கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு திரும்பிய +2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை… குமரியில் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஒரு பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த 25-ம் தேதி உடற்பயிற்சி ஆசிரியர் கைப்பந்து போட்டியில் கலந்துகொள்ள திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் 26-ம் தேதி இரவு 9-மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு திரும்பி வந்துள்ளனர். மற்ற மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். … Read more

2024 Rewind: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ்… கவனிக்க வைத்த நடிகர்கள்… ஒரு ரீவைண்ட்!

Vijay Sethupathi Dhanush Soori Dinesh Sivakarthikeyan Siddharth Dushara Vijayan Priya Bhavani Shankar Ashok Selvan RJ Balaji Santhanam Keerthy Suresh Jayam Ravi Vaazhai Vijay Antony Hiohop Tamizha Aadhi Sasikumar Source link

`பாராட்டுகள்' அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை! – காரணம் என்ன?!

கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவிற்கு உள்ளானது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். பலரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர், ‘யார் அந்த சார்?’ என்ற‌ பதாகைகள் ஏந்தி அண்ணா பல்கலைக்கழக … Read more

நீரதிகாரம்: ஹலோ ஃஎப்.எம். வழங்கும் கிரீடம் விருதினை வென்ற 'நீரதிகாரம்' நாவல்

விகடன் பிரசுரமாக வெளியான `நீரதிகாரம்’ தமிழ் நாவல் தொடராக விகடனில் வெளிவந்த போதே வாசகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று பாராட்டுகளைக் குவித்தது. பென்னி குயிக் கட்டிய ‘முல்லைப் பெரியாறு’ அணை கட்டப்பட்ட வரலாறு, மதுரையின் தாது வருடப் பஞ்சத்தால் மக்கள் மடிந்த துயரம் உள்ளிட்டவற்றைப் பல தரவுகளுடன் ஆவணப்படுத்தியிருக்கிறது இந்நாவல். இந்த பெரும் வரலாற்றுப் பணியை செங்கோட்டை, கம்பம் என ஆரம்பித்து லண்டன் வரை சென்று தரவுகள் திரட்டி ஆவணப்படுத்தியிருக்கிறார் இதன் ஆசிரியர் அ.வெண்ணிலா. இந்நாவலில் ‘முல்லைப் பெரியாறு’ … Read more

Indonesia: நீல நிற கண்களுடன் பிறக்கும் பட்டன் பழங்குடியினர்… அறிவியல் காரணம் என்ன?

Indonesia: உலகம் முழுவதிலும் உள்ள காடுகளிலும் மலைகளிலும் கடலோரங்களிலும் இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்கள் உள்ளனர். ஒவ்வொரு பழங்குடி மக்களும் அவர்கள் வாழும் சூழலைப் பொருத்து வித்தியாசமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பர். பல்லாயிரம் ஆண்டுகலாக ஒரே மாதிரியான வாழ்க்கைமுறையை பின்பற்றும் சில பழங்குடியினர் தனித்துவமாக உடலமைப்பைப் பெற்றிருக்கின்றனர். அப்படி இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலாவெசி பிராந்தியத்தில் வசிக்கும் பட்டன் பழங்குடி மக்கள் தனித்துவமான நீல நிறக் கண்களைப் பெற்றிருக்கின்றனர். பொதுவாக மனிதர்களின் கருவிழி எனப்படும் ஐரிஸின் நிறம் … Read more

இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை ஏன் இல்லை…? – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன விளக்கம்!

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு! தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் அழகு மீனா ஆகியோர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கருத்தரங்கு நடைபெற உள்ள மேடையை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாளை மாலை முதல்வர் திருவள்ளுவர் சிலை – சுவாமி விவேகானந்தர் நினைவு பாறைக்கு இடையேயான கண்ணாடி பாலத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். பின்னர் விழா அரங்கில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். நாளை மறுநாள் காலை முதல்வர் உரையாற்றுகிறார். … Read more

2024 Online Shopping: சிப்ஸ், கூல்ட்ரிங்க்ஸ், ஆணுறை… ஆன்லைனில் அதிகம் விற்ற பொருள்கள்..!

உணவு மட்டுமல்லாமல் வீட்டுத் தேவைக்கான அனைத்து பொருள்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பழக்கம் பெருகிவிட்டது. செப்டோ, ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிளின்க் இட் போன்ற தளங்கள் இதற்காக செயல்படுகின்றன. இந்த தளங்களில் இந்த ஆண்டு முழுவதும் எந்தெந்த பொருள்களை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறித்த தரவுகள் வெளியாகியிருக்கின்றன. பிளின்க் இட்டில் 1.75 கோடி மேகி, சொமேட்டோவில் 12 லட்சம் மேகி மசாலா, ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டில் 2.7 லட்சம் டூத் பிரஷ்கள் என நாடுமுழுவதும் பெரிய அளவில் … Read more

UP: வகுப்பில் ஆபாச வீடியோ பார்த்த ஆசிரியர்… சிரித்த மாணவர்களை ஆத்திரத்தில் தாக்கியதால் கைது

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஆபாச வீடியோ பார்த்த ஆசிரியர் குல்தீப் யாதவ், 8 வயது மாணவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர் குல்தீப் யாதவ் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோ பார்த்ததை மாணவர்கள் கவனித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட மாணவர்கள் சிரித்துள்ளனர். இதனால் அவமானத்தில் ஆத்திரமடைந்த ஆசிரியர் 8 வயது மாணவனை அடித்து உடலில் காயங்களை ஏற்படுத்தியுள்ளார். ஆபாச படங்கள் அந்தச் சிறுவனின் தந்தை ஜெய் பிரகாஷ், இந்தச் சம்பவம் குறித்து … Read more

உள்கட்சி பூசல்; இருதரப்பு மோதல்… வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகி..!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகி ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நிர்வாகிகள் மோதல் தொடர்பாக கட்சியினர் சிலரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், ” மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் தச்சநேந்தலை சேர்ந்த சந்திரன். காவல்நிலையம் இவருக்கும் முன்னாள் ஒன்றிய செயலாளரான பூமிநாத் … Read more

டிஜிட்டல் கைது: நாயை வைத்து பாடம்புகட்டிய மும்பைவாசி… வெறுத்துப்போன மோசடி கும்பல்

சமீபகாலமாக மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த முறைகேட்டில் ஏராளமானோர் தங்களது வாழ்நாள் சேமிப்பு பணத்தை இழந்துள்ளனர். மும்பைவாசி ஒருவருக்கு அது போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் இந்த மோசடியில் இருந்து தப்பித்துக்கொண்டார். மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் ஜஸ்டீன் என்பவருக்கு மர்ம நபர் ஒருவர் வீடியோ கால் செய்து தான் … Read more