இன்றைய ராசி பலன் | 10/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

“கிரீடமோ, ஹிஜாபோ அவரவர் உரிமை… மதவெறியால் மாணவர்களை துண்டாடாதீர்கள்!" – சு.வெங்கடேசன் சுளீர்

கர்நாடகாவில் தொடங்கி நாடுமுழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆவேசமாகப் பேசினார். ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதை முன்வைத்து நடைபெறும் வெறுப்பு அரசியலால், கலந்துரையாடி சமூகமயமாக வேண்டிய மாணவ சமூகம் கூறுபோடப்படுகிறது. யாருடைய உத்தரவின் பேரில் ஹிஜாப் அணிவதும், கிரீடம் அணிவதும் நடக்க வேண்டும்? பள்ளிக்குழந்தைகள் என்ன நாடகம் போட வேண்டும்? என்ன ஆடை அணிய வேண்டும் … Read more

நெல்லை: மணல் கடத்தலில் கைதான கேரள பாதிரியார்கள்; ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள பொட்டல் கிராமத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சிரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் மானுவேல் ஜார்ஜ் என்பவருக்கு அந்த நிலத்தில் எம்-சாண்ட் தயாரிக்க ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. Also Read: நெல்லை: மாநகராட்சி சி.இ.ஓ ராஜினாமா ஏன்? மணல் கடத்தல் வழக்கில் சிக்குவார்களா அதிகாரிகள்?! செயற்கை மணலான எம்-சாண்ட் … Read more

நாகர்கோவில்: தனித்துப் போட்டியிடும் சி.பி.எம் கட்சிக்கும் சேர்த்து வாக்கு சேகரித்த கே.எஸ்.அழகிரி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கன்னியாகுமரி மாவட்டம் வந்திருந்தார். நாகர்கோவிலில் பிரசாரத்தைத் தொடங்கிய கே.எஸ்.அழகிரி வேப்பமூடு சந்திப்பில் நாகர்கோவில் மாநகராட்சி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். கே.எஸ்.அழகிரி பேசும்போது, “நாடாளுமன்றத்தில் பிரதமர் மேடைப்பேச்சாளர் போன்று பேசியிருக்கிறார். நேரு, மொராய் தேசாய், இந்திராகாந்தி, மன்மோகன்சிங் போன்ற பெருமைமிக்க தலைவர்களை பார்த்த நாடாளுமன்றத்தில் கீழ்த்தரமாக பிரதமர் மோடி பேசியுள்ளார். வருங்கால இந்திய சமுதாயம் மோடி பேச்சை படித்துபார்த்தால் … Read more

“தமிழகத்தின் நதிநீர் இணைப்பு திட்டத்தை எதிர்க்கிறோம்!" – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

குண்டாறு, வைகை நதிகளை இணைக்கும் தமிழகத்தின் திட்டத்துக்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை Also Read: மேக்கேதாட்டூ அணைக்கு விரைவில் அனுமதி? மத்திய அமைச்சரின் சூசக பதிலால் கொதிக்கும் தமிழக விவசாயிகள்! மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்திய பின்னர், டெல்லியில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “நிலம் மற்றும் நீர் தொடர்பான மாநில நலன்களை பாதுகாப்பதில் கர்நாடகா எப்போதும் ஒன்றுபட்டிருக்கும். எங்கள் … Read more

ஹிஜாப் விவகாரம்; வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது கர்நாடகா உயர் நீதிமன்றம்!

கர்நாடக மாநிலம் குண்டபுராவில் உள்ள பியூ அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் தடைவிதித்திருந்தது. அதையடுத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் கல்லூரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திவந்தனர். ஆனால், இந்த போராட்டமானது தற்போது இந்து மாணவ மாணவிகளின் பலத்த எதிர்ப்பின் காரணமாக மதக்கலவரமாக மாறும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நேற்று கூட கர்நாடகாவில், கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த மாணவியை, இந்து மாணவர்கள் கூட்டமாக நின்று கோஷமிட்டது பெரும் … Read more

`ஸ்மார்ட் கழிவுத்தொட்டி; காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பம்!"-மநீம தேர்தல் வாக்குறுதிகள்

தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை முடிந்து, அனைத்து நகர்ப்புற வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் முன்னதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும், அவரவர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தனது … Read more

"கொஞ்சம் கஷ்டம்தான் வாழ்வதும் வாழ விடுவதும்…" – உடல் குறித்த கேலிக்கு காஜல் அகர்வாலின் பதிவு!

காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு பல படங்களில் நடித்தவர். தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்தார். கடந்த வருடம் அக்டோபரில் கௌதம் கிச்சலு-காஜல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது தன் புகைப்படத்துடன் காஜல் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர் எழுதியுள்ள பதிவின் தமிழாக்கம் இதோ, ” இந்த வாழ்க்கையில், என் உடலில் என் வீட்டில் மிக … Read more

திருமணமாகாததால் குடித்துவிட்டு தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் கொலை செய்த தாய்! – என்ன நடந்தது?

தஞ்சாவூர் அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமணி (36). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லைவில்லையாம். அதனால், தனக்கு திருமணம் செய்து வைக்காததால் வைரமணி தினமும் குடித்து விட்டு வந்து தன் தாய் மாரியம்மாள் (60), அண்ணன் முத்தமிழ் ராஜா (40) ஆகிய இருவரிமும் சண்டையிட்டு வந்திருக்கிறார். வைரமணி அந்த வகையில், நேற்று முன் தினம் இரவும் மது போதையில் வைரமணி இருவரிடமும் சண்டையிட்டதாக தெரிகிறது. அதில், ஆத்திரமடைந்த அண்ணன் மற்றும் தாய் இருவரும் வைரமணியை … Read more

ஸ்போர்ட்ஸ் மேன்; பீமன்; பீம்பாய்… – மறைந்த நடிகர் பிரவீன் குமார் பற்றி நடிகர் சிவாஜி!

கமல் நான்கு வேடங்களில் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் பீம்பாய் ஆக நடித்த பிரவீன் குமார் சோப்தி தனது 74-ம் வயதில் நேற்று மரணமடைந்தார். பிரவீன் குமார் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன். அத்லெட்டிக்களில் கலக்கியவர். 1960 காலகட்டங்களில் டிஸ்கஸ் த்ரோவில் தங்க மெடல்களை குவித்தவர். அதன்பின் இந்தியில் `ரக்‌ஷா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து இந்தியில் நடித்து வந்தார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான `மகாபாரதம்’ தொடரில் பீமனாக நடித்ததன் மூலம், பிரபலம் அடைந்தார். அதனால் தான் … Read more