இன்றைய ராசி பலன் | 12/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

IPL Auction 2022: அதிகம் அறிமுகமில்லாத, ஆனால் ஆக்ஷனில் அசத்தப்போகும் வெளிநாட்டு வீரர்கள் யார், யார்?

வாய்ப்புகளை வசப்படுத்துவதற்கான வழி என்பதையும் தாண்டி, இதயங்களை வசீகரிப்பதற்கான வாய்ப்பு என்பதாலும் ஐபிஎல் கிரிக்கெட்டர்களால் விரும்பப்படுகிறது. முகமறியா இளம்வீரர்களது திறனை வெளிக்கொணர ஆரம்பிக்கப்பட்டதுதான் ஐபிஎல். ஆனால், தற்சமயம் சர்வதேச அணிக்காக ஆடிக் கொண்டிருக்கும் வேற்று நாட்டு வீரர்கள்கூட ஐபிஎல்லில் ஆடிவிட மாட்டோமா என ஆசைப்படுமளவு மாறியுள்ளது. இது பணத்தின் மீதான ஈர்ப்பு மட்டுமல்ல, புகழின் மீதான போதையும்கூட. இந்த டி20 போட்டிகளில் கிடைக்கும் கவனம், சமயத்தில் சர்வதேசப் போட்டிகளையே தாண்டி நிற்கிறது. அந்த வகையில் வேற்று நாட்டைச் … Read more

`ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்!' – அண்ணாமலை

விழுப்புரம் மாவட்டத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்ட அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, “விழுப்புரம் மாவட்டம் அதிகமான தேர்தல்களை சந்தித்துள்ளது. குறிப்பாக, குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாக்களித்து அவர்கள் ஆட்சியில் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கின்றனவா என்றால் நிச்சயமாக கிடையாது. மக்களது வாழ்க்கைத் தரத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை, அப்படியேதான் இருக்கிறார்கள். 8 ஆண்டுகளில் ஒரு … Read more

`தமிழகம் விரும்பும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்!' – முதலீடு செய்வது எப்படி?

மத்திய, மாநில அரசாங்கங்கள் பெண்களுக்கென்று பிரத்யேகமாகப் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. பெண்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்குவதில் ஆரம்பித்து, அவர்களின் பெயரில் கடன் வாங்கினால் வட்டிச் சலுகைகள் என்பது வரை நிறைய சலுகைகள் பெண்களுக்கு உண்டு. அந்த வகையில் பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட `சுகன்யா சம்ருதி யோஜனா – Sukanya Samrudhi Yojana’ எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம், 2015-ம் ஆண்டு, ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பிக்கப்பட்டது. பெண் குழந்தைகளின் … Read more

சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகள்: "ரஜினிக்கு டப்பிங் பண்ண வந்தார் சிவா!"- நினைவுகள் பகிரும் பொன்ராம்

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அடியெடுத்து வைத்து பத்தாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. “எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் – இன்னும் கடினமாய் உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வைப் பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே… என் இதயத்தின் ஆழ்மனதிலிருந்து அன்பும் நன்றியும்…” என நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார். சிவாவின் பத்தாண்டு பயணம் குறித்து, இயக்குநர் பொன்ராமிடம் கேட்டோம். சிவாவின் கரியரில் அதிக படங்கள் இயக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, … Read more

`இதுதான் கடைசி வாய்ப்பு!'- விஜய் மல்லையாவை எச்சரித்த உச்சநீதிமன்றம்

இந்திய வங்கிகளில் கடன் பெற்று திருப்பி தராமல் லண்டனுக்கு சென்ற மல்லையா, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது வாரிசுகளின் பெயருக்கு மாற்றினார். நீதிமன்ற உத்தரவை மீறியதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. Supreme Court Of India விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ்; விரைவில் லண்டன் பங்களாவை காலி செய்வாரா? பல முறை நேரில் ஆஜராக உத்தரவிட்டும், அவர் வராததை தொடர்ந்து, நேரில் ஆஜராவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாகவும் அதுவே கடைசி … Read more

கோலிவுட் ஸ்பைடர்: அஜித் 61 பட நாயகி இவர்தான்; 2025-ல் விஜய்யின் மகன் என்ட்ரி; பாலிவுட்டில் நயன்தாரா!

இலங்கை கிரிக்கெட் முரளிதரன் வாழ்க்கையை படமாக்க முயன்று அதில் விஜய் சேதுபதி நடிக்க முன்வந்தபோது, நிறைய எதிர்ப்பு கிளம்பியது. அதை ஆக்ரோஷமாக முன்னிருந்து நடத்தினார் சீமான். அதனால் விஜய் சேதுபதிக்கும் சீமானுக்கும் பனிப்போர் நடந்துக் கொண்டிருந்தது. இப்போது சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தை சீமானிடம் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கும், சீமானுக்கும் இடையே சந்திப்பு நடக்க, இரண்டு பேருக்கும் இடையில் தற்போது சமாதானம் ஆகிவிட்டது என்கிறார்கள். விஜய் சேதுபதி விஜய்யின் மகன் லண்டனில் படித்து … Read more

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கடலோர … Read more

`பொன்னியின் செல்வன்' அப்டேட்: ரிலீஸில் மாற்றம்; வெளியாகும் மாதம் எது தெரியுமா?

‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்குவது தமிழ் சினிமாவில் பலரின் கனவாக இருந்தது. அதனை கையிலெடுத்து படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார், இயக்குநர் மணிரத்னம்.கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன் என ஒரு பட்டாளமே இருக்கிறது. தாய்லாந்து, ஹைதராபாத், பாண்டிச்சேரி, சென்னை என பல இடங்களில் ஷூட்டிங்கை முடித்த படக்குழு, தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் இருக்கிறது. படத்தில் தனக்கான டப்பிங்கை ஒவ்வொருவராக முடித்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிராஃபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு … Read more

தற்கொலை செய்துகொண்ட சிறுமி; வீடியோ ஆதாரத்தால் போக்சோவில் கைதான காவலர் – நடந்தது என்ன?!

சென்னையைச் சேர்ந்த சிறுமிக்கும், சிறைக் காவலர் மகேஷ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சமூகவலை தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது காவலர் மகேஷ், சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் சிறுமியை காவலர் மகேஷ் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முயற்சி தற்கொலை செய்வதற்கு முன்பு சிறுமி, வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் தன்னுடைய இந்த முடிவுக்கு யார் காரணம் என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். … Read more