஒருவர் ஒப்படைத்துள்ளார். 6 பவுன் பெறுமதி தங்க நகை மற்றும் 27300 ரூபாய் பணம் என்பன உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆர்.ஏ. நிஷ்ஷங்க என்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் வீதியில் விழுந்து கிடத்த பெண்களின் கைப்பை ஒன்றை அவதானித்துள்ளார். அதனை சோதனையிட்ட போது பெறுமதியான தங்க நகை மற்றும் பணம் என்பன அதில் இருந்துள்ளன. பையில் … Read more

அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சுங்கத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதை மேற்பார்வையிட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்றையும் நியமித்துள்ளார் Source link

உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் தொடர்பில் விசேட அறிவித்தல்

கொவிட்- 19 தொற்றினால் பிற்போடப்பட்ட கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரையில் 2,437 பரீட்சை மையங்களில் இடம்பெறுகின்றது. இந்த பரீட்சைக்கு 345,242 பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில், 279, 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66, 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர். பரீட்சை விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

இன்று மின் துண்டிக்கப்படுமா?

மின்சாரத் தடைக்கான எந்தவொரு கோரிக்கையையும் மின்சார சபை இன்று முன்வைக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சார கொள்ளளவு இன்றைய நாளுக்கான மின்சார கேள்வியை பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளதென ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு விரைவில் கிடைத்தால் இன்றைய தினம் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தேசிய மின் தேவை கடந்த வாரம் சராசரி … Read more

மடவளையில் மண்சரிவு! மூவர் பலி

வத்துகாமம் – மடவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.   மேலும், குறித்த விபத்தில் சிக்குண்ட  ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்மேடு சரிந்து வீடொன்றின் மேல் வீழ்ந்ததனால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    Source link

யாழ். பல்கலைகழக மாணவிகள் இருவருக்கிடையில் மோதல்!

யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் மதியம் மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Source link

பரீட்சைக்கு தோற்றும் சிறை கைதிகள்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை  ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் இருவரும் 43 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் இவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  Source link