Manmohan Singh: “சூழ்ச்சி அரசியல் அவருக்கு வராது…'' – அப்பா குறித்து மனம் திறந்த மகள்

இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்ற பெரும் பொறுப்புடன் அதிகாரத்துக்கு வந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அதிரடி நடவடிக்கைகள், அரசியல் சூழ்ச்சிகள், நம்பிக்கை துரோகங்கள், பல்வேறு விமர்சனங்கள் எனத் தொடர்ந்து தடைகள் வந்தாலும், 10 ஆண்டுகளை இந்திய மக்கள் அவரிடம் ஒப்படைத்தார்கள். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்தவுடன், நிசப்த நிலைக்குச் சென்றார் மன்மோகன் சிங். ஆட்சிக்கு வந்தும் தொடர் விமர்சனங்களை முன்வைத்தது ஆளும் பா.ஜ.க அந்த விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்காமல் இருந்தார் மன்மோகன் … Read more

Vidamuyarchi Exclusive: `ஆண்டோ, Folk Marley'னு அனிருத் கூப்பிடுவார்! – `சவதீகா' பற்றி ஆண்டனி தாசன்

அஜித் நடித்திருக்கும் `விடாமுயற்சி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியிருக்கிறது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் முதல் சிங்கிளான `சவதீகா’ பாடலை பின்னணி பாடகர் ஆண்டனி தாசன் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை அறிவு எழுதியிருக்கிறார். `சொடக்கு மேல’, `டிப்பம் டப்பம்’ போன்ற பாடல்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டுமொரு முறை அனிருத்துடன் கைகோர்த்திருக்கிறார் ஆண்டனி தாசன். அவரை தொடர்புக் கொண்டு வாழ்த்துகளை சொல்லி இந்தப் பாடல் தொடர்பாக பல கேள்விகள் கேட்டோம். மிகுந்த மகிழ்ச்சியிலிருந்த ஆண்டனி தாசன், “பாடல் நல்லா … Read more

”சத்யநாராயணனின் சிகிச்சை செலவு முழுவதையும் தலைவர் ரஜினி செலுத்தி விட்டார்”- ராஜேஸ்வரன் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் சத்யநாராயணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாளைக்கு சத்யநாராயணனின் சிகிச்சைக்கு ரூ. 25,000 செலவாகிறது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு போதிய பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். சத்யநாராயணன் இதையடுத்து, சத்யநாராயணன் நிலை குறித்து விகடனில் செய்தி வெளியானது. இந்தநிலையில் அகில … Read more

Christmas: திருடிய குழந்தை இயேசு சிலையை மீண்டும் வைத்த திருடர்… ஒரு விநோத சம்பவம்!

அமெரிக்காவில் திருடிய குழந்தை இயேசு சிலையை, திருடிய நபர் மன்னிப்பு வேண்டும் குறிப்புடன் மீண்டும் வைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலரோட மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது கிறிஸ்துமஸ் (Christmas) விழாவையொட்டி கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி குறித்து சிலைகளுடன் குடில் அமைத்து கொண்டாடுவது வழக்கம். அப்படி அமைக்கப்பட்ட குடிலிலிருந்து டிசம்பர் 17-ம் தேதி குழந்தை இயேசு சிலையை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். தற்போது மன்னிப்பு குறிப்புடன் சிலையை மீண்டும் வைத்துள்ளார். அவரது … Read more

கும்பகோணம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… போக்சோவில் பேராசிரியர் கைது!

மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் ஜியாவுதீன்(43). இவர் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அரபி வகுப்பு எடுக்கும் பேராசிரியராக பணியாற்றினார். கும்பகோணம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பெண் சில வருடங்களுக்கு முன்பு அந்த கல்லூரியில் படித்து வந்தார். மாணவியான அவர் அப்போது மைனர் என்பது குறிப்பிடத்தக்கது. போக்சோ சட்டம் இந்தநிலையில், கல்லூரியில் அரபி வகுப்பு எடுத்த போது, ஜியாவுதீன் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தகாத முறையில் பழகி பாலியல் … Read more

The Smile Man Review: சீரியல் கில்லரின் அட்டகாசம்; திகில் கிளப்புகிறதா சரத்குமாரின் 150வது படம்?

கோவையில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சிதம்பரம் நெடுமாறனுக்கு (சரத்குமார்) ஒரு விபத்தின் காரணமாக `அல்சைமர்ஸ்’ எனப்படும் மறதி பாதிப்பு உண்டாகிறது. இன்னும் ஒரு வருடத்தில் அவரின் மொத்த நினைவுகளும் அழிந்துவிடும் என்ற நிலை. இதனிடையே அந்த நகரில் `ஸ்மைல் மேன்’ எனப்படும் சீரியல் கில்லரால் தொடர் கொலைகள் நடக்கின்றன. சி.பி.சி.ஐ.டி பிரிவுக்குப் புதிதாக வரும் அரவிந்த் (ஸ்ரீகுமார்), குற்றவாளியைப் பிடிப்பதற்காக இந்த வழக்கை இதற்கு முன்னர் கையாண்ட சிதம்பரம் நெடுமாறனிடம் உதவி கேட்கிறார். இருவரும் சேர்ந்து குற்றவாளியைக் … Read more

BB Tamil 8: 'இவ்வளவு நாள் தீபக் அண்ணா இந்த வீட்டில…' – பிக் பாஸ் வீட்டில் ஈரோடு மகேஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 82-வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதிக் கட்டத்தை இந்த நிகழ்ச்சி நெருங்கி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சௌந்தர்யாவைப் பார்க்க பிக் பஸ் விஷ்ணு வந்திருந்தார். சௌந்தர்யா … Read more

அலங்கு விமர்சனம்: டெக்னிக்கலாக மிரட்டும் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர், எமோஷனலாகவும் நெகிழச் செய்கிறதா?

கோவை மாவட்டம் ஆனைக்கட்டியின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் நாயகன் தர்மன் (குணாநிதி). நியாயத்துக்காக நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்டதற்காகத் தான் படிக்கும் பாலிடெக்னிக்கிலிருந்து சஸ்பெண்டு செய்யப்படுகிறார். நண்பர்களுடன் கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து வருபவரிடம் வந்து சேர்கிறது ஒரு பெண் நாய். Alangu Movie Review அதைப் பாசத்தோடு குடும்ப உறுப்பினராகக் கருதி வளர்க்கத் தொடங்குகிறார். மறுபுறம் கேரள மாவட்டம் அகழியில் அரசியல் செல்வாக்கு மிக்க மனிதராக வலம்வரும் செம்பன் வினோத்துக்கு தன் மகள் … Read more

Doctor Vikatan: சாட்டையடி, உண்ணாவிரதம்…. தன்னைத்தானே வருத்திக்கொள்வது எத்தகைய மனநிலை?

Doctor Vikatan: பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளும் கட்சியை எதிர்த்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட நிகழ்வை செய்திகளில் பார்த்தோம். சாட்டையால் அடித்துக்கொள்வது, உண்ணாவிரதம் இருப்பது என தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் இத்தகைய செயல்களை எப்படிப் பார்ப்பது… இதற்கெல்லாம் என்ன பின்னணி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் சுபா சார்லஸ் தன்னைத்தானே வருத்திக்கொள்கிற மனநிலை உலகெங்கிலும் பலராலும் போற்றப்படுகிறது. ‘நான் தண்டிக்கப்பட வேண்டும், நான் தண்டனையை அனுபவித்தால் மற்றவர்கள் நன்றாக இருப்பார்கள்’ என்ற எண்ணத்தின் அடிப்படை இது.  … Read more

திரு.மாணிக்கம் விமர்சனம்: நேர்மையான அந்தக் கதாபாத்திரத்துக்கு சல்யூட்… ஆனால் படத்துக்கு?

எளிய மனிதனின் நேர்மை படும் பாட்டையும், அதைக் காப்பதற்கான அவனின் போராட்டத்தையும் பேசுகிறார் இந்த ‘திரு.மாணிக்கம்’. கேரள மாநிலம் குமுளியில் லாட்டரி கடையோடு சிறிய புத்தகக் கடையும் நடத்திவரும் மாணிக்கம் (சமுத்திரக்கனி), தன் மனைவி (அனன்யா), இரண்டு மகள்கள், மனைவியின் தம்பி, மாமியார் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இரண்டாவது குழந்தைக்குப் பேச்சுத்திறன் சவால் இருப்பதால் அவருக்கான மருத்துவச் செலவு, கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான செலவு, மனைவியின் தம்பியை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான செலவு எனப் பல பொருளாதார … Read more