விகடன்
மூணாறு: சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சோகம்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவியர், கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நாகர்கோவிலில் இருந்து கேரளா பதிவெண் கொண்ட டூரிஸ்ட் பஸ்ஸில் சுற்றுலா சென்றுள்ளனர். மாணவ, மாணவியர் உட்பட 42 பேர் பஸ்ஸில் சுற்றுலா சென்றனர். திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கொல்லத்துக்குச் சென்றுவிட்டு இன்று காலை 7 மணியளவில் மூணாறு சென்றனர். அங்கிருந்து குண்டள அணைக்கட்டுக்கு செல்லும்போது மதியம் 2 மணி அளவில் மாட்டுப்பட்டி அருகே … Read more
டெல்லிக்கு மீண்டும் பெண் முதல்வர்: முதல்முறையாக வெற்றி பெற்ற ரேகா குப்தா நாளை முதல்வராக பதவியேற்பு!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாட்கள் ஆன நிலையில் புதிய முதல்வர் பதவியேற்பது தாமதமாகிக்கொண்டிருந்தது. பிரதமரின் வெளிநாட்டுப்பயணத்தை தொடர்ந்து இத்தாமதம் ஏற்பட்டது. நேற்று பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் டெல்லி பா.ஜ.க சட்டமன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் … Read more
Hey Ram: `அவமானமாகிடும்னு சொல்லி அழுதேன்; ஆனா கமல்ஹாசன் கேட்கலை…'- நவாசுதீன் சித்திக் ஓப்பன் டாக்
கடந்த 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஹே ராம்’. இந்தப் படத்தில் கமல், ஷாருக் கான், ஹேமா மாலினி, ஸ்ருதி ஹாசன், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக்கும் நடித்திருக்கிறார். ஆனால் அவர் இடம்பெற்ற காட்சிகள் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சமீபத்தில் நவாசுதீன் சித்திக் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். ஹே ராம் ‘ஹே ராம்’ படத்தில் … Read more
Autograph: லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சேரன் பட டிரெய்லர்… சமூக வலைதளங்களில் வைரல்!
பள்ளிப் பருவம், காதல் என நினைவுகளால் நிரப்பி எடுக்கப்பட்ட இயக்குநர் பிரேம்குமாரின் 96 படத்துக்கு முன்னோடி, இயக்குநர் சேரன் இயக்கி நடித்த `ஆட்டோகிராஃப்’ திரைப்படம். `ஞாபகம் வருதே’ என நினைவுகளைத் தூண்டும் பாடல், மலையாளப் பெண்ணாக வரும் கோபிகாவுடனான சேரனின் காதல் முறிவு, இந்த சமூகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்று திரும்பிப் பார்க்க வைத்த சினேகா – சேரன் நட்பு என இந்தப் படம், அந்த சமயத்தில் அனைவரையும் ரசிக்க வைத்தது. … Read more
Rajinikanth: `ரஜினியும் ஜப்பான் ரசிகர்களும்!' – ஜப்பானில் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்!
கடந்த 2023-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி அதிரடியான வெற்றியைப் பெற்றதோடு மாபெரும் வசூலையும் அள்ளியது `ஜெயிலர்’. இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். வழக்கம்போலவே அறிவிப்புக்கு இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் நடிப்பில் நகைச்சுவையான வடிவில் ஒரு ப்ரோமோவையும் வெளியிட்டிருந்தார்கள். இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கும் அதிரடியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரஜினிக்கு ஜப்பானிலும் அதிகளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த 1998-ம் ஆண்டு … Read more
கடலூர்: மூளைச் சாவடைந்த இளைஞர்; இறந்தும் ஆறு பேருக்கு மறுவாழ்வு – அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!
கடலூர் மாவட்டம், புவனகிரியை சேர்ந்த தமிழொளி மற்றும் லீலா தம்பதியின் மகனான சரண் (வயது 20). புதுச்சேரியில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 13-ஆம் தேதி இரவு புவனகிரியில் இருந்து தனது தந்தை தமிழொளியுடன் சிதம்பரம் நோக்கி அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து இறுக்கை சற்று கோணலாக இருந்ததால் படிக்கட்டில் வந்து நின்றுள்ளார். பேருந்து வேகத்தடை மீது ஏறி இறங்கியதில் சரண் படியிலிருந்து தவறி விழுந்ததால் தலையில் பலத்த … Read more
Sivakarthikeyan: "இந்த உடற்பயிற்சி என்னையே எனக்கு அறிமுகப்படுத்தியது…" – சொல்கிறார் எஸ்.கே!
`அமரன்’ திரைப்படத்திற்காகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போலத் தனது உடலை மாற்றியமைத்திருந்தார் சிவகார்த்திகேயன். உடலை மேம்படுத்தும் காணொளி ஒன்றையும் படக்குழு முன்பு வெளியிட்டிருந்தது. தற்போது `அமரன்’ திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் எப்படி முழுமையாகத் தயாரானர் என்பதை ஒரு காணொளியாக வெளியிட்டிருக்கிறார் அவரின் பயிற்சியாளர் சந்தீப். இந்தக் காணொளியில் சிவகார்த்திகேயன் எப்படியான சிரமங்களையும், சவால்களையும் மேற்கொண்டார் என்பதை விளக்கியிருக்கிறார். இந்தக் காணொளியில் சிவகார்த்திகேயன், “தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளாத எனக்கு இது மிகவும் கடினமானதாக இருக்குமென்று … Read more
`தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைகள்; இனியாவது ஸ்டாலின்…' – இபிஎஸ் காட்டம்!
கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ‘தி.மு.க’ தலைமையிலான தமிழ்நாடு அரசைக் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ‘அ.தி.மு.க’ எடப்பாடி பழனிசாமி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது மு.க.ஸ்டாலின் மாடல் … Read more
Ajithkumar: “அஜித் சார் படத்துல நடந்த விஷயம் சிம்பு படத்துலயும் நடந்துச்சு" – இயக்குநர் V.Z.துரை
அஜித்தின் ‘முகவரி’ படத்துக்கு இது வெள்ளிவிழா ஆண்டு. கடந்த 2000ம் ஆண்டில் பிப்ரவரி 19-ம் தேதி இதே தினத்தில்தான் ‘முகவரி’ படம் வெளியானது. அஜித், ரகுவரன், ஜோதிகா, கே.விஸ்வநாத், சித்தாரா என நடிப்பில் மிளிரும் நட்சத்திரப் பட்டாளம் படத்தில் ஜொலித்திருந்தார்கள். அதைப் போலவே, பாலகுமாரனின் வசனம், பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவு, தேவாவின் இசை எனப் பல மேஜிக்குகள் இந்தப் படத்தில் உண்டு. இப்படம் 25வது ஆண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் அதன் இயக்குநர் வி.இசட்.துரையிடம் பேசினேன். முகவரி படத்தில் … Read more