பிரைம் டைம் பெருமாளு: `கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ' புலம்பும் நடிகை; அல்டிமேட் நபர் வாசித்த புகார்!

`கொஞ்சம் தாமதமாக என்ட்ரி தந்தார் பிரைம் டைம் பெருமாளு. சூடாக லெமன் டீயை நீட்டி விட்டு, ’24 மணி நேரமும் பி.பா. அல்டிமேட் பாத்திட்டிருக்கிறீர்போல, அதுக்காக ரெகுலர் வேலை மறக்கலாமா’ எனக் கேட்டோம்.`நல்லவேளை, அல்டிமேட்’ பத்தி ஞாபகப்படுத்துனீங்க. அதுல இருந்தே தொடங்கிடுறேன்’ என செய்திக்குள் இறங்கினார். அந்தாளுகூட எப்படிம்மா குடும்பம் நடத்துனீங்க‌? பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் வார எவிக்ஷனில் எலிமினேட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி, வெளியில் வந்ததும் தாடி பாலாஜியின் … Read more

`சுயேச்சையாக போனேன்; மக்கள் நீதி மய்ய வேட்பாளராகி வந்தேன்!' – நாமக்கல் தேர்தல் சுவாரஸ்யம்

தனது வார்டு பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது தெரியாமல் வேட்புமனு தாக்கல் செய்யப் போயிருக்கிறார் ஓய்வுபெற்ற பெண் ஆய்வாளர் ஒருவர்; செய்வதறியாது நின்ற அவர் திடீரென்று (வேறு வார்டில்) மக்கள் நீதி மய்ய வேட்பாளராகியிருக்கிறார். இந்த சுவாரஸ்ய சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் ஜெயந்தி தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, பிரதானக் கட்சிகள், சுயேச்சைகள், சமூக ஆர்வலர்கள், லெட்டர் பேடு கட்சிகள் எனப் பல தரப்பும் வேட்பாளர்களை … Read more

பீஸ்ட் மோட்: இன்று வெளியாகப்போகும் அப்டேட் இதுதான்!

விஜய்யின் ‘பீஸ்ட்’ புரோமோஷன்ஸ் டேக் ஆஃப் ஆகிவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே முதன்முறையாக இணையும் படம் ‘பீஸ்ட்’. இதன் ரிலீஸ் வருகிற ஏப்ரல் 14ம் தேதி என்கிறார்கள். இந்நிலையில் இன்று படத்தின் அப்டேட் லோடிங் என அறிவித்திருக்கிறர்கள். இன்று மாலை படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. இந்த அப்டேட் குறித்தும் படத்தின் இதர தகவல் குறித்தும் படத்தின் தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்தோம் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் … Read more

How to: உடல் எடையைக் குறைப்பது எப்படி? | How to reduce weight with lifestyle changes?

உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளால் ஏற்படும் பாதிப்பு என்பது உடையின் அளவை அதிகரிப்பதில் ஆரம்பித்து உடலில் உருவாகும் பல நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. நாம் சாப்பிடும் உணவில் ஆரம்பித்து, வாழ்க்கை முறை மாற்றங்கள் வரை உடலில் கொழுப்பு சேர்வதற்கு பல காரணிகள் உள்ளன. பலரும் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், `என்ன செய்தாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது’ என்று சிலர் வெயிங் ஸ்கேலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தேவையற்ற கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்கப் … Read more

மதுரை: “வாடிப்பட்டி பேரூராட்சி வேட்பாளரை கடத்திட்டாங்க'' – ஆர்.பி.உதயகுமார் தலைமையில் போராட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 9-வது வார்டு பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்தி விட்டதாக அ.தி.மு.கவினர் புகார் எழுப்பி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவினர் போராட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க போட்டியிடுகின்றன. இதில் 9-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணியை எதிர்த்து அதிமுக சார்பாக இந்திராணி போட்டியிடுகிறார். இந்த வார்டில் இருவர் மட்டும் வேட்பு … Read more

`இதுதான் இந்தியா' – வைரலாகும் ஷாருக் கான் புகைப்படம்; பின்னணி இதுதான்!

லதா மங்கேஷ்கர், இந்தியாவின் நைட்டிங்கேல், பிரபல பாடகி தன்னுடைய 92 வயதில் நேற்று பிப்ரவரி 6, காலை 8:12 மணிக்கு மறைந்தார். அவரது மறைவோட்டி இரண்டு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க உள்ளதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி மகாராஷ்ட்ராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே, அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்திருந்தனர். சச்சின் டெண்டுல்கர், ஜாவேத் அக்தர், அனுபம் கெர், இயக்குநர் சஞ்சய் … Read more

2,000 ஆண்டுப் பழைமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் ஒரு பார்வை!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அதற்கு முன்னதாக கடந்த 3-ம் தேதி தருமபுரம் 27-வது அதீனம் குருமகா … Read more

`பிரதமர் ஆசையா, ஆட்சியைத் தக்கவைக்கவா…' – மோடி அரசை சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சிப்பது ஏன்?

அதிரடி அரசியலையும் கே.சி.ஆர் என அழைக்கப்படும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவையும் பிரித்துப் பார்க்கமுடியாது. தடாலடியான பேச்சுக்களால் அவரின் பெரும்பாலான பிரஸ்மீட்கள் சரவெடி ரகம்தான். தான் எதிரியாகக் கருதுபவர்களின்மீது வார்த்தை அம்புகளைத் தொடுப்பதில் கே.சி.ஆரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்கவேண்டும் என மத்திய அரசு சொல்ல, அதற்கு “எந்த முட்டாள் வரியை ஏற்றினார்களோ அவர்கள்தான் குறைக்கவேண்டும்” என்கிற கே.சி.ஆரின் பதிலடி தெலங்கானா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் … Read more

''தேசிய அரசியலில், 'ஒற்றை நாயனம்' வாசிக்க சில கட்சிகள் முயற்சி'' – யாரைச் சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியின் தொடர்ச்சி….. Also Read: ”கூட்டணி என்றாலே மகிழ்ச்சியும் நெருடலும் இருக்கத்தான் செய்யும்!” – ஒப்புக்கொள்கிறார் கே.எஸ்.அழகிரி ”கடந்த சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது, தமிழகக் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வருத்தத்துக்குள்ளானது வெளிப்படையாகத் தெரிந்ததே?” ”அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நாங்கள் கேட்ட தொகுதிகளை எல்லாம் கொடுத்தார்கள். தேர்தலின்போதும் நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்திப் பிரசாரம் செய்தார். போட்டி கடுமையாக இருந்த சில தொகுதிகளை நாங்கள் குறிப்பிட்டுச் சொன்னபோது, … Read more

வார ராசிபலன்

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 7 முதல் 13 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி. மேஷ ராசி அன்பர்களே! பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய வாரம். கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை யும், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, … Read more