முந்தும் முன்னாள் எம்எல்ஏ… உறவினரை முன்னிறுத்தும் சிட்டிங் எம்எல்ஏ! -பரபரக்கும் ஓசூர் மேயர் ரேஸ்

பழைமையும், பெருமையும் தாங்கிப்பிடிக்கும் வணிக வீதிகளையும் சந்தைகளையும் கொண்ட ஓசூர் மாநகராட்சியின் மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் தி.மு.க புள்ளிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த ஓசூர் 2019-ல்தான் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 45 வார்டுகளை உள்ளடக்கி, முதல் முறையாக மாமன்ற தேர்தலைச் சந்தித்த இந்த மாநகராட்சியும் தி.மு.க-வின் வசமாகியிருக்கிறது. தி.மு.க 21 வார்டுகளிலும், அதன் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க 16 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 … Read more

இன்றைய ராசி பலன் | 03/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

“இந்திய மாணவரின் மரணத்துக்கு நீட் தான் காரணம்" – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி காட்டம்!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவம் பயிலும் மாணவர், உக்ரைனில் உயிரிழந்தார். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி , “நவீன் மரணத்துக்கு நீட் தான் காரணம்” என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 96 சதவிகிதமும், பி.யூ.சி-யில் 97 சதவிகிதமும் மதிப்பெண் பெற்ற நவீனுக்கு இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான், … Read more

தேனி நகராட்சியில் பிரிட்டிஷ்… கடவுள் கவுன்சிலர்கள்! – பதவியேற்பு விழா சுவாரஸ்யம்!

தேனி மாவட்டம் பெரியகுளம், தேனி அல்லிநகரம், போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 6 நகராட்சிகளில் 177 கவுன்சிலர்களும், பூதிப்புரம், வடுகபட்டி, பழனிசெட்டிபட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட 22 பேரூராட்சிகளில் 336 கவுன்சிலர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேனி மாவட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக 6 நகராட்சி தலைவர் பதவிகிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடவுள் இந்நிலையில், தேனி-அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 … Read more

`பெரியார் டு உதயநிதி…' – மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்!

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றபோது பிரதான கட்சியினரைவிட சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களே அதிக கவனம் ஈர்த்தனர். மு.க.ஸ்டாலின் படத்துடன் வந்த உறுப்பினர் லக்‌ஷிகாஸ்ரீ நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் என 322 உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. மதுரை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணியில், திமுக சார்பில் 67, காங்கிரஸ் சார்பில் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேரும், … Read more

ஸ்டாலினுக்கு `அரவிந்தன்' போல; உதயநிதிக்கு…? -அப்பா பாணியில் அரிதாரத்திற்கு குட்பை!

“அரவிந்தன்“ என்கிற வலுவான ஒரு கதாபாத்திரம் மூலம் தனது திரையுலக பாத்திரத்திற்கு முடிவுரை கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த வகையில் அவரது மகன் உதயநிதியும் வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு தனது திரையுலக பயணத்திற்கு முடிவுரை எழுதும் முடிவினை எடுத்திருக்கிறார். நடிகராக ஸ்டாலின் தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் அரசியலுக்குள் அடி எடுத்துவைத்தபோதே, திரைப்படத்துறையிலும் நடிகராகக் களமிறங்கினார். குறிப்பாக அன்றைக்கு தி.மு.கவின் பிரசாரத்திற்கு `முரசே முழங்கு’ என்கிற நாடகத்தினை தமிழகம் முழுவதும் நடத்தினார். அதனைத் தொடர்ந்து `நீதி … Read more

அதிமுக கவுன்சிலர்கள் பதவியேற்பில் பாரபட்சமா?!பிரிக்கப்பட்ட மேடை மீண்டும் அமைக்கப்பட்டது ஏன்?!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் இருக்கின்றன. இவற்றுக்குக் கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க 11 இடங்களையும், அ.தி.மு.க 6 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றினர். அலங்காரம் கலைக்கப்படும் மேடை இந்த நிலையில், ராமேஸ்வரம் நகராட்சி தேர்தலில் … Read more

`சாதிய பாகுபாடு, நிரப்பப்படாத இடங்கள், மாணவர் இடைநிற்றல்!' – 4 ஐ.ஐ.டி-களின் அதிர்ச்சி தகவல்கள்

“ஐ.ஐ.டி எனப்படும் உயர்கல்வி நிறுவனத்தின் சென்னை வளாகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கொடுமைகளும் அநீதிகளும் இழைக்கப்படுகின்றன. இதற்கு அந்த ஐ.ஐ.டி நிறுவனம், ஆர்.டி.ஐ மூலமாகத் தந்திருக்கும் ஆவணங்களே சாட்சி” என்று அதிர வைக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் கார்த்திக். “எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களைப் பொறுத்தவரை மொத்தம் 22.5% மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அதிகபட்சமாக 17% மாணவர்கள்தான் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தமுள்ள ஆசிரியப் பணியிடங்களில் வெறும் 3% பேர்தான் அட்டவணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்” என்று … Read more

“பெட்ஷீட்டை கிழித்து சானிட்டரி நாப்கினாக பயன்படுத்துகிறோம்" -உக்ரைனில் சிக்கியுள்ள மாணவிகள் கண்ணீர்

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். மத்திய அரசு அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள பெரும்பாலான மாணவர்கள் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கின்றனர். கார்கிவ், கீவ் நகரங்களில் தான் பெரும்பாலான மாணவர்கள் சிக்கி இருக்கின்றனர். கீவ் நகரில் இருந்து உடனே காலி செய்யுங்கள் என்று மத்திய அரசு இந்திய மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேசமயம் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு மருந்து, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைக்கூட ஏற்பாடு செய்து … Read more

இடம், பொருள், ஆவல்: 8+ லட்சம் நூல்கள், 1.5+ லட்சம் உறுப்பினர்கள்… சென்னையில் இப்படி ஒரு நூலகமா?

சென்னை என்றால், சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ மவுண்ட் ரோடு எல்.ஐ.சி-யையோ காண்பிப்பதுதான் கொஞ்ச காலத்துக்கு முன்புவரை தமிழ் சினிமாவின் வழக்கமாக இருந்தது. சென்னையின் பொது அடையாளங்களாக இவை பெருமை ஏறி நிற்கும் நிலையில், கன்னிமாரா நூலகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் சென்னை வரலாற்றின் அறிவுசார் அடையாளங்களாகச் செம்மாந்து நிற்கின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மெட்ராஸில் நவீனக் கல்விமுறை என்பது 18-ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலேயே தொடங்கிவிடுகிறது. 1794-ல் கிண்டி பொறியியல் கல்லூரியும், 1857-ல் சென்னைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டு, … Read more