முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை

2009இல் முடிவடைந்த நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், மே 18 அன்று இலங்கையில் உள்ள தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்கப்டவுள்ளது. இந் நிலையில், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ‘தாக்குதலற்ற வலயங்கள்’ என்ற இடங்களை அறிவித்து பொதுமக்கள் அங்குச் சென்ற பின்னர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அத்துடன், விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், அரசாங்கப் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்ட ஏராளமான … Read more

மத போதகர் ஜெரோமிற்கு எதிராக CIDக்கு சென்ற ஞானசார தேரர்

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த போதகரின் செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் இழக்கப்படும் எனவும் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார். கிறிஸ்துவ அடிப்படைவாத கும்பல் மிக வேகமாக மதமாற்றத்தை பரப்பி வருவதாகவும், அந்த சதியில் இந்த மத போதகரும் ஒரு … Read more

கோர விபத்தில் ஸ்தலத்தில் பலியான பாடசாலை மாணவன்

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இப்பலோகம, மஹஇலுப்பள்ளம பகுதியில் காரும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிரவ நடுநிலைப் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் புஸ்பிக கசுந்த சமரதுங்க என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். தகவல் தொழிநுட்ப பாடம் தொடர்பான பயிற்சி வகுப்பை முடித்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பும் … Read more

நீடிக்கும் கடுமையான வெப்பம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் வெப்பம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் சிலவற்றிலும்,  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள இடங்களிலும்  “கவனம்” செலுத்தப்பட வேண்டிய  மட்டத்தில் … Read more

நாட்டில் ஆபத்தான கோவிட் திரிபு பரவுகிறதா..! பரிசோதனை ஆரம்பம்

நாட்டில் பரவி வரும் கொவிட் வைரஸின் தற்போதைய மாறுபாட்டை கண்டறியும் சோதனை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவு பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நாட்களில் பரவும் கோவிட் வகையை அடையாளம் காண்பது முக்கியம். கோவிட் ஓமிக்ரோன் XBB ஸ்ரெய்ன் நாட்டிற்குள் நுழைந்ததாக சந்தேகம் இருந்தாலும், … Read more

கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம்

கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (15.05.2023) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாக தெரியவருகிறது.  சிறியளவு நிலநடுக்கம் 2.1 ரிக்டர் அளவான சிறியளவு நிலநடுக்கமே பதிவாகியுள்ளது. இந்த விடயத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது  Source link

கனடா செல்வோருக்கான முக்கிய தகவல்! கொழும்பில் அம்பலமான மோசடி (Video)

கனடாவிற்கு மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக கட்டணங்களை அறவிட்டு தனிநபர் ஒவ்வொருவரிடம் இருந்து கிட்டதட்ட 14 லட்சம் ரூபா பெற்றுகொள்ளப்பட்டு மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிலே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.  சுமார் 500ற்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்  தெரிவித்த விரிவான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்,        Source link

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த 16 வயதுடைய சிறுமி! வரவு வைக்கப்பட்ட பணம் : வெளியான மேலும் பல தகவல்கள்

களுத்துறையில், மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதுடைய சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களில் மூவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமமாலி ஹல்பண்தெனிய உத்தரவிட்டுள்ளார்.  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இன்று(15.05.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதியாக செயற்பட்டவர், சிறுமியின் நண்பி … Read more

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கான விசேட கருத்தரங்கு (Photoa)

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று பங்காளதேஷின் டக்கா நகரில் நடைபெற்றுள்ளது. ‘இந்தியா பவுண்டேசன்’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடலின்போது இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன. தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்புக்கள்  மேலும், இந்து சமுத்திரப் பிராந்திய விடயங்களில் தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்புக்கள் தொடர்பாகவும்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் … Read more

வடக்கு- கிழக்கு ஆளுநர்கள் உட்பட மூவர் மீது ஜனாதிபதி அதிரடி நவடிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15.05.2023) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17.05.2023) நியமிக்கப்படவுள்ளனர் .  ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள்   வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மேற்படி மூன்று ஆளுநர்களும் … Read more