Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா…' அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்'?

தன் வாழ்க்கையின் நலனுக்காக எந்தத் தவற்றையும் செய்யத் துணியும் இளைஞன், அதன் விளைவுகளை உணரும் கமெர்ஷியல் பயணமே இந்த ‘டிராகன்’. 48 அரியர்களுடன் கல்லூரியில் கெத்தாகத் திரிந்த ‘டி. ராகவன்’ என்கிற ‘டிராகன்’ (பிரதீப் ரங்கநாதன்), கல்லூரிக்குப் பின் பித்தலாட்டங்கள் செய்து, தான் வேலைக்குப் போவதாகப் பெற்றோரை நம்ப வைக்கிறார். இதனால், அவரின் காதலி கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்) ப்ரேக் அப் செய்து விட, உடைந்து போன டிராகன், குறுக்கு வழியில் வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறார். … Read more

'StartUp' சாகசம் 12 : ஈரோட்டில் இன்ஃப்ளுயன்சர் மார்க்கெட்டிங் செய்து அசத்தும் இளைஞர்!

இன்சர் டெக்னோவேஷன் பிரைவேட் லிமிடெட்‘StartUp’ சாகசம் 12 இன்றைய டிஜிட்டல் யுகத்தில் விளம்பரத்துறை, புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. பாரம்பரிய விளம்பர முறைகளில் இருந்து சமூக ஊடகத்திற்கு வந்து, அங்கிருந்து இப்போது புதிய சமூக ஊடக செல்வாக்குமிக்கவர் (இன்ஃப்ளுயன்சர்கள்) மூலம் விளம்பரம் செய்யும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் வணிக கவனிப்பாளர் சந்தை ₹1,200 கோடி மதிப்பை எட்டியுள்ளது, 2030-ல் 3,300 கோடி சந்தை மதிப்பை சமூக ஊடக செல்வாக்குமிக்கவர்கள் வழியே … Read more

Dragon: எக்ஸ்க்ளூசிவ் தகவல் சொன்ன அஷ்வத் மாரிமுத்து; மகிழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் இன்று (பிப்ரவரி 21) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. `லவ் டுடே’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை `ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். அனுபமா , கயது லோகர் , மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். டிராகன் இந்நிலையில் ‘டிராகன்’ பட … Read more

USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? – Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அரசும் மோடி ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.கவும் பிரதமர் மோடியும் மற்றும் இன்னபிற பா.ஜ.கக்காரர்களுமே அமெரிக்காவின் USAID அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக Fact Checker கள் சில ஆதாரங்களை எடுத்து வைத்திருக்கின்றனர். Modi Trump 1960 களில் ஜான்.எஃப். கென்னடி அதிபராக இருந்த சமயத்தில் United … Read more

FICCI : 'இருவரையும் இந்த விஷயத்தில் மன்னிக்க மாட்டேன்' – கமல், த்ரிஷா `Fireside Chat'

கலந்துகொண்ட ‘ஃபயர்சைட் சாட்’கமல்ஹாசன், த்ரிஷா சென்னையில் இன்று மற்றும் நாளை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, ‘மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு’ என்ற கருத்தரங்கை நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக திரை நட்சத்திரங்கள் கமல்ஹாசன், த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்ட ‘ஃபயர்சைட் சாட்’ நிகழ்ச்சி நடந்தது. நடிகர் கமல்ஹாசன் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, “இப்போது இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம். தொழில்நுட்பம் தாமதமானதால் அதன் விளைவுகளும் தாமதாமகிறது. ஓ.டி.டி 2012-ம் ஆண்டே … Read more

FICCI கருத்தரங்கு மேடையில் கமல் வைத்த கோரிக்கை… `விரைவில் எதிர்பார்க்கலாம்' – உதயநிதி சொன்ன பதில்

FICCI‘மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு’ சென்னையில் இன்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI), ‘மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு’ நடத்தி வருகிறது. இரண்டு நாள்கள் நடக்கும் இந்த கருத்தரங்கு நாளையும் தொடரும். இந்தக் கருத்தரங்கத்தின் மையமே ‘ரீஜினல் டு குளோபல்’ என்பதாகும். அதாவது, மீடியாத்துறையில் கலாசாரங்கள் மற்றும் மண்டல தொழிற்சாலைகளை ஒன்றிணைத்தல் ஆகும். இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், துணை முதலமைச்சர் … Read more

NEEK : 'கீர்த்தி சுரேஷ் டு மாரி செல்வராஜ்' – தனுஷ் இயக்கியிருக்கும் 'NEEK' பற்றி என்ன சொல்கிறார்கள்?

நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து ‘ராயன்’ படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஜி.பி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ‘NEEK’ படம் குறித்து பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவரும் … Read more

“14 வருஷம் ஆயிருச்சு, ஆனா இன்னும்…'' – தந்தை மலேசியா வாசுதேவன் குறித்து யுகேந்திரன் உருக்கம்

தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் மலேசியா வாசுதேவன். ‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ எனப் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார் இந்த மலேசியா வாசுதேவன். அதன் பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துங்கள் பாடுங்கள்’ என்ற பாடலும் அவரை எட்டா உயரத்துக்கு அழைத்துச் சென்றது. ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய இவர் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி இறந்தார்.  மலேசியா … Read more

கும்பமேளா: வாரணாசியில் நடந்தது என்ன? – சென்னை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரர்கள் விளக்கம்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாரணாசி சென்றிருந்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள், போட்டியை முடித்துவிட்டு கும்பமேளா நெரிசலால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்திருந்தனர். இந்நிலையில் அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு தமிழ்நாடு அரசு அழைத்து வந்திருக்கிறது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வீரர் ஒருவர், “ 16,17,18 ஆம் தேதி வாரணாசியில் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் சென்றிருந்தோம். அதேபோல கர்நாடக, கேரளா, ஆந்திராவில் இருந்தும் வீரர்கள் வந்திருந்தனர். … Read more