10 ஆண்டுகளில் 31 கொலைகள்; பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடா இந்தியா? புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?

2015 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 24, 2024 வரை உலகம் முழுவதும் 757 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர்களுக்கான பாதுகாவலர் குழு (Committee to Protect Journalists – CPJ) கூறியுள்ளது. CPJ அறிக்கையின் படி, 2024ல் மட்டும் 98 பத்திரிகையாளர்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 2015 ஆம் ஆண்டு 100 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2023, 24 ஆம் ஆண்டுகளில் 98 பேர் கொல்லப்பட்டனர் (பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியளாலர்கள்). Data Chart குறிவைக்கப்படும் பாலஸ்தீன் பத்திரிகையாளர்கள்! 2024 … Read more

"கேரளா ஒரு மினி பாகிஸ்தான்; ராகுலுக்குத் தீவிரவாதிகள் வாக்களித்தனர்…" – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

மகாராஷ்டிராவில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் பா.ஜ.கவைச் சேர்ந்த நிதேஷ் ரானே. முதல் முறையாக அமைச்சராகி இருக்கும் நிதேஷ் ரானே சமீப காலமாக இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வருகிறார். பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகனான நிதேஷ் ரானே, புனே அருகில் உள்ள சஸ்வாட் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். அப்சல் கானை சத்ரபதி சிவாஜி மகாராஜ் தோற்கடித்த தினத்தைக் … Read more

96 Part 2 : தயாராகிறதா `96' திரைப்படத்தின் இரண்டாம் பாகம்? – இயக்குநர் கொடுத்த அப்டேட்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு `96′ திரைப்படம் வெளியாகியிருந்தது. `பசங்க’, `சுந்தரபாண்டியன்’ போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் `96′ திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார். 90ஸ்கிட்ஸ், 2கே கிட்ஸ் என பலருக்கும் இத்திரைப்படம் அப்படியொரு ஃபேவரிட். அதுமட்டுமல்ல, பலருடைய பள்ளிப் பருவ நாஸ்டால்ஜிய பக்கங்களையும் இத்திரைப்படம் புரட்டியது. இத்திரைப்படத்தை சர்வானந்த், சமந்தாவை வைத்து தெலுங்கிலும் ரீமேக் செய்தார் பிரேம் குமார். `96′ திரைப்படத்திற்குப் பிறகு இந்தாண்டு இவர் இயக்கத்தில் `மெய்யழகன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. … Read more

புதுமைப் பெண் : `ஒரு பெண் கல்வியில் நுழைந்தால் அது சமூகப் புரட்சி..!’ – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, தற்போது உயர்கல்வி கற்றுக் கொண்டிருக்கும்  மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், “தமிழகத்தில் ”புதுமைப்பெண்”  திட்டத்தின் கீழ் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். அத்திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயிலும் … Read more

சிம்ம ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

சிம்மத்தில் பிறந்த நீங்கள், தன்னம்பிக்கை மிகுந்தவர். முன் வைத்தக் காலைப் பின்வைக்காமல் வெற்றிகரமாக காரியஜெயம் காண்பதில் வல்லவர் நீங்கள். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் –  25 குறிப்புகள் இங்கே!  1. உங்கள் ராசிக்கு சந்திரன் 5-ம் வீட்டில் நிற்கும்போது, 2025 புத்தாண்டு பிறக்கிறது. அடிப்படை வசதி – வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள். புதிய சிந்தனைகள் உதயமாகும். 2. வருங்காலத் திட்டங்கள் பலவும் … Read more

Thalapathy 69 : கட்சிப் பணி; படப்பிடிப்பு… விறுவிறு `விஜய்’ – புத்தாண்டில் காத்திருக்கும் அப்டேட்!

விஜய்யின் ‘தளபதி 69’ படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் புத்தாண்டில் இப்படம் குறித்த அசத்தலான அப்டேட் ஒன்றும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் விஜய்யின் கட்சி மாநாடு நடந்தது. அந்த மாநாடு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, இன்னொரு பக்கம் எளிமையான முறையில் அவரின் கடைசி படமான ‘தளபதி 69’ படப்பிடிப்பையும் தொடங்கி விட்டார் விஜய். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அஜித்தின் கூட்டணியில் மூன்று படங்களை இயக்கிய … Read more

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், நீண்ட காலமாகச் சிறப்பிற்கும் மற்றும் கைவினைத் திறமைக்குமான அடையாளமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் அளிக்கும் உறுதிப்பாடில் பல தலைமுறைகளாக, தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரத்தினக் கற்கள் வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஜிஆர்டியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு 60 ஆண்டுகால அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் மூலம், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் நகைத்துறையின் முன்னணி நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் பாரம்பரியம் … Read more

Yashasvi Jaiswal: “ஜெய்ஸ்வால் ஏமாற்றப்பட்டாரா?"- விவாதத்தைக் கிளப்பிய மூன்றாவது நடுவரின் முடிவு

பார்டர் கவாஸ்கர் தொடரின் மெல்பர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. இந்திய அணியைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். அவருக்கு மூன்றாவது நடுவர் தவறாக அவுட் வழங்கிவிட்டாரென சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. Jaiswal சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீசிய 71 வது ஓவரின் 5 வது பந்தில் அவுட் ஆகியிருந்தார். பந்து எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனதற்காக ஆஸ்திரேலிய அணி களநடுவரிடம் … Read more

Shruti Haasan: “கடவுள் நம்பிக்கைதான் என் பலம்… அதை நானே கண்டடைந்தேன்" – நடிகை ஸ்ருதிஹாசன் பேட்டி

பாடகர், இசையமைப்பாளர், நடிகை, மாடல் எனப் பலத் துறைகளில் பிஸியாக இருக்கிறார் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்பதத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் உங்களை வலிமையாக்கியது எது? எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த நடிகை ஸ்ருதிஹாசன் “என்னுடைய மிகப் பெரிய வலிமை கடவுள் நம்பிக்கைதான். என் பக்தி என்னுடைய பெற்றோரிடமிருந்து கிடைத்ததல்ல. ஸ்ருதிஹாசன் அது என்னுள் … Read more

Kerala: 18 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த காங். எம்எல்ஏ உமா தாமஸ்… ஆபத்தான நிலையில் சிகிச்சை

கேரள மாநிலம் கொச்சி கலூரில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடிகை திவ்யா உண்ணி தலைமையில் 12,000 நடன மங்கையர் கலந்துகொண்ட பரதநாட்டியம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கேரள கலாச்சார துறை அமைச்சர் சஜி செறியான் மற்றும் திருக்காக்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ உமா தாமஸ் உள்பட பலரும் கலந்துகொண்டனர். 18 அடி உயரமுள்ள கேலரியில் இருந்து மேடைக்குச் செல்லும்போது திடீரென உமா தாமஸ் எம்.எல்.ஏ தவறி கீழே விழுந்தார். பலத்த … Read more