உக்ரைன்: `அவன் இல்லாம, நான் வரமாட்டேன்!' – தனது நாய் இல்லாமல் நாடு திரும்ப மறுக்கும் இந்திய மாணவர்

போர் தீவிரம் அடைந்துள்ள உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்கள் எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இந்தியாவிற்கு வர துடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மாணவர்கள் சிலர் உக்ரைன் எல்லையில் சிக்கிக்கொண்டுள்ளனர். உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ரிஷப் கவுசிக் என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு ரேடியோ எலக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இவர் தன்னுடன் ஆசையாக வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்திய … Read more

இன்றைய ராசி பலன் | 28/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

Veto அதிகாரத்தால் வீழ்த்திய ரஷ்யா: Veto என்றால் என்ன? ரஷ்யாவின் Vetoவால் இந்தியா பயன்பட்டது எப்படி?

‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும், தன் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்துவிட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. ரஷ்யா தன் ஒற்றை அதிகார வாக்கைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்துவிட்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரம் … Read more

“நாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம்!" – உக்ரைனைக் காக்க களத்தில் இறங்கிய முன்னாள் அதிபர்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையிலான போர் நான்காவது நாளாக தீவிரமடைந்துள்ளது. ரஷ்யப் படையினர் வாசில்கிவ், கீவ், செர்னிகிவ், சுமி, கார்கிவ் போன்ற நகரங்களைத் தாக்கிக் கொண்டிருப்பதால், நிலை மோசமடைந்திருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யப் படைகளுக்கும், உக்ரேனிய படைகளுக்கும் இடையேயான போரில், உக்ரைன் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ போர் உடைகளுடன் கியெவ் நகரில் மக்களுடன் உள்ள வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. முன்னாள் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ ட்விட்டரில் வெளியான இந்த வீடியோவில், கியெவ் மக்களுடன் போர் உடையில் … Read more

உக்ரைனில் தவிக்கும் 1,200 மகாராஷ்டிரா மாணவர்கள்; 300 பேர் மட்டுமே தொடர்பில் இருப்பதாக அரசு தகவல்!

ரஷ்யா போர் தொடுத்துள்ள உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். மகாராஷ்டிராவிலிருந்து மட்டும் 1,200 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். அவர்களில் 300 மாணவர்களுடன் மட்டும் தொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக மகாராஷ்டிரா அமைச்சர் விஜய் வடேதிவார் தெரிவித்துள்ளார். எஞ்சிய மாணவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். உக்ரைனில் மருத்துவம் படிக்கச் செலவு குறைவு என்பதால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் … Read more

இராணுவ உடையில் உக்ரைன் அதிபர்… வைரலாகி வரும் புகைப்படம் உண்மையா? பின்னணி என்ன?

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் சூழலில் ரஷ்யா, உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் உக்கரைனும் தன்னை தீவிரமாக பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் குடிமக்களும் போரில் பங்கு கொள்ள முன்வரவேண்டும் என்றும் அதற்குத் தேவையான ஆயுதங்களை அரசு வழங்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் உக்ரைனுக்குள் இராணுவப் படைகளை அனுப்பும் புடினின் முடிவுக்கு எதிராக ரஷ்யர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் … Read more

'கல்வெட்டில் தேவதாசி' ஆய்வு நூல்; புத்தக கண்காட்சியில் வெளியீடு!

கல்வெட்டுகளில், தேவதாசிகள் பற்றி சொல்லப்பட்டுள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ‘கல்வெட்டில் தேவதாசி’ என்கிற நூல், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக நேற்று சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கும் தேவதாசிகள் பற்றிய செய்திகளை, அவர்களின் வாழ்வைப் பேசுவதால் இந்த நூல் கவனம் பெறுகிறது. தேவதாசி என்கிற விளிப்பெயர் சரியானது தானா என்கிற கேள்வியையும் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. தேவரடியார்கள், தேவமகளார் என்று கல்வெட்டுகளில் சுட்டப்படும் இவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களோடு விரிவான ஆய்வைச் செய்து … Read more

கோரிக்கை விடுத்த உக்ரைன் துணை பிரதமர்; 10 மணி நேரத்தில் `ஸ்டார் லிங்க்' மூலம் உதவிய எலான் மஸ்க்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதல் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் ரஷ்யப் படைகள், ரஷ்ய அரசின் உத்தரவின் பேரில் உக்ரைனை எல்லா திசைகளிலிருந்தும் தாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் `ஆயுதங்களைக் கைவிடுங்கள்… பேச்சுவார்த்தைக்குத் தயார்!’ – ரஷ்யா திடீர் அறிவிப்பு உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அந்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கின்றனர். ரஷ்யப் படைகளால் இதுவரை … Read more

`இந்த மாதிரியெல்லாம் டிரெஸ் போட்டுட்டு வரக்கூடாது' – புதுச்சேரி போலீஸார் பேச்சால் புது சர்ச்சை!

சுற்றுலாத்தலமான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகிறார்கள். அதேபோல பிரெஞ்சுக் கட்டடக் கலையுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், கட்டடங்கள், தேவாலயங்கள், ஸ்ரீமணக்குள விநாயகர் கோயில், அரவிந்த ஆசிரமம் உள்ளிட்டவைகளை பார்ப்பதற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அயல் நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வருகிறார்கள். அப்படி வரும்போது புதுச்சேரியின் தட்பவெட்ப நிலைக்கு தகுந்தாற்போல டி-ஷர்ட், அரைக்கால் சட்டை, ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்திருப்பார்கள். இந்த நிலையில், நேற்று மாலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் … Read more

`குஜராத்தில் மிஸ்ஸாகி விட்டது, அதனால் மும்பையில்..!' – காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்ல முயன்ற பெண்

மும்பை அந்தேரி ரயில் நிலையத்திற்கு அருகில் விரன் ஷா (38) என்பவரை பட்டப்பகலில் இரண்டு பேர் பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் சரமாறியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். தேசிய பங்குச்சந்தையில் விரன் ஷா சாப்ஃட்வேர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். கத்திக்குத்தில் கழுத்து உட்பட நான்கு இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை உடனே போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை … Read more