மதுரை: மாயமான சிறுமி மரணம்; போக்சோவில் இளைஞர் உட்பட 8 பேர் கைது! -கொதித்த ஊர் மக்கள்.. நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், அதன் காரணமாக உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பரவிய தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை அச்சிறுமி மரணமடைந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல் மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காணாமல் போனதாக அவர் தாயார் மேலூர் காவல் … Read more

27 நாடுகள், 100 நாள்கள்… மண் வளத்துக்காக பைக் பயணம் செல்லும் ஈஷா ஜக்கி வாசுதேவ்!

கோவை ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், உலகளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாள்களில் 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கி.மீ பைக்கில் பயணம் செய்ய உள்ளார். இதற்காக, ஏராளமான ஈஷா தன்னார்வலர்கள் ஆதியோகி முன்பு திரண்டு அவரை வழியனுப்பி வைத்தனர். ஜக்கி வாசுதேவ் கோவை: `வெளியூர் ஆட்களை இறக்கி அதிமுக கவுன்சிலர்களைத் தாக்குகின்றனர்!’ – எஸ்.பி.வேலுமணி காட்டம் மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் … Read more

ரஷ்யா உக்ரைன் போர்: “2-ம் உலகப்போருக்குப் பிறகு மிகப்பெரிய அகதிகள் நகர்வு!" – ஐ.நா தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 11வது நாளாக இன்று நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் பல லட்சம் மக்கள் தங்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ள உக்ரைனிலிருந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகிறார்கள். ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. உக்ரைன் இந்தநிலையில் இது குறித்து ஐ.நா. அகதிகள் பிரிவின் உயர் கமிஷனர் பிலிப்போ கிராண்ட்டி கூறியதாவது , ‘‘கடந்த 10 … Read more

பஞ்சாப்: சக வீரர்களை துப்பாக்கியால் சுட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்… 5 பேர் உயிரிழப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை ஒட்டிய பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் குழுவில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய கான்ஸ்டபிள் சட்டப்பா எஸ்.கே. என்பவரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது. அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை மற்ற வீரர்களால் தற்காப்புக்காக கொல்லப்பட்டாரா ? என்பது குறித்துத் சரியான தகவல்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு … Read more

`புதிய அப்டேட்களுடன் ஒன்ப்ளஸ்', என்ன சொல்கிறார் ஒன்ப்ளஸ் சிஇஓ பீட் லௌ?

2022-ல் இந்தியாவில் தங்களுடைய முதல் வெளியீடாக 9RT மொபைலை வெளியிட்டது ஒன்ப்ளஸ். ஆனால், அதே நேரத்தில் சீனாவில் ஒன்ப்ளஸ் 10 சீரிஸ் மொபைல்களே விற்பனைக்கு வந்துவிட்டன. ‘இப்போதுதான் 9RT-யே இந்தியாவில் வெளியாகியிருக்கிறது, 10 சீரிஸ் வெளியாக இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ’ என இந்திய ஒன்ப்ளஸ ரசிகர்கள் சலித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒன்ப்ளஸின் சிஇஓ-வான பீட் லௌ, அந்நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் ஒன்ப்ளஸின் செயல்பாடுகள் மற்றும் வரும் காலத்தில் என்னென்ன மாற்றங்கள் ஒன்ப்ளஸின் வருகிறது என்பது குறித்த அப்டேட்களை … Read more

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2022: மகரம் – கே.பி.வித்யாதரன்

மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே! துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கி நீங்கள். புரட்சிகரமான எண்ணங்கள் உடைய நீங்கள், மனிதநேயத்தை மழுங்கவைக்கும் மூடச் சிந்தனைகளைத் தூக்கி எறிவீர்கள். உங்களுக்கு 21.03.2022 முதல் 08.10.2023 வரையிலும் ராகுவும், கேதுவும் இணைந்து என்ன மாற்றத்தைத் தருவார்கள் என்று பார்ப்போம். ராகுவின் பலன்கள்! இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து இழப்பு, ஏமாற்றம், விரக்தி என நாலாபுறமும் வாட்டி வதைத்த ராகு பகவான், இப்போது ராசிக்கு … Read more

உக்ரைன் – தியாக தேசத்தின் வரலாறு- பகுதி 4: ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவது உலகத்துக்கு நல்லதா?

பள்ளிக்கூடத்தில் முரட்டுத்தனமாக மற்றவர்களுடன் சண்டை போடும் பையனை, ”அவன்கூட யாரும் பேசக்கூடாது” என்று ஒதுக்கி வைப்பார் டீச்சர். அந்த டீச்சரின் டெக்னிக்கையே உலக நாடுகள் கையாள்கின்றன. எந்தக் கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் ஆயுதங்களை உற்பத்தி செய்கிற, அண்டை நாடுகளுடன் சண்டையிடுகிற தேசங்கள் மீது பொருளாதாரத் தடை உட்பட பல்வேறு தடைகளை விதித்துத் தனிமைப்படுத்துகின்றன. வட கொரியாவை இப்படித்தான் தனிமைப்படுத்தினார்கள். அந்த நாட்டின் அதிபர் கிம், தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்காவையே மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது உக்ரைன்மீது போர் … Read more

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2022: கடகம் – கே.பி.வித்யாதரன்

முன்வைத்த காலைப் பின்வைக்காதவர் நீங்கள். சொன்ன சொல் தவறமாட்டீர்கள். ஒருவரை உங்கள் மனதுக்குப் பிடித்துவிட்டால் கணக்கு வழக்கு பார்க்காமல் வாரி வழங்குவீர்கள். உங்களுக்கு 21.3.2022 முதல் 8.10.2023 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் சேர்ந்து என்ன பலன்கள் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம். முயற்சிகளில் வெற்றியைப் பெற்றுத் தரப்போகிறார் ராகு! இதுவரை உங்களின் லாப வீட்டில் அமர்ந்து பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதிகள் என பல வகையிலும் முன்னேற்றம் தந்தார் ராகு பகவான். இப்போது … Read more

அதிமுக: “இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்னையில் கருத்து சொல்ல விரும்பவில்லை!” -டிடிவி தினகரன்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அமமுக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் நேற்று முன்தினம் (04.03.2022) இரவு கலந்துகொண்டிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். நேற்று காலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் உரையாடியுள்ளார். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “அதிமுக கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்னையை எட்டி பார்த்து கருத்து சொல்வதற்கு நான் விரும்பவில்லை. தேனி: “அதிமுக-வில் சசிகலாவை இணைக்க … Read more

பட்டாம்பூச்சிகளின் சிறகுகள் | உலக சினிமா #MyVikatan

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழா மார்ச் 3 அன்று கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகச்சிறந்த திரைப்படங்களை மிகச்சிறந்த திரையரங்குகளில் திரையிட்டு காட்டுவதில் பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழா கோவா பனாட்டு திரைப்பட விழாவுக்கு இணையானது. திரையிடல் தொடங்கிய முதல்நாள் முதல் காட்சியில் பார்த்த திரைப்படம் ‘லுஅக்கிங் பார் வெரனா. முதல் படமே முதன்மையான படமாக திகழ்ந்தது. புதுமுக பெண் இயக்குநர் நொரிகா சேபா கை தேர்ந்த திரைமேதைகளைப்போல் காட்சிகளையும் சட்டகங்களையும் உருவாக்கி மிரட்டி இருந்தார். … Read more