“காங்கிரஸில் சேர, பிரசாந்த் கிஷோர் என்னை கிட்டதட்ட 60 முறை சந்தித்தார்!” – சொல்கிறார் சித்து

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கும், அப்போது முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. தற்போது அமரீந்தர் சிங் புதிய கட்சி துவங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சன்னியை அறிவித்துள்ளார் ராகுல் காந்தி. ராகுல் – … Read more

“நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்; தயவு செய்து எழுந்திருங்கள்!” – மோடிக்கு ராகுல் பதில்

“நீங்கள் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது: என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்து இருக்கிறார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராகப் பிரதமர் மோடி சில கருத்துக்களை முன்வைத்தது அடுத்து ராகுல்காந்தி அவருக்குப் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எனது தாத்தா தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர். பிரதமர் மோடி என் தாத்தாவைப் பற்றி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. ராகுல் காந்தி – நாடாளுமன்றம் பிரதமர் … Read more

இன்றைய ராசி பலன் | 09/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

ஹிஜாப் விவகாரம்: மக்களவையில் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்!

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை அந்த குறிப்பிட்ட கல்லூரிக்கு ஒரு முஸ்லிம் மாணவி ஹிஜாபுடன் நுழைவதைக் கண்ட 50-க்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள், அந்தப் பெண்ணை நோக்கி `ஜெய் ஶ்ரீராம்’ என கோஷமிட்டனர். அந்த பெண்ணும் பதிலுக்கு `அல்லாஹு அக்பர்’ எனக் கோஷமிட, அவரை `ஜெய் ஶ்ரீராம்’ என கோஷமிட்டபடி இந்து மாணவர்கள் தொடர்ந்து சென்றனர். பின்னர், … Read more

போலியோ சொட்டு மருந்து முகாம் எப்போது? – மத்திய அரசு தகவல்!

உலகின் பல்வேறு நாடுகளிலும் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த போலியோ வைரஸை அளிக்க முடியாது. ஆனால், செயலிழக்கச் செய்து கட்டுப்படுத்த முடியும். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க போலியோ சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் போலியோவை ஒழிக்க ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வருடம் இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 2014-ம் … Read more

போதையில் தகராறு செய்த கணவன்; கொன்று புதைத்த மனைவி – 11 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியது எப்படி?!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஜமீன் குளத்தூர் அடுத்த குஜராம்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மனைவி ஜெயந்தி. கடந்த 2011-ம் ஆண்டு குணசேகரனைக் காணாததால் அவர் தங்கை லட்சுமி, அவரின் அண்ணியான ஜெயந்தியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயந்தி, அவர் கேரளாவிற்கு வேலைக்குச் சென்றிருப்பதாகக் சொல்லியிருக்கிறார். ஆனால், பத்து ஆண்டுகளாகியும் இதுவரையிலும் தன் அண்ணன் வரவில்லையே என்று லட்சுமி கேட்க மழுப்பலாக பதில் சொல்லியிருக்கிறார். அரியலூர் இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி இரண்டு நாள்களுக்கு முன்பு ஆண்டிமடம் காவல் … Read more

`இந்தியாவில் சிலீப்பர் செல்கள்?!’ – தாவூத் இப்ராகிம், சோட்டா சகீல் மீது புதிய வழக்கு பதிந்த என்.ஐ.ஏ

மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்திய தாவூத் இப்ராகிமும், அவனின் கூட்டாளிகளும் பாகிஸ்தானில் மறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. மத்திய அரசு தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருக்கிறது. தற்போது தாவூத் இப்ராகிம், அவனின் கூட்டாளிகள் சோட்டா சகீல் உட்பட 5 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி புதிதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. தாவூத் கும்பல் இந்தியாவில் … Read more

நீட் விலக்கு மசோதா: `நீட் என்பது தேர்வு இல்லை… பலிபீடம்!’ – முதல்வர் ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்

மு.க.ஸ்டாலின் “சில மாணவர்களைக் கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” ஸ்டாலின் ஆவேசம் “ஒரு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி , அதை ஒரு ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியுமென்றால் மாநிலங்களின் கதி என்ன?” பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் “நீட் தேர்வு என்பது பணக்கார நீதியைப் பேசுகிறது. அரசியல் அமைப்பு என்பதே சட்டத்தின் நீதியைப் பேசுகிறது.” சட்டசபையில் முதலவர் மு.க ஸ்டாலின் “நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்தால் உருவானது இல்லை. நீட் தேர்வு தேவை என்பது … Read more