உள்கட்சி பூசல்; இருதரப்பு மோதல்… வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகி..!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகி ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நிர்வாகிகள் மோதல் தொடர்பாக கட்சியினர் சிலரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், ” மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் தச்சநேந்தலை சேர்ந்த சந்திரன். காவல்நிலையம் இவருக்கும் முன்னாள் ஒன்றிய செயலாளரான பூமிநாத் … Read more

டிஜிட்டல் கைது: நாயை வைத்து பாடம்புகட்டிய மும்பைவாசி… வெறுத்துப்போன மோசடி கும்பல்

சமீபகாலமாக மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த முறைகேட்டில் ஏராளமானோர் தங்களது வாழ்நாள் சேமிப்பு பணத்தை இழந்துள்ளனர். மும்பைவாசி ஒருவருக்கு அது போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் இந்த மோசடியில் இருந்து தப்பித்துக்கொண்டார். மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் ஜஸ்டீன் என்பவருக்கு மர்ம நபர் ஒருவர் வீடியோ கால் செய்து தான் … Read more

3-வது முறையாக பெண் குழந்தை… மனைவியை உயிரோடு எரித்துக்கொலை செய்த கொடூர கணவன்

ஆண், பெண் பாலின பாகுபாடு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும், மனைவி தொடர்ச்சியாக பெண் குழந்தை பெற்றால் அவர் மீது கணவன் கோபப்படுவது, வீட்டை விட்டு துரத்துவது போன்ற சம்பவங்களும் இன்றுவரை நடந்துகொண்டிருப்பது வேதனையானது. மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை கணவன் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளார். பர்பானி அருகில் உள்ள கங்காகேட் என்ற இடத்தில் வசிப்பவர் உத்தம் காலே(32). இவரது மனைவிக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் … Read more

South Korea: விமானம் விபத்து; 62 பேர் பலி… மீட்புப் பணிகள் தீவிரம்.. பதற வைக்கும் வீடியோ

தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் ஒன்று தரையிறங்ககும் சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்து வெடித்தச் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜேஜூ ஏர் நிறுவனத்தின் ‘2216’ வகை விமானம் ஒன்று, தாய்லாந்திலிருந்து கிளம்பி இன்று (டிச 29) காலை 9 மணி அளவில் தென் கொரியாவின் மூயான் (Muan) சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. நிற்காமல் ஓடுதளத்தில் சீறிப்பாய்ந்த அந்த விமானம், விமான நிலையத்தின் சுற்றுச் சுவரில் மோதி தீப்பற்றி வெடித்துள்ளது. இந்த விமானத்தில் 175 … Read more

Chennai Book Fair 2025: 900 அரங்குகள்; லட்சக்கணக்கான புத்தகங்கள்… குவிந்த வாசகர்கள்.. |Photo Album

Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair 2025 Chennai Book Fair … Read more

2024 Kovai Rewind: மேயர் ராஜினாமா, மோடி விசிட், அன்னபூர்ணா GST, அண்ணாமலை சாட்டையடி… |Photo Album

பிரசார களத்தில் மக்களுடன் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை – April 2024 கோவை தொகுதி தி.மு.க வேட்பாளரை வரவேற்க கிரேன் உதவியுடன் கொண்டு வரப்பட்ட மாலை – April 2024 தாய் பூசத்தை முன்னிட்டு கோவை மருதமலை கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன – January 2024 உலக யோகா தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் யோகாசனம் செய்த தமிழக கவர்னர் ரவி – June 2024 வரப்பாளையம் பகுதியில் இறந்த தாய் … Read more

வீடு புகுந்த முகமூடி திருடன்… 11 வயது மகனுடன் சேர்ந்து போராடி விரட்டியடித்த தாய்!

மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாத்திமா ஷேக்(32). காலை 11 மணிக்கு பாத்திமாவும், அவரது 11 வயது மகனும் வீட்டில் இருந்தனர். அந்நேரம் வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனே பாத்திமா சென்று கதவை திறந்தார். வெளியில் முகமூடி அணிந்தபடி நின்ற நபர் அதிரடியாக பாத்திமாவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். அதோடு வீட்டுக்கதவை உள்பக்கமாக அந்த நபர் பூட்டினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அமைதியாக இருக்கவில்லையெனில் கடும் விளைவு … Read more

”ரம்யாவுக்கு மாப்பிள்ளைதான் வரதட்சணை கொடுத்தார்; ஏன்னா..!”- ரம்யா பாண்டியன் அம்மா

திருமணம் முடிந்த பூரிப்போடு தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். ‘ஜோக்கர்’ மூலம் ரசிகர்களை அழ வைத்தவர். ‘ஆண் தேவதை’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தாலும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைக் குவித்தவர். ’குக் வித் கோமாளி’, ‘பிக் பாஸ்’ என சின்னத்திரையிலும் ரன்னர் – அப் ஆக கலக்கியவர். அடிக்கடி ஃபோட்டோ ஷூட்களால் வைரலாகும் ரம்யா பாண்டியனின் திருமணம் … Read more

“காங். எம்எல்ஏ-க்களே எதிராக பேசுவார்கள் என்ற பயத்தில் இப்படி செய்துள்ளனர்" -திமுகவை சாடும் தளவாய்

கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா வரும் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பிதழும் வெளியானது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை தொடர்ந்து 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அரசு அறிவித்ததால் விழா நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் எழுந்தது. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை இந்நிலையில், பெரிய ஆடம்பரம் இன்றி விழாவை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி … Read more

ஆன்லைனில் பீட்சா ஆர்டர்: டிப்ஸ் குறைவாக கொடுத்ததால் கத்தி குத்து, கொள்ளை… நடந்தது என்ன?

அமெரிக்காவின் புளோரிடாவில் ஆர்லாண்டோவின் தெற்கே உள்ள கிஸ்ஸிமியில் உள்ள ஒரு பெண், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். அங்கு தனது காதலன் மற்றும் அவர்களது ஐந்து வயது மகளுடன் சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் சாப்பிட ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்துள்ளனர். அவர்கள் ஆர்டர் செய்த பீட்சாவை, ப்ரியானா அல்வெலோ என்ற 22 வயதான இளம் பெண் டெலிவரி செய்துள்ளார். அப்போது, அந்தப் பெண் பிரியனா அல்வெலோவிற்கு 2 டாலர் டிப்ஸ் கொடுத்துள்ளார். … Read more