இன்றைய ராசி பலன் | 08/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

பழநி: போலீஸ் எஸ்.எஸ்.ஐ உட்பட இருவருக்கு அரிவாள் வெட்டு; குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமா?!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சந்தானகிருஷ்ணன். இவர் பிப்ரவரி 6-ம் தேதி இரவு 11 மணியளவில் தாராபுரம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சாலையோரத்தில் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களில் சிலர் சந்தானகிருஷ்ணனின் நண்பர் ஆனந்தனை அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது அருகில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் தடுக்க முயன்றார். இதில் சந்தானகிருஷ்ணன் தலையில் பலத்த … Read more

“ஒவைசி கூடுதல் பாதுகாப்பை ஏற்க மறுத்துவிட்டார்!" – நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம்

ஐந்து மாநில சட்டபேரவைத் தேர்தையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், கிதாரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, டெல்லி திரும்பும் வழியில் அசாதுதீன் ஒவைசியின் காரை நோக்கி மர்ம நபர்கள் சுட்டதாகக் ஒரு தகவல் வெளியானது. அதனால், அவர் வந்த கார் பஞ்சர் ஆனதாகவும், அதன் பிறகு, தான் பாதுகாப்பாக மற்றொரு காரில் திரும்பியதாகவும் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். ஓவைசி இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் `இஸட்’ பிரிவு பாதுகாப்பு … Read more

`சூரியன் பிரகாசிக்க பிரதமருக்கு மட்டும் மோசமான வானிலை..!' – ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் தாக்கு

ஒட்டுமொத்த தேசமும் உற்றுநோக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7 -ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.‌ அதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்துப் பேசி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால் திடீரென, மோசமான வானிலை காரணமாகப் பிரதமர் மோடி பங்கேற்க … Read more

நகைச்சுவை நடிகர் சுனில் குரோவர் உடல்நலம்; டாக்டர்களிடம் சல்மான் கான் வைத்த கோரிக்கை!

சுனில் குரோவர் பாலிவுட்டின் நகைச்சுவை நடிகர். கபில் சர்மா டிவி நிகழ்ச்சி வழியாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர். Tandav, Sunflower, Bharat, Gabbar Is Back, The Legend of Bhagat Singh உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவற்றில் Bharat படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்தார். இதய நாளங்களில் அடைப்பு இருந்ததைத் தொடர்ந்து இவருக்கு ஜனவரி 27 இல் இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் கோவிட் பாசிட்டிவ் எனவும் மருத்துவர்கள் கூறினர். சில நாட்களுக்கு … Read more

பிரைம் டைம் பெருமாளு: `கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ' புலம்பும் நடிகை; அல்டிமேட் நபர் வாசித்த புகார்!

`கொஞ்சம் தாமதமாக என்ட்ரி தந்தார் பிரைம் டைம் பெருமாளு. சூடாக லெமன் டீயை நீட்டி விட்டு, ’24 மணி நேரமும் பி.பா. அல்டிமேட் பாத்திட்டிருக்கிறீர்போல, அதுக்காக ரெகுலர் வேலை மறக்கலாமா’ எனக் கேட்டோம்.`நல்லவேளை, அல்டிமேட்’ பத்தி ஞாபகப்படுத்துனீங்க. அதுல இருந்தே தொடங்கிடுறேன்’ என செய்திக்குள் இறங்கினார். அந்தாளுகூட எப்படிம்மா குடும்பம் நடத்துனீங்க‌? பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் வார எவிக்ஷனில் எலிமினேட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி, வெளியில் வந்ததும் தாடி பாலாஜியின் … Read more

`சுயேச்சையாக போனேன்; மக்கள் நீதி மய்ய வேட்பாளராகி வந்தேன்!' – நாமக்கல் தேர்தல் சுவாரஸ்யம்

தனது வார்டு பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது தெரியாமல் வேட்புமனு தாக்கல் செய்யப் போயிருக்கிறார் ஓய்வுபெற்ற பெண் ஆய்வாளர் ஒருவர்; செய்வதறியாது நின்ற அவர் திடீரென்று (வேறு வார்டில்) மக்கள் நீதி மய்ய வேட்பாளராகியிருக்கிறார். இந்த சுவாரஸ்ய சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் ஜெயந்தி தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, பிரதானக் கட்சிகள், சுயேச்சைகள், சமூக ஆர்வலர்கள், லெட்டர் பேடு கட்சிகள் எனப் பல தரப்பும் வேட்பாளர்களை … Read more

பீஸ்ட் மோட்: இன்று வெளியாகப்போகும் அப்டேட் இதுதான்!

விஜய்யின் ‘பீஸ்ட்’ புரோமோஷன்ஸ் டேக் ஆஃப் ஆகிவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே முதன்முறையாக இணையும் படம் ‘பீஸ்ட்’. இதன் ரிலீஸ் வருகிற ஏப்ரல் 14ம் தேதி என்கிறார்கள். இந்நிலையில் இன்று படத்தின் அப்டேட் லோடிங் என அறிவித்திருக்கிறர்கள். இன்று மாலை படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. இந்த அப்டேட் குறித்தும் படத்தின் இதர தகவல் குறித்தும் படத்தின் தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்தோம் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் … Read more

How to: உடல் எடையைக் குறைப்பது எப்படி? | How to reduce weight with lifestyle changes?

உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளால் ஏற்படும் பாதிப்பு என்பது உடையின் அளவை அதிகரிப்பதில் ஆரம்பித்து உடலில் உருவாகும் பல நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. நாம் சாப்பிடும் உணவில் ஆரம்பித்து, வாழ்க்கை முறை மாற்றங்கள் வரை உடலில் கொழுப்பு சேர்வதற்கு பல காரணிகள் உள்ளன. பலரும் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், `என்ன செய்தாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது’ என்று சிலர் வெயிங் ஸ்கேலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தேவையற்ற கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்கப் … Read more