"`மாமன்னன்' டைட்டில் லுக் போஸ்டரில் என் பெயர் முதலில் இடம்பெற்றதைக் கெளரவமாக நினைக்கிறேன்!"- வடிவேலு

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ எனும் படத்தை இயக்கிறார். ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலுவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வடிவேலு இன்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதில் வடிவேலு பெயரை முதல் பெயராக எழுதி டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. வடிவேலுவைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் … Read more

உக்ரைனிலிருந்து திரும்பும் இந்திய மாணவர்களின் மருத்துவப் படிப்பு இனி..?!

உக்ரைனில் இந்திய மாணவர்கள்! பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்துவருகிறார்கள். குறிப்பாக அந்த நாட்டில் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவக் கல்வி தான் பயின்று வருகிறார்கள். மருத்துவக் கல்விக்கு அடுத்தபடியாக அங்கு பொறியியல் பயிலும் மாணவர்களும் அதிகம் இருக்கிறார்கள். இந்திய மாணவர்கள் தவிர உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் உக்ரைனில் கல்வி கற்றுவருகிறார்கள். உக்ரைனில் மாணவர்கள் மருத்துவம் பயில ஆர்வம் கட்டுவதற்கு, அங்குக் கல்விக் கட்டணம் குறைவு என்பதும், அங்கு மருத்துவம் பயின்றால் பல்வேறு நாடுகளில் மருத்துவராக … Read more

மீண்டும் இணையும் ஜெயம் ரவி – நயன்தாரா! இந்தப் புதிய படத்தில் என்ன ஸ்பெஷல்?

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம், ‘பூமி’. அதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பின், ‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ‘அகிலன்’ என்ற ஆக்‌ஷன் படத்தையும் முடித்திருக்கிறார். ஜெயம் ரவி இதற்கிடையில் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் அகமத் இயக்கத்தில் டாப்ஸியுடன் ‘ஜன கண மன’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். படத்தின் இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்திருந்த நிலையில், கோவிட் காரணமாக மீதமுள்ள போர்ஷனை … Read more

நெல்லை: சுமுகமாக முடிந்த மேயர் தேர்தல்! – முடிவுக்கு வராத கவுன்சிலர்களின் டூர்

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 51 இடங்களை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க 4 வார்டுகளில் மட்டுமே வென்றது. தி.மு.க-வுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்ததால் மேயர், துணை மேயர் பொறுப்புகளுக்கு பலரும் ஆர்வம் காட்டினார்கள். அதனால் தி.மு.க கவுன்சிலர்கள் கேரளாவில் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மேயர் சரவணன் மேயர், துணை மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை அறிவித்ததால் இன்று நடத்த மேயர் தேர்தலில் பி.எம்.சரவணன் போட்டியின்றி தேர்வானார். அவருக்கு நெல்லை மத்திய மாவட்டச் … Read more

"எந்த சூழலிலும் கண்ணன் என்னை விட்டுக் கொடுக்கல!" – பர்சனல் பகிரும் தீபிகா

‘என் அம்மாவும், அப்பாவும் தான் என் பலமே… சில சமயம் ஏதாச்சும் சீரியல் வாய்ப்பு வந்துச்சான்னு கேட்பாங்க… இதுவரைக்கும் அவங்களுடைய கஷ்டத்தை என்கிட்ட காட்டினதில்ல. நானும் அவங்ககிட்ட என் கஷ்டத்தை காட்டினதில்ல. ரெண்டு பேரும் தூரமா இருக்கிறதனால முடிஞ்ச அளவுக்கு சோகத்தை வெளிக்காட்டிக்காம சந்தோஷத்தை பரிமாறிக் கொள்வோம்!’ என்றவாறு பேசத் தொடங்கினார் தீபிகா. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அந்தத் தொடரில் இருந்து விலகியதை அடுத்து தற்போது எப்படி இருக்கிறார் … Read more

ரஷ்ய படைகளின் தாக்குதல்: ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து! – உக்ரைன் தகவல்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9வது நாளாக போர் நீடித்து வருகிறது . இந்த நிலையில் தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷ்ய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின. அப்போது சபோரோஷியாவிலுள்ள அணுமின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதான் ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். 1986-ல் சோவியத் யூனியனில் இருந்த செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து உயிரிழப்பிலும், பொருளாதாரத்திலும் வரலாற்றில் இன்றுவரை மிகப்பெரிய பேரழிவாக … Read more

குண்டாஸ் போடாமல் இருக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டாரா?! – வைரலான ஆடியோ; பதவியை ராஜினாமா செய்த எஸ்.ஐ

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போனதால் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீஸார் பார்வையிட்ட போது, ஒரு கும்பல் காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்றது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வாகனச் சோதனையின் போது அந்த கும்பல் … Read more

இன்றைய ராசி பலன் | 04/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

உக்ரைன் விவகாரம்: `ஐ.நா-வில் இந்தியாவின் குரல் முக்கியமானது!' – பிரான்ஸ் தூதர்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதலால் அந்த நாடு மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்தும், பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன. இந்த நிலையில், ஐ.நா. சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவின் குரல் முக்கியமானது என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “உக்ரைனில் மக்கள் இறப்பதும், அகதிகளாக வெளியேறுவதும் வழக்கமாக … Read more

நெல்லை: மேயர் வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்! – இணையத்தில் பரவும் கலகக் குரல்கள்

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 51 இடங்களைப் பிடித்து அசுர பலத்துடன் இருக்கிறது. மேயர் வேட்பாளர் என்ற கனவுடன் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலரும் தங்கள் பெயரைக் கட்சித் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்.. கோதாவில் பிரபலங்கள்! – நெல்லை மாநகராட்சி மேயர் ரேஸில் யார் யார்? நெல்லை மாநகராட்சியின் தி.மு.க கவுன்சிலர்கள் சிலருக்கு கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் நல்ல அறிமுகம் இருந்தது. … Read more