வெளிநாட்டவர்களுக்காக இலங்கை அரசாங்கம் புதிய அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கோவிட் காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது 7,500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் குறித்த காப்புறுதியானது 5,000 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. நாட்டின் சுற்றுலா வலயத்திற்கு அருகில் பிரத்தியேகமானதொரு பொலிஸ் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை மற்றும் உனவட்டுன பகுதியில் அதற்கான கட்டட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய … Read more

திடீரென நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை (செய்திப் பார்வை)

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு முதல் திடீரென அதிகரித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 183ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரு லீட்டர் ஒடோ டிசல் 124 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய … Read more

அதல பாதாளத்தை நோக்கி செல்லும் நாடு – நிதி அமைச்சு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கும் அமைச்சரவை பத்திரம் இன்று (07) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2022ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்குள் தங்கள் செலவினங்களை நிர்வகிக்கவும், மேலதிக ஏற்பாடுகளுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் எனவும் அமைச்சுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த நிதியிலிருந்து எரிபொருள் கொடுப்பனவுகளை பெறும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் … Read more

இலங்கையில் காதலிக்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த பிரான்ஸ் இளைஞன் – காதலர்களின் நிலை என்ன?

இலங்கையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பிரான்ஸ் நாட்டு காதலி மற்றும் காப்பாற்ற குதித்த இளைஞன் ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் உடல் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக தியத்தலாவ பாதுகாப்புப் படைத் தலைமையக மூத்த இராணுவ அதிகாரிகள் இருவர், தியத்தலாவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். கடந்த 3ஆம் திகதி கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பிரான்ஸ் இளம் ஜோடி ஒன்று பயணித்த நிலையில் செல்பி எடுக்க முயற்சித்த … Read more

குருந்தூர்மலையில் திடீரென இரவோடு இரவாக பிரித்ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் (PHOTOS)

முல்லைத்தீவு – குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு நேற்றிரவு (05) வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன ஆகியோர் 40 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளுடன் இணைந்து திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது,ஹெப்பத்திகொல்லாவ ,புல்மோட்டை அரிசிமலை ,மணலாறு பகுதிகளிலிருந்து வருகைதந்த 40 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் தொல்லியல் அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் விகாரையில் பிரித்ஓதல் மேற்கொண்டு அமைச்சர்களோடு இணைந்து வழிபாடுகளில் … Read more

கிட்டுபூங்கா பிரகடனமும் அதன் பின்னும் (Photos)

இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பும் நோக்கத்தோடு ஆறு கட்சிகள் ஒன்றாக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் போட வேண்டியதன் அவசியம் குறித்து நான் எழுதியும் பேசியும் வந்தேன். ஆனால் அக்கொழுக்கி 13 ஆக இருக்க வேண்டுமா என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். அந்நாட்களில் எனது நண்பர் ஒருவர் அவர் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர். அதோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர். என்னிடம் கேட்டார் இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் … Read more

ராஜபக்சவினருக்கு கிரேக்கத்தின் ஜோர்ஜிக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படுமா? தப்பிக்கும் முறையை கண்டுபிடித்தார்களா?

“ஜோர்ஜ் பேபன்ரூ (George Papandreou) உடனடியாக விலக வேண்டும், அவருக்கு பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை” இது கடந்த 2011 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி எழுப்பிய போராட்ட கோஷம். பேபன்ரூ குடும்பம் கிரேக்க நாட்டில் உள்ள பலமான அரசியல் குடும்பம். சரியாக இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தை போன்ற குடும்பம். இவரது பாட்டனார் பல முறை கிரேக்கத்தின் நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது தந்தையும் … Read more

இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கான முக்கிய அறிவித்தல்! அதிகரிக்கப்படும் கட்டணம்

நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கோவிட் காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது 7,500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  இதற்கு முன்னர் குறித்த காப்புறுதியானது 5,000அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. நாட்டின் சுற்றுலா வலயத்திற்கு அருகில் பிரத்தியேகமானதொரு பொலிஸ் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை மற்றும் உனவட்டுன பகுதியில் அதற்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த மாதத்தில் மாத்திரம் 82, 327 வெளிநாட்டு சுற்றுலாப் … Read more

இலங்கையில் போக்குவரத்தில் ஈடுபடுவோரின் முக்கிய கவனத்திற்கு! கட்டாயமாகும் நடைமுறை

கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் அறிவித்தால், போக்குவரத்து அமைச்சு அதற்கு இணங்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டால், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள்  மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் தடுப்பூசி அட்டையை சரிபார்க்க போக்குவரத்து அமைச்சு உத்தரவு பிறப்பிக்கும் என குறிப்பிட்டுள்ளார். தொற்றுநோய் தொடர்பான முடிவுகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும் … Read more

கொழும்பில் மாடி வீட்டு தொகுதியில் இருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு

பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பொரளை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   Source link