Samuthirakani: “கனி அண்ணே! இன்னைக்கு இந்த மேடையில…'' – நெகிழ்ந்த முத்துக்குமரன்

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கிற `ராமம் ராகவம்’ திரைப்படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களான தீபக், முத்துக்குமரன் என இருவரும் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தீபக், “என்னுடைய குருநாதர் சமுத்திக்கனி சார் இயக்கிய சீரியல்லதான் முதன் முதலாக நான் நடிக்க ஆரம்பிச்சேன். சின்னத்திரையில ஒரு வெற்றி இயக்குநராக வலம் வந்தாரு. அதன் பிறகு சினிமாவுக்குப் … Read more

'என்னைச் சோதிக்காதீர்கள் டு நான் ஒரு சாதாரண தொண்டன்' பின்வாங்கும் செங்கோட்டையன்?!'

எடப்பாடிக்கு பாராட்டு விழா… தவிர்த்த செங்கோட்டையன் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்துக்கொள்ளவில்லை. இது அ.தி.மு.க-வுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு – அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்கள் வைக்கப்படாததால் பங்கேற்கவில்லை” என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது அ.தி.மு.க-வுக்குள் புயலைக்கிளப்பியது. இதற்கு … Read more

Madharasi: "வடஇந்தியர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பேசுகிறது படம்'' – ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘மதராஸி’ எனத் தலைப்பு வைத்து டைட்டில் டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. இத்திரைப்படம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் டைம் ஆஃப் இந்தியாவுக்குச் சிறிய நேர்காணல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இத்திரைப்படம் எப்படியானது, எஸ்.கே-வின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் எனப் பலருக்கு இருக்கும் கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறார். அந்த நேர்காணலில் ஏ.ஆர். முருகதாஸ், “வட இந்தியர்களின் பார்வையிலிருந்து படத்தின் கதை தொடங்கும். தென் இந்தியர்களை வட இந்தியர்கள் `மதராஸி’ என்ற … Read more

`இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது; பின், எதற்கு நம் டாலர்கள்?!' -எலான் மஸ்க்கை வழிமொழியும் ட்ரம்ப்

சமீபத்தில் தொழிலதிபர் மற்றும் அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் அங்கம் வகிக்கும் எலான் மஸ்க், ‘இதுவரை இந்தியாவின் வாக்களிக்கும் சதவிகிதத்தை அதிகரிக்க அமெரிக்கா இந்தியாவிற்கு தந்து வந்த 21 மில்லியன் டாலர் நிதியை நிறுத்துவதாக’ அறிவித்திருந்தார். இதற்கு வழிமொழிவதைப் போல், நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இந்தியாவிற்கு எதற்காக நாம் 21 மில்லியன் டாலர்கள் தருகிறோம்? அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. உலகிலேயே அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. அதிக வரி காரணத்தால் … Read more

Vijay: “விஜய் தனியாக `CBSE' பள்ளி நடத்துகிறார், அதில் இந்தி…'' -பாஜக அண்ணாமலை கேள்வி

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம்’ என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ‘த.வெ.க’ தலைவர் விஜய், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையையும், இந்தித் திணிப்பையும் … Read more

Health: வியர்க்க… விறுவிறுக்க… வியர்வைப் பற்றிய A to Z தகவல்கள்!

உச்சி வெயிலில் கூட சிலருக்கு வியர்க்காது. ஏசி குளிரிலும் கர்ச்சீப்பால் முகம் துடைத்தபடி இருப்பது சிலரது வழக்கம். பொதுவாக வியர்வை என்றாலே, நினைவுக்கு வருவது அருகில் இருப்போரை முகம் சுளிக்க வைக்கும் அதன் வாசனைதான். வியர்வை ஏன் வருகிறது? எல்லோருக்கும் அது ஏன் ஒரே மாதிரியாக இல்லை?  கேள்விகளை, நாளமில்லா சுரப்பி நிபுணர் (Endocrinologist) ராம் மகாதேவன் முன் வைத்தோம். “நமது உயிரைக் காப்பதில் வியர்வைக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. வெப்பத்தால் உடலில் உள்ள உறுப்புகள் … Read more

'ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்துக்கும் எதிரான தாக்குதல்!' – விகடன் குழும ஆசிரியர் அறிவழகன்

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட விகடன் குழும ஆசிரியர்களுள் ஒருவரான அறிவழகன், இந்த விவகாரத்தில் விகடன் தரப்பு நியாயத்தை கூர்மையாக முன்னெடுத்து வைத்தார். ஆர்ப்பாட்டம் Vikatan Cartoon: விகடனில் வெளியாகி தாக்கத்தை … Read more

`கேலிச்சித்திரத்துக்கு எதிரான அதிகார பிரயோகம் நகைச்சுவையாக மாறிவிடும்'- கார்ட்டூனிஸ்ட் பாலா

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் பத்திரிகையாளர் மணிமாறன் ஆகியோரின் கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவான செறிவுமிக்க பேச்சு இங்கே. கார்ட்டூனிஸ்ட் பாலா கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், “கார்ட்டூன் என்பது ஒரு … Read more

"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது…" – உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்’ என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, … Read more

Sundara Travels 2: `டேய் அழகா…!'-கருணாஸ் – கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் சுந்தரா டிராவல்ஸ் 2

முரளி – வடிவேலு கூட்டணியில் உருவாகி கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `சுந்தரா டிராவல்ஸ்’. இப்படத்தின் காமெடி எலமென்ட்டுகள் பலருக்கும் அவ்வளவு ஃபேவரைட். `ஈ பறக்கும் தளிகா’ என்ற மலையாளப் படைப்பின் தமிழ் ரீமேக்தான் `சுந்தரா டிராவல்ஸ்’. அப்படத்தின் ரசிகர்களுக்கு தற்போது ஒரு ட்ரீட் மெசேஜ் வந்திருக்கிறது. Sundara Travels 2 Team இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. தற்போது அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்துக்கு … Read more