மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும் உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்- உசிலம்பட்டியில் மிஷ்கின்

மணிகண்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த படம் கடைசி விவசாயி. அந்நப் படத்தை பார்த்த மிஷ்கின் இயக்குநர் மணிகண்டனைச் சந்திப்பதற்காக மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்குச் சென்றார். அதைப் பற்றிய பதிவு ஒன்றை மிஷ்கின் வெளியிட்டிருக்கிறார். “கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன். மணிகண்டா படத்தின் கதையின் … Read more

"அணியில் இனி என்றைக்கும் இடமில்லை என்றார்கள்"- சாஹாவின் குற்றச்சாட்டும், டிராவிட்டின் பதிலும்!

இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை சமீபத்தில் அறிவித்திருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். விராட் கோலிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கபட்டுள்ள நிலையில், இத்தொடரில் பல்வேறு சீனியர் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரித்திமான் சாஹா | Wriddhiman Saha தொடர் ஃபார்ம் அவுட் காரணமாக இடம்பெறாத அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா தங்கள் பழைய ஃபார்மை மீட்க தற்போது ரஞ்சி தொடரில் அவரவர் அணிகளுக்காக ஆடிவருகிறார்கள். இஷாந்த் ஷர்மா அணியில் … Read more

தோனிக்கு `ஆக்ஷன்' சொன்ன விக்னேஷ் சிவன்… சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தோனியை வைத்து ஒரு ஸ்பெஷல் வீடியோ இயக்கியிருக்கிறார். தோனியின் பரம ரசிகரான விக்னேஷ் சிவன் அது பற்றி ஒரு பதிவும் வெளியிட்டிருக்கிறார். “என் அம்மாதான் சென்னைக்கு வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு பொறுப்பில் இருந்தார். அதனால் எனக்கு விளையாட்டு வீரர்கள் பலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களோடு அருகில் சென்று பேசும் வாய்ப்பும் வந்தது. அதற்கு என் அம்மாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். நான் அம்மா செல்லும்போது அவர் பின்னாடி சென்று … Read more

குறளோவியம் – தமிழக அரசின் ஓவியக் காலண்டர்; 365 மாணவர்களின் ஓவியங்கள்!

“தீராக்காதல் திருக்குறள்” திட்டத்திற்குத் தமிழக அரசு ஒருகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திருக்குறளை பல்வேறு வகைகளில் இளம் சமூகத்திடம் கொண்டுசேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே 1330 திருக்குறளை மனப்பாடம் செய்தவர்களுக்கு பரிசுகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் மாதம் “குறளோவியம்” என்கிற தலைப்பில் திருக்குறளை மையமாக வைத்து ஓவியப்போட்டியை நடத்தினார்கள். தமிழ் வளர்ச்சித்துறையின்கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் இந்த ஓவியப் போட்டியை … Read more

"எப்போ திரும்பவும் டைரக்ஷன் பண்ணப் போறீங்க சசி?"- மும்பையில் சந்தித்த அனுராக் காஷ்யப் – சசிகுமார்

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யபுக்கு தமிழ் சினிமாவின் மேல் எப்போதும் தனி ஆர்வம் உண்டு. குறிப்பாக இயக்குநர்கள் பாலா, சசிகுமார், அமீர் ஆகியோர் இயக்கிய படங்கள் குறித்து எப்போதும் சிலாகித்துப் பேசுவார். தன்னுடைய கல்ட் க்ளாசிக் படமான ‘கேங்ஸ் ஆஃப் வஸேபூர்’ படம் உருவாகப் பெரிய இன்ஸ்பிரேஷன் இவர்கள்தான் என நிறையப் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். தன்னுடைய படங்களில் அவர்களுக்கு ‘தேங்க்ஸ்’ கார்டும் போட்டிருக்கிறார். இவர்களுக்குள் நல்ல நட்பும் நிலவி வருகிறது. It’s ten years of … Read more

“அதிமுக-வோ  அடையாளம்; சினிமாவிலோ அதிகாரம்”- `அசுர வளர்ச்சி' அன்புச் செழியன்!

அ.தி.மு.க வில் மாவட்ட அளவிலான பொறுப்பில் உள்ள ஒருவரின் இல்லத் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர்கள் முதல் இந்நாள் முதல்வர் வரை வருகை தருகிறார்கள். கோலிவுட்டின் உச்ச நடிகர்களும் விருந்தினர்களாக இந்தத் திருமணத்தில் கலந்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செல்வாக்குடன் நடந்த திருமணம் சினமா பைனான்சியர் அன்புசெழியன் மகள் திருமணம். சுஷ்மிதா- சரண் திருமணத்திற்கு வந்த திரைத்துறையினர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதைவிட மணமகளின் அப்பாவான அன்புசெழியனிடம் தங்கள் வருகையை உறுதிசெய்வதில் தான் குறியாக இருந்தனர். திரைத்துறைக்குள் தனி சாம்ராஜ்யத்தை அன்புசெழியன் கட்டமைத்திருப்பது … Read more

"கமலும் நானும் கட்டிப்புரண்டு சண்டை போட்டோம்!"- `மூன்றாம் பிறை' நினைவுகள் பகிரும் கே.நட்ராஜ்

டபாலுமகேந்திரா- கமல் கூட்டணியில் வெளியினா ‘மூன்றாம் பிறை’ இன்று நாற்பாதாண்டு கொண்டாடுகிறது. அதில் கே.நட்ராஜும் கொல்லன் பட்டறையில் வேலை செய்பவராக நடித்திருப்பார். ரஜினியின் நெருங்கிய நண்பர். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘வள்ளி’ படங்களின் இயக்குநர் இவர். ஒரு காலத்தில் வில்லன் நடிகர்.. இப்போது சின்னத்திரையிலும் நடித்து வரும் கே.நட்ராஜிடம் பேசினேன். ”இப்பத்தான் நடிச்சது மாதிரி இருக்கு. நாற்பது வருஷம் ஆகிடுச்சுனு நினைக்குறப்ப, காலம் எவ்ளோ வேகமா ஓடுதுனு நினைக்க வச்சிடுச்சு. சத்யா மூவீஸோட ‘ராணுவ வீரன்’ல நடிச்சிட்டு இருந்தேன். … Read more

ஆந்திர மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்!

ஆந்திர மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். மேகபதி கவுதம் ரெட்டிக்கு திடீரென நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆந்திர அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி துபாயில் இருந்து அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் மேகபதி … Read more

Ind vs WI: பூரனுக்கு மூன்றாவது அரைசதம், இந்தியாவிற்கு மூன்றாவது வெற்றி!

மூன்றாவது டி20 போட்டியையும் வென்று மேற்கிந்திய தீவுகள் அணியை வழி அனுப்பியிருக்கிறது இந்திய அணி. முந்தைய போட்டிக்கும் இப்போட்டிக்கும் அவ்வளவு வித்தியாசம் ஏதுமில்லை. மிடில் ஓவர்களில் குறைந்த ரன் ரேட்டினை சென்ற ஆட்டத்தில் பன்ட்டும் வெங்கடேஷும் சரி செய்ததுபோல இம்முறை சூர்யகுமாரும் வெங்கடேஷும் சரி செய்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகளின் தொடக்க பேட்டர்கள் வழக்கம்போல சொதப்ப இப்போட்டியிலும் அரைசதம் அடித்து அந்த அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார் பூரன். இத்தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது … Read more

`பிராய்லர் கோழி புரட்சி'க்கு காரணமான அமெரிக்க பெண்மணி; ஒற்றை பூஜ்யத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்!

இன்று சிக்கன் என்றழைக்கப்படும் பிராய்லர் கோழி இறைச்சி நீக்கமற எல்லா ஊர்களிலும் இருக்கிறது. குக்கிராமங்களிலும் கறிக்கோழிக் கடைகளைக் காண முடிகிறது. நகரங்களில் கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், பிரியாணி, பெப்பர் சிக்கன் என்று பல வடிவங்களில் கோழி இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் கறிக்கோழி உற்பத்தியில் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்தக் கறிக்கோழி இறைச்சி மூலம் பல லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதற்கு முதன்முதலில் வித்திட்டவர் ஒரு பெண்மணி என்றால் … Read more