நாடோடிச் சித்திரங்கள்: `சிந்து நதிக்கரையின் கதைகளும் இலக்கியப் பின்னணியும்’ | பகுதி 22
படின்டா – ஹிமாச்சல் பகுதிகளின் குளிர்கால முற்பகல் வேளைகள் ரம்மியமானவை. சூரியனின் வெப்பக் கரங்கள் உடலைத் தீண்டி இதம் தந்துவிடாதா என்ற ஏக்கத்தில் நாங்கள் அனைவரும் ஹர்ப்ரீத்தின் கீரைத் தோட்டத்தில் தேநீருக்காகக் கூடுவது வழக்கம். ஹர்ப்ரீத் புதிதாக மணமுடித்து வந்து சில நாள்களே ஆகியிருந்தன. ஹர்ப்ரீத் தன் தோட்டத்தில் பாலக்கீரை, முள்ளங்கிம் பச்சைப் பட்டாணி பயிரிட்டிருந்தாள். இளம்பச்சை நிற இலைகள்மீது படர்ந்திருந்த பனித்துளிகள் சிதறிவிடாதபடி பக்குவமாக ஒவ்வோர் இலையாகக் கொய்து, அவற்றை அவள் இறுகக் கட்டும் அழகை … Read more