ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் கடைசி மகன் அலெக்ஸ் பாண்டியன் மாற்றுத்திறனாளி. அவரைத் தவிர மற்றவர்களுக்குத் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் அய்யாசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பிழைப்புக்காகப் பசுமாடு வளர்த்து தொழில் செய்துவந்தார் சுந்தராம்பாள். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல … Read more

Yugabharathi:“15 நிமிஷத்துல மொத்த பாடலையும் வடிவேலு பாடிட்டாரு'' – சுவாரஸ்யம் பகிரும் யுகபாரதி

கவிஞர் யுகபாரதியின் ‘மஹா பிடாரி’ புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுமைகள் பலரும் பங்கேற்று பேசினர். அந்த நிகழ்வின் காணொளிகள் தொடர்ந்து சினிமா விகடன் யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகிறது. இயக்குநர், நடிகர் சசிக்குமார் பேசுகையில், “யுகபாரதிகிட்ட இப்போ வரை நான் கேக்கனும்னு நினைச்ச கேள்வி, `என்னைய ஏன்யா புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூப்புடுறீங்க. எனக்கும் கவிதைக்கு என்னயா சம்பந்தம்?’. நான் புத்தகம் வாசிப்பேன் அவ்வளவு தான். அவரு தான் இந்தாங்க புத்தகம்னு சொல்லி ‘மஹா பிடாரி’யைக் கொடுத்தாரு. … Read more

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது… சிறையிலடைத்த போலீஸ்!

கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அதன் காரணமாக, கடந்த டிசம்பர் 3-ம் தேதி அமைச்சர் பொன்முடி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க இருவேல்பட்டு கிராமத்துக்கு நேரில் சென்றார். உடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, முன்னாள் … Read more

NEEK Review: இந்த நிலா வெளிச்சம் பாய்ச்சுகிறதா, மேகங்களிடையே மறைந்து ஏமாற்றுகிறதா?

காதல் தோல்வியால் திருமணம் செய்யாமலிருக்கும் பிரபுவை (பவிஷ் நாராயண்) கட்டாயப்படுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே சென்றால், அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வாரியர்) தான் அப்பெண் என்பது தெரிகிறது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளச் சிறிது காலம் வேண்டும் என்று டேட் செய்கிறார்கள். அந்நேரத்தில், முன்னாள் காதலி நிலாவிடமிருந்து (அனிகா சுரேந்தன்) கல்யாண பத்திரிக்கை வர, உடைகிறார் பிரபு. ‘நிலா – பிரபு காதலில் என்னதான் ஆச்சு’ என்பதை … Read more

`சிறகடிக்க ஆசை தமிழில் மட்டுமல்ல; இந்தியிலும்..!' – FICCI கருத்தரங்கில் விகடன் மேலாண் இயக்குநர்

சென்னையில் நடந்து வரும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கில் ‘பவர் ஆஃப் டிவி இன்‌ சவுத்’ என்ற தலைப்பில் விகடன்‌ குழும மேலாண் இயக்குநர் சீனிவாசன், ஜியோ ஸ்டார் தெற்கு மண்டல தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட பலர் பேசினர். விகடன் மேலாண் இயக்குநர் சீனிவாசன், “தொலைகாட்சி துறையில் கதை சொல்லல் என்பது மிக மிக முக்கியம். தென்னிந்திய தொலைகாட்சி பழைமைவாதத்தை கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் … Read more

Amaran 100 : “ `நல்லப் படம் இல்லைனு தெரிஞ்சும் பண்றியா'னு எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை!" – கமல்ஹாசன்

கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நிரைப்படம் `அமரன்’. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. சமீபத்தில் இப்படத்தின் 100-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் படக்குழுவினருடன் நடந்தது. அதில் பேசிய கமல்ஹாசன், ” `நீங்கள் எப்படி இந்தப் படத்தை ஒத்துக்கிட்டீங்கனு கேட்டால் பேசன் (PASSION) தான் காரணம். ஒரு சினிமா ரசிகனின் உண்மையான அடையாளம் ஒரு கதையைப் பார்க்கும்போது ‘இது சினிமாவாக வந்தா எப்படி இருக்கும்’னு … Read more

20 ஆண்டுகள்… ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளனர். மநகராட்சி நிர்வாகம் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை கேட்டும் சொத்து வரி செலுத்தவில்லை. இதையடுத்து, கடந்த சில நாட்களாக மாநகராட்சி அலுவலர்கள் வணிக வளாக நிர்வாகத்திடம், 20 ஆண்டுகளாக செலுத்த வேண்டிய … Read more

`திராவிடர் கழகப் பெண்ணுக்கும், பாஜக ஐ.டி விங் பையனுக்குமான காதல் கதை அது!' – தியாகராஜன் குமாராராஜா

யுகபாரதி எழுதிய `மஹா பிடாரி’ என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரும் பங்கேற்று உரையாற்றினர். நூல் வெளியீட்டு விழாவின் காணொளிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சினிமா விகடன் யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகிறது. தியாகராஜன் குமாரராஜா யுகபாரதி குறித்து கூறுகையில், “மாடர்ன் லவ் சீரிஸ்க்கு பாடல்கள் எழுதலாம் என்று முடிவு செய்தப் பிறகு யாரிடம் கேட்கலாம் என்று என்னுடைய நண்பர் ராஜு முருகனிடம் கேட்டேன். ராஜூ முருகனுக்கு யுகபாரதி சிறு வயதில் … Read more

“20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால்…" – மநீம 8-வது ஆண்டில் மனம் திறந்த கமல்ஹாசன்

தமிழக அரசியல் வரலாற்றில் இருபெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர், 2018 பிப்ரவரி 21-ம் தேதி `மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். மாற்று என்று கூறி 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக மீது கடும் விமர்சனங்களோடு தனித்துக் களமிறங்கிய கமல்ஹாசன், கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ராஜ்ய சபா எம்.பி சீட் ஒப்பந்தத்தோடு திமுக கூட்டணியில் ஐக்கியமானார். கமல்ஹாசன் இவ்வாறான கடந்த வந்த பாதைகளோடு, … Read more

Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா…' அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்'?

தன் வாழ்க்கையின் நலனுக்காக எந்தத் தவற்றையும் செய்யத் துணியும் இளைஞன், அதன் விளைவுகளை உணரும் கமெர்ஷியல் பயணமே இந்த ‘டிராகன்’. 48 அரியர்களுடன் கல்லூரியில் கெத்தாகத் திரிந்த ‘டி. ராகவன்’ என்கிற ‘டிராகன்’ (பிரதீப் ரங்கநாதன்), கல்லூரிக்குப் பின் பித்தலாட்டங்கள் செய்து, தான் வேலைக்குப் போவதாகப் பெற்றோரை நம்ப வைக்கிறார். இதனால், அவரின் காதலி கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்) ப்ரேக் அப் செய்து விட, உடைந்து போன டிராகன், குறுக்கு வழியில் வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறார். … Read more