முறிந்த சிறகுகள் #WorldCinema #MyVikatan
எகிப்திய திரைப்படமான ‘ஃபெதர்ஸ்’ வறுமைக்குள் பிழைத்துக் கிடத்தல் என்கிற உயிர்வாழ்வு பற்றிய கதை. ’அபத்தம்’, ’காமெடி’ ஆகிய வார்த்தைகள் மனித நிலையை நையாண்டி செய்யும் ஒரு வகை திரைப்படங்களை விமர்சிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுவது வழக்கம். எகிப்திய திரைக்கலைஞரான ஓமர் எல் ஜோஹேரியின் இந்தப் படைப்பு அதுபோன்ற வார்த்தைகளைப் பொய்யாக்கி, ஒரு சினிமா பற்றிய அனுமானங்களைத் தகர்த்துவிட்டது. ஆண்களால் நடத்தப்படும் உலகில் ஓர் ஏழைப் பெண் திடீரென்று அதீத துக்கத்துக்கு ஆளாவதைப் பற்றிய ஒரு துரதிர்ஷ்டவசமான படம் இது. … Read more