"பழைய மாருதி 800 ல பயணிச்ச சேது அண்ணா…" – மனம் திறக்கும் சந்தோஷ் நாராயணன்!

சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர். தனது வெரைட்டியான பாடல்கள், பின்னணி இசையின் வழியே தனக்கென தனியிடத்தைப் பிடித்தவர். அவர், தமிழ் சினிமாவில் இசையமைக்கத் தொடங்கி 10 வருடங்கள் ஆகிறது. `மகான்’, `கடைசி விவசாயி’ என சமீபத்தில் இசையமைக்கும் படங்கள் குறித்தும் அவரிடம் பேசியதிலிருந்து… ” `கடைசி விவசாயி’ கதை கேட்கும்போது எப்படி இருந்தது?” “படத்தை எனக்கு தியேட்டர்ல ஸ்க்ரீன் பண்ணி காமிச்சாங்க. படத்த பாத்துட்டு நான் ஸ்டன் (stun) ஆகிட்டேன். அந்தப் படம் … Read more

`ஓவர் நைட்டில் ₹1 கோடி சம்பாதிக்கலாம்!' – வலைவிரிக்கும் போலி வலைதளங்கள்; உஷார்..!

`ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்தில் பிறந்தார் முகேஷ். ஆனால், முதலீட்டின் மூலம் ஒரே நாளில் அனைத்துக் கடன்களையும் அடைத்து, சொந்தமாக வீடு வாங்கி, சில மாதங்களிலே பில்லியனாகிவிட்டார்…’ – இணையதளங்களில் பரவிவரும் சில மோட்டிவேஷன் கதைகள் இப்படித்தான் ஆரம்பித்திருக்கும். கேட்பதற்கே மிக சுவாரஸ்யமாக இருக்கிறதே என அந்தக் கட்டுரையை க்ளிக் செய்து உள்ளே சென்று படித்துப் பார்த்தால்தான் தெரியும் இறுதியில் அது ஓர் ஏமாற்று வேலை என்பது. Money (Representational Image) … Read more

விஷ்ணு விஷாலின் `FIR' படத்திற்கு சில நாடுகளில் தடையா? பின்னணி என்ன?

விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்.’ படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் ‘இப்படம் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது’ எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. விஷ்ணுவும், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மலேசிய, குவைத் ஆடியன்ஸ் மன்னிக்கவும்’ என ட்வீட்டியிருக்கிறார். படத்தை புரோமோட் செய்யும் பொருட்டு ட்விட்டரில் தனது பெயரை இர்ஃபான் அஹமத் என மாற்றியிருக்கிறார். இது படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர். FIR இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து, நடித்திருக்கிறார். இப்படம் 22 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது … Read more

சன் பிக்சர்ஸ் – ரஜினி – நெல்சன் கூட்டணி… ஏப்ரலில் பூஜை, மே மாதம் படப்பிடிப்பு!

சன் பிக்சர்ஸ் இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறது என ட்விட்டரில் அறிவித்திருக்கிறது. இது பற்றி தயாரிப்புத் தரப்பில் விசாரித்தோம். அதற்கு முன்பாக, சன் பிக்சர்ஸ் இப்போது விஜய்யின் ‘பீஸ்ட்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ உள்பட பல படங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் ரஜினியை வைத்து படம் தயாரிக்கவிருப்பதாகவும் அதை ‘பீஸ்ட்’ நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்றும் சில நாள்களாகவே கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது. விஜய்யின் ‘பீஸ்ட்’ நூறாவது நாள் … Read more

ஹிஜாப்: `இது எங்கள் நாடு, எங்கள் பிரச்னை; பாகிஸ்தான் தலையிட வேண்டாம்!’ – அசாதுதீன் ஒவைசி

கர்நாடகாவில் பெரும் பரபரப்பாகி வரும் ஹிஜாப் பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக கல்லூரி ஒன்றில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்குள் வர அனுமதி மறுக்கப்பட, அதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகளால் தொடங்கப்பட்ட போராட்டமானது, பின்னர் இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கலவர நிலவரம் ஆனது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்திருக்கிறார். ஹிஜாப் சர்ச்சை அசாதுதீன் ஒவைசி, … Read more

Lock Upp: ஜெயிலுக்குள் 16 போட்டியாளர்கள்… கங்கனா ரணாவத்தின் புதுவிதமான ஓடிடி ரியாலிட்டி ஷோ!

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி தலைப்புச் செய்தியாகும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளார். அதிரடியான, புதுவகையான ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தும் ஹோஸ்ட்டாக அவர் பங்கேற்க உள்ளார். ரியாலிட்டி நிகழ்ச்சிகள், பிக் பாஸ் அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவில் வேறு வேறு பரிணாமங்களை எடுத்து வருகின்றன. அந்த வரிசையில் வரவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கங்கனா, படத்தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உடன் இணைந்திருக்கிறார். ‘Lock Upp’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஷோ எந்த … Read more

ஊசிப்புட்டான் | `அப்பாவ கொன்னவனுவள கொல்லனும்; அதுக்க முன்னாடி தயாராவனும்’| அத்தியாயம் – 21

ரவி கலெக்டர் ஆபிஸ் பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் ஒரு வாரம் முன்பு ஷாகுல் வெட்டப்பட்டு துடி துடித்து இறந்த இடத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்தது. `ஒரு வாரத்திக்க முன்ன ஒருத்தனை ஓட ஓட விரட்டிக் கொடூரமா கொன்னுப் போட்ட இடம் மாறியா இருக்கு…?’ ரவியின் மனது நினைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, `இதே மாறித் தான அப்பாவ கொன்னு பொட்ட எடத்துலயும் நடந்திருக்கும்…!’ நினைத்தபடியே கலெக்டர் ஆஃபீஸ் சந்திப்பைச் சுற்றி பார்வையை ஓடவிட்டான். ஒரு வாரத்திற்கு … Read more

அதிமுக வேட்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை! – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வெளியான தகவலில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36- வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க-வை சார்ந்த ஜானகிராமன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை ஜானகிராமன் … Read more

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலில் பரவும் புற்றுநோய்; காப்பாற்ற முடியுமா?

என் சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் வந்து வலது மார்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றினோம். ஆனாலும் பலனில்லை. தற்போது அவரது உடலில் புற்றுநோய் பரவுவதாகவும், காப்பாற்ற முடியாது என்றும் மருத்துவர் கூறுகிறார். இதற்குத் தீர்வு உண்டா…? – சிவகாமி பிரம்மநாயகம் (விகடன் இணையத்திலிருந்து) மருத்துவர் ரத்னாதேவி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ரத்னாதேவி. “உங்கள் சகோதரியின் வயது, புற்றுநோயின் எந்த ஸ்டேஜில் கண்டுபிடித்தார்கள், இதுவரை அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் என்னென்ன … Read more