“14 வருஷம் ஆயிருச்சு, ஆனா இன்னும்…'' – தந்தை மலேசியா வாசுதேவன் குறித்து யுகேந்திரன் உருக்கம்

தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் மலேசியா வாசுதேவன். ‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ எனப் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார் இந்த மலேசியா வாசுதேவன். அதன் பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துங்கள் பாடுங்கள்’ என்ற பாடலும் அவரை எட்டா உயரத்துக்கு அழைத்துச் சென்றது. ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய இவர் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி இறந்தார்.  மலேசியா … Read more

கும்பமேளா: வாரணாசியில் நடந்தது என்ன? – சென்னை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரர்கள் விளக்கம்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாரணாசி சென்றிருந்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள், போட்டியை முடித்துவிட்டு கும்பமேளா நெரிசலால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்திருந்தனர். இந்நிலையில் அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு தமிழ்நாடு அரசு அழைத்து வந்திருக்கிறது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வீரர் ஒருவர், “ 16,17,18 ஆம் தேதி வாரணாசியில் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் சென்றிருந்தோம். அதேபோல கர்நாடக, கேரளா, ஆந்திராவில் இருந்தும் வீரர்கள் வந்திருந்தனர். … Read more

What to watch on Theatre: NEEK, Dragon, Get-Set Baby -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Dragon (தமிழ்) Dragon பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், யூடியூப் பிரபலங்களான வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காலேஜில் ஜாலியாக, கெத்தாக சுற்றித் திரியும் இளைஞர் வாழ்க்கையின் காதல், பிரேக் அப், கரியர், குடும்பத்தின் நிலை பற்றி ஜாலியாகப் பேசியிருக்கிறது இப்படம். … Read more

Thaman: “பெண்கள் சுதந்திரமாக இருப்பதால் திருமணம் கடினமாகிவிட்டது'' – தமன் பேசியது என்ன?

இசையமைப்பாளர் தமன் திருமணம் குறித்த தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 41 வயது நபரான தமன், சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பெண்கள் தற்போது சுதந்திரமாக இருக்க போராடுவதனால் ஆண்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “பெண்கள் சமூகத்தை” நாம் இழந்து வருவதாகவும் எப்படி பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன என்றும், இன்றைய சமூகத்தில் ஓர் உறவைப் பாதுகாப்பது கடினமானதாக மாறிவிட்டதாகவும் பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இவரது கருத்து விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. தமன் Amaran … Read more

Amaran 100: “கொட்டுக்காளி படத்தின் மூலமாக கமல் சாரின் அன்பை சம்பாதிச்சிருக்கேன்!'' – எஸ்.கே!

சிவகார்த்திகேயன் நடிப்பில் `அமரன்’ திரைப்படம் கடந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. `அமரன்’ திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கு நினைவுப் பரிசு ஒன்றும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்தப் படத்தை பண்ணுவதற்கு அனுமதிக் கொடுத்த முகுந்த் வரதராஜன் அவர்களின் குடும்பத்துக்கு நன்றி. 100 சதவீதம் அவராக என்னை பார்த்திருக்கமாட்டீங்க. அந்த இடத்துல என்னுடைய அப்பாவை நான் பார்த்திருக்கேன். அதுனாலதான் அந்தக் … Read more

UP: “ஆங்கிலம் அதிகாரத்தை அடையும் ஆயுதம்'' – மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கில மொழியின் மதிப்பையும் எடுத்துரைத்தார். “நீங்கள் இந்த மொழியைக் கற்றுக்கொண்டால், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.” என்றார். ஆர்.எஸ்.எஸை குறிவைக்கும் விதமாக, “மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ் தலைவர்) இந்தியில் பேசுங்கள் எனக் கூறுவார், ஆனால் ஆர்.எஸ்.எஸ், பாஜக பிரமுகர்களின் குழந்தைகள் ஆங்கில வழி பள்ளிகளில் படிப்பார்கள், மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வார்கள்” என்று பேசினார். ராகுல் காந்தி … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை – உடல்நிலை குறித்து வழக்கறிஞர் அறிக்கை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு, மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருவதாக பானுவின் உடல்நிலை குறித்து அவரின் வழக்கறிஞரான வந்தனா ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வழக்கறிஞர் வந்தனா ஷா சாய்ராவின் உடல்நிலை குறித்து பகிர்ந்த குறிப்பில், “சில நாள்களுக்கு முன், திருமதி சாய்ராவின் மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சவாலான நேரத்தில், அவரது … Read more

Parthiban: “பஜ்ஜி, தேநீர் ருசித்துக்கொண்டே விஜய்யுடன் உரையாடும் கனவு..!'' – பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் அவ்வபோது சமூக வலைதளப் பக்கங்களி்ல் பல பதிவுகளை பதிவிட்டு வருவார். பழைய நினைவுகளைப் பகிர்வது, நய்யாண்டி பதிவுகளை போடுவது என எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருவார் பார்த்திபன். அப்படி அவருக்கு விஜய்யுடன் உரையாடுவது போன்ற ஒரு கனவு வந்தது என அது குறித்து ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். பார்த்திபன் அந்தப் பதிவில் அவர், “நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , … Read more

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் – 2024… மகத்தான சாதனையாளர்களுக்கு மகுடம்..!

ஒரு நாடு முன்னேற்றம் அடைய ஆணிவேராக இருப்பது ‘பொருளாதாரம்.’ ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக பொருளாதார வளர்ச்சி இலக்குகளை வைத்து பயணித்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு என்பதைக் குறிக்கோளாக வைத்து செயல்பட்டுவருகிறது. பல தொழில்முனைவோர்களை உருவாக்கி, தொழில் துறையில் ஆழமாகத் தடம் பதிப்பதன் மூலம்தான் இந்தக் குறிக்கோளை வெற்றிகரமாக அடைய முடியும். அந்த வகையில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு, விடாமுயற்சியுடன் மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கி … Read more

Fire: `அபராதத்தை நானே கட்டுறேன்!' ரசிகர்களுக்காக போலீஸிடம் மன்னிப்பு கேட்ட பாலாஜி முருகதாஸ்

ஃபயர் படம் குறித்து சாலையில் சென்ற ரசிகர்கள் இருவர் சொன்ன ரிவியூவை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அந்த படத்தின் நடிகர் பாலாஜி முருகதாஸ். இந்த வீடியோ வைரலானதையடுத்து சென்னை போலீஸ் அந்த இருவருக்கும் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார். பிக் பாஸ் தமிழ் நான்காவது சீசனில் ரன்னரப்பாக வந்தவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள ஃபயர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. தனக்கு இந்த படத்தில் … Read more