“பொய் பேசுவதில் திமுக-வினருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்" – நத்தம் விசுவநாதன் காட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும், தி.மு.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், “பொய் பேசுவதில் தி.மு.க-வினருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். எந்தக் காலத்திலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கும் ஆட்சி தான் இந்த தி.மு.க ஆட்சி. அ.தி.மு.க-வில் உள்ள முக்கியத் தலைவர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி அடிமட்டத் … Read more

இயக்குநர் ஷங்கரின் தெலுங்குப் பட அப்டேட்: தேர்தல் அதிகாரி ராம் சரண், முதலமைச்சர் எஸ்.ஜே.சூர்யா!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின் அறிவிப்பு வந்த நாள் முதல், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடந்து முடிந்த பிறகு, லாக்டெளன் வந்தது. பிறகு, ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து என அடுத்தடுத்து படத்திற்கு தடைகள் வந்தன. அதைத் தொடர்ந்து, படக்குழுவுக்குள் மனக்கசப்பு வந்து நீதிமன்றம் வரை சென்றது அனைவரும் அறிந்ததே. இதற்கிடையில் இயக்குநர் ஷங்கர், தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படமும் இந்தியில் … Read more

இருளிலிருந்து வெளிச்சத்துக்கு… மலேசியத் தமிழ் இளைஞர்களின் நம்பிக்கையான தோழமை | இவர்கள் | பகுதி 24

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! – ஆசிரியர். – மலைப் பிரசங்கம்.“குழந்தைகளின் பாதைகளுக்குத் தடை விதிக்காதீர்கள். நாளைய உலகத்துக் கதவுகளின் திறவுகோல் அவர்களிடமே உள்ளது.” இனிமையான குழந்தைப் பருவமும், பெற்றோரின் அரவணைப்பும், அவர்கள் ஏற்படுத்தித்தரும் வாய்ப்புகளும் அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. மகிழ்ச்சியற்ற குழந்தைப் பருவமென்பது ஆகப்பெரும் துயரம். களிப்பும் கொண்டாட்டமும் சூழ்ந்து வாழவேண்டிய வயதில், வறுமையும் அவமானங்களும் துரத்த வாழ்கிற குழந்தைகள் எல்லாவற்றையும் கண்டு அச்சப்படுகிறவர்களாக மாறுகிறார்கள். இந்த … Read more

4 வயது சிறுமி பாலியல் வழக்கு; குற்றவாளிகளுக்கு சாகும்வரை சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்!

மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை எனத் தீர்ப்பளித்துள்ளது ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கருப்பச்சாமி கடந்த 2017 ஆகஸ்ட் 24-ம் தேதி வீட்டில் அப்பெண் தனியாக இருக்கும்போது, அத்துமீறி நுழைந்த கருப்பசாமி என்பவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். அந்தப் பகுதி மக்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, அவர் மீது … Read more

"`சகோதரி சிந்துஜா'னு உதயநிதி ட்வீட் போட்டிருந்தார். அண்ணனா கடைசி வரைக்கும் இருந்தார்!"- அருண்ராஜா

“‘கனா’ ரிலீஸுக்குப் பிறகு அடுத்த படத்திற்காக ஸ்க்ரிப்ட் வொர்க் போயிட்டு இருந்தது. அப்போ, போனிகபூர் ஆபிஸ்ல இருந்து போன் வந்தது. ஒரு மீட்டிங் வெச்சாங்க. அப்போ, ‘ரீமேக் பண்ண ஐடியா இருக்கானு’ கேட்டாங்க. அப்போ ‘ஆர்ட்டிக்கிள் 15’ ரீமேக் பண்ண முடியுமானு பேச்சு வந்தது. இந்தில இந்தப் படம் பார்த்துட்டு நிறைய பேசியிருக்கேன். நிறைய வைப் கிரியேட் பண்ணுன படம். பிலிம் மேக்கிங் மற்றும் சோசியல் சார்ந்த விஷயங்களைப் பேசுனதுலயும் ‘ஆர்ட்டிக்கிள் 15’ எல்லோருக்கும் பிடிச்ச படம். … Read more

“அரசாங்கமும் ஒதுக்கினா என்ன பண்றது?!” -திருத்தணி கோவிலில் பணிக்கு போராடும் திருநங்கை அகல்யா வேதனை

‘திருத்தணி முருகன் கோவிலில் கடைநிலை ஊழியர் பணிக்கு அப்ளை செய்துருந்தேன். அந்த பணியில், மூன்றாம் பாலினத்தவருக்கு என தனி இட ஒதுக்கீடு இல்லாததால் என்னுடைய வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது!’ என்கிறார், திருநங்கை அகல்யா. இது குறித்து அவரிடம் பேசினோம். திருநங்கை அகல்யா “என்னோட சொந்த ஊர் திருத்தணி. பன்னிரண்டாம் வகுப்பில் 968 மதிப்பெண் வாங்கினேன். காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது என்னோட உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தொடர்ந்து படிக்க முடியாம படிப்பை நிறுத்திட்டேன். எங்க வீட்டில் என்னை … Read more

தபு, பூமிகா முதல் லைலா வரை… தமிழில் மீண்டும் களமிறங்கும் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நாயகிகள்!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான நாயகிகள் சிலர் தற்போது மீண்டும் தமிழுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். நடிகைகள் பூமிகா, மாளவிகா, லைலா, மதுபாலா, தபு உள்பட பலரும் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு விசிட் அடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் இங்கே பிசியாக நடித்துக் கொண்டிருந்த இவர்கள் அதன்பின் கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று போய்விட, நடிப்பில் இருந்தே முற்றிலும் ஒதுங்கினார்கள். முழுநேர இல்லத்தரசியாகவும் இன்ஸ்டாவில் புகைப்படங்களைத் தெளித்து வந்தார்கள். தபு உள்ளிட்ட சிலர் மட்டும் பாலிவுட்டில் நிறைய படங்கள் … Read more

`ரஷ்ய தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளது!' – உக்ரைன் ராணுவம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலால், உக்ரைனில் ராணுவத்தினர் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் மட்டுமல்லாமல், ரஷ்ய மக்களும் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உக்ரைன் : தாக்குதல் நடைபெற்ற இடம் இந்த நிலையில் ரஷ்யா – உக்ரைன் நாடுகள் இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் … Read more

விக்ரம் படத்தின் டீசர் எப்போது ரிலீஸ்? படத்தில் இணைந்த மற்றொரு நடிகை!

கமலின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தோடு நிறைவடைகிறது. கமல்ஹாசன்- விஜய்சேதுபதி- பஹத் பாசில்- நரேன் கூட்டணியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் ‘விக்ரம்’. இது கமலின் 232-வது படம். விஜய்சேதுபதியும் பஹத் பாசிலும் அண்ணன்- தம்பி, அரசியல்வாதிகளாகவும் நடிக்கின்றனர். அவர்கள் இருவரிடமும் சிக்கிக் கொண்ட நரேனை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான கமல் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை என்கிறார்கள். கமல் இதில் கண் பார்வையற்றவராக நடிக்கிறார். லோகேஷின் ‘கைதி’ போலவே … Read more

சென்னை: இரண்டாவது மனைவியைக் கொலை செய்தது ஏன்?! – கணவன் அதிர்ச்சி தகவல்

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (29). எலெக்ட்ரீசியனாக வேலைப் பார்த்து வருகிறார். இவரின் இரண்டாவது மனைவி வெண்ணிலா (23). கடந்த 26-ம் தேதி இளங்கோவன், புழல் எம்.ஜி.ஆர் நகரில் குடியிருக்கும் தன்னுடைய தாத்தா வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார். மனைவியுடன் இளங்கோவன் இதுகுறித்து புழல் காவல் நிலையத்துக்கு … Read more