`சாதிய பாகுபாடு, நிரப்பப்படாத இடங்கள், மாணவர் இடைநிற்றல்!' – 4 ஐ.ஐ.டி-களின் அதிர்ச்சி தகவல்கள்

“ஐ.ஐ.டி எனப்படும் உயர்கல்வி நிறுவனத்தின் சென்னை வளாகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கொடுமைகளும் அநீதிகளும் இழைக்கப்படுகின்றன. இதற்கு அந்த ஐ.ஐ.டி நிறுவனம், ஆர்.டி.ஐ மூலமாகத் தந்திருக்கும் ஆவணங்களே சாட்சி” என்று அதிர வைக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் கார்த்திக். “எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களைப் பொறுத்தவரை மொத்தம் 22.5% மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அதிகபட்சமாக 17% மாணவர்கள்தான் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தமுள்ள ஆசிரியப் பணியிடங்களில் வெறும் 3% பேர்தான் அட்டவணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்” என்று … Read more

“பெட்ஷீட்டை கிழித்து சானிட்டரி நாப்கினாக பயன்படுத்துகிறோம்" -உக்ரைனில் சிக்கியுள்ள மாணவிகள் கண்ணீர்

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். மத்திய அரசு அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள பெரும்பாலான மாணவர்கள் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கின்றனர். கார்கிவ், கீவ் நகரங்களில் தான் பெரும்பாலான மாணவர்கள் சிக்கி இருக்கின்றனர். கீவ் நகரில் இருந்து உடனே காலி செய்யுங்கள் என்று மத்திய அரசு இந்திய மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேசமயம் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு மருந்து, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைக்கூட ஏற்பாடு செய்து … Read more

இடம், பொருள், ஆவல்: 8+ லட்சம் நூல்கள், 1.5+ லட்சம் உறுப்பினர்கள்… சென்னையில் இப்படி ஒரு நூலகமா?

சென்னை என்றால், சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ மவுண்ட் ரோடு எல்.ஐ.சி-யையோ காண்பிப்பதுதான் கொஞ்ச காலத்துக்கு முன்புவரை தமிழ் சினிமாவின் வழக்கமாக இருந்தது. சென்னையின் பொது அடையாளங்களாக இவை பெருமை ஏறி நிற்கும் நிலையில், கன்னிமாரா நூலகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் சென்னை வரலாற்றின் அறிவுசார் அடையாளங்களாகச் செம்மாந்து நிற்கின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மெட்ராஸில் நவீனக் கல்விமுறை என்பது 18-ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலேயே தொடங்கிவிடுகிறது. 1794-ல் கிண்டி பொறியியல் கல்லூரியும், 1857-ல் சென்னைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டு, … Read more

“மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது..!’’ – உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன்… நடந்ததை விவரிக்கும் நண்பர்

ரஷ்யா – உக்ரைன் போரில் கர்நாடக மாநில ஹாவேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். அவர் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், அவரின் நண்பர் ஶ்ரீகாந்த் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “கடந்த 5 நாள்களாக உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் அடித்தளத்தில் நானும், நவீன் இன்னும் சில நண்பர்கள் பதுங்கியிருந்தோம். கார்கிவிலிருந்து வெளியேறுவது உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம் … Read more

மூணு மடங்கு சம்பளம்… வளர்த்து விட்டவர்களை கடைசி நேரத்தில் கவிழ்த்துவிட்டாரா நட்சத்திரா?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த சீரியல் ‘யாரடி நீ மோகினி’. ஹீரோயினாக ‘வெண்ணிலா’ என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் நட்சத்திரா. பிரைம் டைமில் ஒளிபரப்பான இந்தத் தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. சமீபத்தில் இந்த சீரியல் முடிவடைந்த போது நட்சத்திராவையே ஹீரோயினாக கமிட் செய்து அடுத்த சீரியலைத் தொடங்க முடிவு செய்து இருந்தார்களாம் சேனலில். ‘தெய்வம் தந்த பூவே’ என்கிற அந்தத் தொடருக்காக நட்சத்திராவிடம் கேட்ட போது, அவரும் … Read more

இன்றைய ராசி பலன் | 02/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

Maha Shivaratri 2022 | மகா சிவராத்திரிப் பெருவிழா சிறப்பு நேரலை! | Mylapore

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் நடைபெறும் மகா சிவராத்திரிப் பெருவிழா 2022 நேரலை! Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx Source link

தென்காசி: கண்டிப்பை மீறி காதல்; ஆத்திரத்தில் மகளை அரிவாளால் வெட்டிய தந்தை!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆரியங்காவு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், இருபது வயது நிரம்பிய ஒரு பட்டதாரி பெண். படிப்பை நிறுத்திவிட்டு தற்போது வீட்டில் இருக்கும் அவர், வீட்டில் இருந்தபடியே பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். காதல் அந்தப் பெண்ணுக்கும் அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதுவே காதலாக மலர்ந்துள்ளது. இருவருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெண்ணின் தந்தையான வேலுச்சாமி என்பவரின் காதுகளை எட்டியதும் அவர் ஆத்திரம் … Read more

`விஜய் 66' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ், பிரபாஸ் படங்களின் ஒளிப்பதிவாளர்!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம், விஜய்யின் 66வது படத்திற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பித்துவிட்டன. டோலிவுட் இயக்குநர் வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமிழ் – தெலுங்கு பைலிங்குவல் படமாக இருந்தாலும் படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்புகள் சென்னையில்தான் நடைபெற இருக்கின்றன. இயக்குநர் ராஜூ முருகன் தமிழ் வசனம் எழுதுகிறார். தமன் இசையமைக்கிறார், பிரவீன் கே.எல் எடிட் செய்கிறார் என … Read more

ட்யூஷன் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்; கண்காணிக்க சிறப்புக் குழு; நீதிமன்றம் அதிரடி!

ராதா என்ற ஆசிரியர் தனது இடமாறுதல் கோரிக்கையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதுதொடர்பான தீர்ப்பை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வழங்கியபோது, “பணம் சம்பாதிக்கும் நோக்கில் ட்யூஷன், பகுதி நேர வேலை, வேறு தொழில்களில் என ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார். மதுரை உயர் நீதிமன்றக் கிளை `பள்ளி மாணவர்களுக்கான நேரடி பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும்!’ – உச்ச … Read more