`தனுஷ் சார் சொன்ன மாதிரி, ஜாலியா வாங்க ஜாலியா போங்க' – 'NEEK' படத்தை பாராட்டிய தமிழரசன் பச்சமுத்து

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். தவிர மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இந்நிலையில் … Read more

Champions Trophy: அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஹர்ஷித் ராணா – ரசிகர்கள் அதிருப்தி ஏன்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கான முதல் போட்டி தொடங்கியிருக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேர் கொண்ட அணி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் தேர்வுக்குழுவை விமர்சித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய அணி, அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை அணியில் எடுத்ததுதான். ஹர்ஷித் ராணாவைவிட அனுபவம் வாய்ந்த வீரரான அர்ஷ்தீப் சிங் அமரவைக்கப்பட்டுள்ளார். கடந்த சில போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டிருந்த முகமது ஷமி, பிளேயிங் லெவனுக்குத் திரும்பியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான … Read more

Shankar : இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை – நடவடிக்கையின் பின்னணி என்ன?

2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகி, அதிக வசூலையும் குவித்தப் படம் ‘எந்திரன்’. இந்த ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை காப்புரிமை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் தற்போது அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ED, Chennai has provisionally attached 3 immovable properties registered … Read more

Champions Trophy: முதல் ஆட்டத்திலேயே காயம்… தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அதிரடி வீரர்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியே நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கும், முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் வில் யங், டாம் லதம் ஆகியோர் சதமடித்திருந்தனர். ஃபக்கர் ஜமான் அதைத் தொடர்ந்து, 321 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48-வது ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி, … Read more

NEEK : `கண்ணில் கனவோடு காத்துட்டு இருக்காங்க; படம் ஜாலியாக இருக்கும்..' – இயக்குநர் தனுஷ் நெகிழ்ச்சி

நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து ‘ராயன்’ படத்தை இயக்கியிருந்தார். தனது இயக்கத்தில் மூன்றாவது படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தற்போது இப்படம் தியேட்டர் ரிலீஸ்க்குத் தயாராகி, நாளை (பிப் 21) வெளியாகிறது. இப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஜி.பி.பிரகாஷ் … Read more

Social Justice Day: சர்வதேச சமூக நீதி தினம் – `சமூக நீதி'யின் முக்கியத்துவமும் தேவையும்!

பிப்ரவரி 20ம் தேதி அன்று, ஐக்கிய நாடுகள் சபையால் உலகம் முழுவதும் ‘உலக சமூக நீதி தினம்’ கொண்டாடப்படுகிறது. சமூகங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்குதல், பழங்குடி மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை உறுதியாக பாதுகாத்தல், வறுமையை ஒழிப்பது, மற்றும் வேலையில்லாமல் தவிப்போருக்கு உதவுவது போன்ற இலக்குகளை மையமாக கொண்டு, ஆண்டுதோறும் இத்தினத்தை ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடி வருகிறது. உலகம் முழுவதும் நடைபெறும் சமூக அநீதிகளைக் கருத்தில் கொண்டு, இத்தினத்தில் நீதியை நிலைநாட்ட … Read more

Hey Ram: சம்பளம் வாங்காத ஹீரோ; கருப்பு வெள்ளை குறியீடு… இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா?

`ஹே ராம்’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இன்று வரை காந்தியைப் பற்றிய பல சீரிஸ் மற்றும் திரைப்படம் எடுப்பவர்களுக்கு முதல் இன்ஸ்பிரேஷனே `ஹே ராம்’ திரைப்படம்தான். ரஜினி தொடங்கி மணிகண்டன் வரை அனைத்து தலைமுறை நடிகர்களுக்குள்ளும் ஒரு ஆழமான தாக்கத்தை இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. அத்திரைப்படம் தொடர்பான சுவாரஸ்யமான சில தகவல்களை இங்கே பார்க்கலாம். * காந்தியின் சுயசரிதை நூலின் தலைப்பான `சத்ய சோதனை’ என்கிற பெயரைத்தான் `ஹே ராம்’ படத்திற்கு முதலில் தலைப்பாக … Read more

செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என செஞ்சி பேருந்து நிலையத்துக்கு வரும் பெரும்பாலானோர் கட்டண கழிவறையையே பயன்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர். செஞ்சியில் மிகப் பிரபல சுற்றுலா தளமான செஞ்சி கோட்டை அமைந்துள்ளது. செஞ்சி கோட்டையைப் பார்வையிடுவதற்கு இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பல … Read more

Dragon: `ப்ளாக்பஸ்டர்!' – சிம்புவின் `டிராகன்' பட விமர்சன பதிவு!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. `லவ் டுடே’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை `ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். அனுபாமா பரம்ஸ்வரன், கயது லோகர் , மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். டிராகன் `டிராகன்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தில் … Read more

`விஜய் ஒன்றிய அரசு அனுமதியுடன் பள்ளி நடத்துகிறார்; அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்' – உதயநிதி காட்டம்!

‘மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்’ என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது. இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க வேண்டும் என்றும் ‘தி.மு.க’ மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இனி மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் ‘Go back Modi’ என்று சொல்லமாட்டோம், ‘Get Out Modi’ என்று சொல்வோம்” என்று காட்டமாகப் பேசியிருந்தார். … Read more