இங்கு எல்லாமே தொடர்கதைதானே! #MyVikatan
இந்தப் பூவுலகில் நடப்பவை அனைத்தும் தொடர்கதைதான்!பிறப்பு இனிப்பான தொடர்கதை என்றால், இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத தொடர்கதை.இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையோ,வளமும்,வம்பும் நிரம்பிய வலிய தொடர்கதை.காயும் வெயிலும்,கனன்றடிக்கும் மழையும்,வளரும் பிறையும்,தேயும் நிலவும் என்றென்றும் இயற்கையின்தொடர்கதை.தாலாட்டும் தென்றலும்,தகிக்க வைக்கும் புயலும்,கால் தழுவும் கடலும்,கட்டிட உயர ஆழிப்பேரலைகளும் (சுனாமி)தொடர்ந்து வருபவைதாமே. உறவும்-பிரிவும், இன்பமும்-துன்பமும்,காதலும்-சோகமும்,மேடும்-பள்ளமும், இப்படி, இங்கே எல்லாமே தொடர்கதைதான்.வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்து கொண்டவர்கள் இந்தத் தொடர்கதைகளோடு ஒன்றிப் போய்த்தான் ஆக வேண்டும்.அப்புறம் அவள் மட்டும் சிறுகதையாகச் சிறிது நேரத்தில் முடிந்து போய்விடுவாளா…என்ன? … Read more