விகடன்
Ajithkumar:“அஜித் சார் கைகொடுத்துத் தூக்கிவிட்ட எத்தனையோ பேர்களில்…''- நெகிழும் மகிழ் திருமேனி
மோகன் லால் நடித்துள்ள `எல்2; எம்புரான்’ படம் மார்ச் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ப்ரித்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் தயாராகியிருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று கொச்சியில் நடைபெற்று வருகிறது. படக்குழு உட்பட மம்முட்டி, இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, “நான் மோகன் … Read more
Vijay: `நான் ஆணையிட்டால்…' – விஜய் படங்களும் எம்.ஜி.ஆர் ரெபரன்ஸ்களும் ஒரு பார்வை
விஜய் சாட்டையை சுழற்ற ‘ஜனநாயகன்’ என்ற தலைப்போடு நான் ஆணையிட்டால் என்கிற வரிகளையும் சேர்த்து படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அரசியல்வாதி அவதாரம் எடுத்த பிறகு விஜய் கமிட் ஆகி வெளியாகவிருக்கும், அவர் சொன்னபடி அவரின் கடைசிப் படம் என்பதால் ‘ஜனநாயகன்’ மீது எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கிறது. எம்.ஜி.ஆர் ரெபரன்ஸோடு அரசியல் சாட்டையை விஜய் சுழற்றவிருக்கிறார் என்பதை போஸ்டர் மூலமே கடத்திவிட்டார்கள். ஆனால், விஜய் அரசியல் நெடி வீசும் படங்களில் நடிப்பதோ எம்.ஜி.ஆரோடு தன்னை இணைத்துப் பேச வைப்பதோ … Read more
Only Veg: `அசைவம் தடை செய்யப்பட்ட 6 இந்திய நகரங்கள்..' எந்தெந்த நகரங்கள் தெரியுமா?!
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தியா. மொழி, கலாச்சாரம் மாறுப்பட்டிருப்பதுப்போல, இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் உணவுகள் வேறுபடுகின்றன. அதிலும் சில நகரங்களில் மத மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளுக்காக அசைவம் தடை செய்யப்பட்டிருக்கிறது அல்லது பயன்பாடு குறைக்கப்பட்டிருக்கிறது. ‘என்ன இது…இந்தியாவிலா?’ என்று ஆச்சரியம் எழுகிறது அல்லவா…அந்த நகரங்கள் எவை என்று பார்க்கலாம். வாங்க… ரிஷிகேஷ் முதலாவதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ‘ரிஷிகேஷ்’. இந்த நகரமானது ‘புலன்களின் இறைவன்’ என்று அழைக்கப்படும் ஒரு யாத்திரை தலமாகும். இந்த நகரம் … Read more
Relationship: மிடில் ஏஜ்ல தேனிலவு ஏன் கட்டாயம் போகணும்?
இரண்டாவது தேனிலவு… தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இதனால், ஒரு கணவன் – மனைவிக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன? டாக்டர். ஷாலினியிடம் கேட்டோம். அவருடைய விளக்கமான பதில்களை படியுங்கள். ஹனிமூன் தேனிலவு ஏன் அவசியம்? ”திருமணமான புதுதில் கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். ‘காலையில் எழுந்தோம்; காப்பிக் குடித்தோம்; சமைத்தோம் சாப்பிட்டோம்; … Read more
Mysskin: “மன்னிப்புக் கேட்டு உங்கள் எல்லோரையும் கடவுளாக்குகிறேன்.." – இயக்குநர் மிஷ்கின்
‘பாட்டல் ராதா’ புரொமோஷன் விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா. ரஞ்சித் முதலிய இயக்குநர்கள் கூடிய விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேச்சில் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பிரயோகித்ததும் இளையராஜா முதலான சிறந்த இசையமைப்பாளர்களை ஒருமையில் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான பேட் கேர்ள் திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. மிஷ்கின் இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், … Read more
“தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' – வெற்றிமாறன் பேச்சு
வெற்றிமாறன் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கி உள்ள படம் ‘பேட் கேர்ள்’. இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன், சாந்தி பிரியா, அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது. கடந்த வாரம், ‘பாட்டில் ராதா’ பட புரோமஷனின்போது மிஷ்கின் பேசியது சர்ச்சை ஆக, அதற்கு பிறகு அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி ‘பேட் கேர்ள்’ புரோமஷன் நிகழ்ச்சி. பேட் கேர்ள் படம் குறித்தும், மிஷ்கின் குறித்து … Read more
வேங்கை வயல் வழக்கு: 2-வது நாளாக மக்கள் போராட்டம்; கிராமத்தை சுற்றி சோதனைச்சாவடி, போலீஸார் குவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் … Read more
“அலைபாயுதே படத்துக்கு என்னோட முதல் சாய்ஸ் ஷாருக்கான் -கஜோல் தான்'' -சீக்ரெட் பகிரும் மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ பிளாக்பஸ்டர் ஹிட் என்பதை தாண்டி, அது ஒரு ‘எவர்கிரீன் ஹிட்’ என்றே சொல்லலாம். இப்போது வரை அந்தப் படத்தின் புரோபோசல் சீன் முதல் பாட்டுகள் வரை டிரெண்டில் உள்ளது. இந்தப் படம் குறித்த சீக்ரெட் ஒன்றை தற்போது கூறியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவர், “நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோல் வைத்து இயக்க முதலில் திட்டமிட்டு இருந்தேன். ஷாருக்கானும் இந்தக் கதைக்கு ஓகே சொல்லியிருந்தார். ஆனால், இந்தப் படத்தின் கடைசி எப்படி … Read more
விக்ரம் – அசின் நடித்த `மஜா' பட இயக்குநர் ஷஃபி உடல்நல குறைவால் மரணம்!
மலையாளத்தில் பல காமெடி படங்களை கொடுத்துள்ள இயக்குநர் ஷஃபி நேற்று நள்ளிரவு காலமாகி உள்ளார். இவர் தமிழில் விக்ரம், அசின், பசுபதி, மணிவண்ணன் ஆகியோர் நடித்த ‘மஜா’ படத்தை இயக்கியவர் ஆவார். இவருக்கு தற்போது 56 வயது ஆகும். கடந்த 16-ம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆனால், சிகிச்சைகள் இவருக்கு பலனளிக்கவில்லை. இதனால், நேற்று நள்ளிரவு காலமாகி உள்ளார். ‘மஜா’ பட இயக்குநர் ஷஃபி மரணம்! இவரது மறைவு செய்தியை … Read more