"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது…" – உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்’ என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, … Read more

Sundara Travels 2: `டேய் அழகா…!'-கருணாஸ் – கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் சுந்தரா டிராவல்ஸ் 2

முரளி – வடிவேலு கூட்டணியில் உருவாகி கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `சுந்தரா டிராவல்ஸ்’. இப்படத்தின் காமெடி எலமென்ட்டுகள் பலருக்கும் அவ்வளவு ஃபேவரைட். `ஈ பறக்கும் தளிகா’ என்ற மலையாளப் படைப்பின் தமிழ் ரீமேக்தான் `சுந்தரா டிராவல்ஸ்’. அப்படத்தின் ரசிகர்களுக்கு தற்போது ஒரு ட்ரீட் மெசேஜ் வந்திருக்கிறது. Sundara Travels 2 Team இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. தற்போது அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்துக்கு … Read more

விகடன் இணையதள முடக்கம்: “மொத்த கலை வெளிப்பாட்டுக்கும் அச்சுறுத்தல்!'' -ஓவியர் ராமமூர்த்தி கண்டனம்

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கை கருத்துச் சுந்ததிரத்துக்கு எதிரானது என அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர் என பலதரப்பினரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இந்தச் சம்பவத்திற்கு ஓவியர் ராமமூர்த்தி, “பாரம்பரியம் கொண்ட விகடன் ஊடகத்தின் இணையதளத்தை ஒன்றிய அமைச்சர், பாஜகவின் வேண்டுகோளுக்காக … Read more

Santhosh Narayanan: `கண்ணாடி பூவே' இதுதான் நான் பண்ண விரும்பும் பாடல் – சந்தோஷ் நாராயணன்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஒருபக்கம் ‘சூர்யா 44’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள், இன்னொரு பக்கம் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சூர்யா 45’க்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் மும்முரமாகியிருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 வது படமான ரெட்ரோவில்  பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், ‘டாணாக்காரன்’ தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர்.  ரெட்ரோ சந்தோஷ் நாரயணின் இசையில் ‘love laughter war’ என காதலும், கோபமுமாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. … Read more

Vikatan Cartoon Row : வாசகர்களாகிய உங்களின் கேள்விகளும், விரிவான பதில்களும்! | Detailed FAQ

விகடன் ப்ளஸ் இதழில் வெளியான அரசியல் கார்டூனை மையப்படுத்தி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், பிப்ரவரி 15 ஆம் தேதி மத்திய அரசு விகடனின் இணையதளத்தை முடக்கியது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பதை போல அந்த கார்டூன் வரையப்பட்டிருக்கும். அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு இராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் நிகழ்வு பல தரப்பின் கண்டனத்தை பெற்றிருக்கும் நிலையில், மத்திய அரசும் பிரதமர் மோடியும் … Read more

Sivakarthikeyan: “முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன்.." – சிவகார்த்திகேயன்

கடந்தாண்டு தீபாவளி பண்டிகை வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த `அமரன்’, அவரின் கரியரில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக ஹிட் அடித்தது. இப்படம் வெளியாகி 100 நாள்கள் கடந்த நிலையில் கடந்த பிப்., 14-ம் தேதி இத்திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றிருந்தது. தனது 25-வது படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்திருக்கிறார். இந்நிலையில், அவரின் பிறந்த நாளான நேற்று ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் சிவகார்த்திகேயனுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனக்குப் பிறந்த … Read more

“அனைத்துப் பள்ளிகளிலும் பாலியல் புகார்களுக்கு புகார் பெட்டிகள்!'' -புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி தவளக்குப்பம் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்படடதாக எழுந்த புகார் மாநிலத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் காவல்துறை தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “தனியார் பள்ளியில் மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரத்தில், யாருடைய தலையீடும் இன்றி செயல்படும் காவல்துறை, குற்றவாளிக்கு தண்டனை … Read more

Vikatan Cartoon: இதுவரை விகடனில் வெளியான கார்ட்டூன்களில் சில உங்கள் பார்வைக்கு!

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் (www.vikatan.com) சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. என்றைக்குமே குறிப்பிட்ட ஒரு தரப்பை மட்டுமே ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ விகடன் செயல்பட்டதில்லை. சமூகப் பிரச்னைகளுக்கு எதிராக பொதுமக்களின் பக்கம் நின்று, அறத்தின் குரலாக எந்தவித விருப்பு வெறுப்பின்றி பல கார்ட்டூன்களை வெளியிட்டிருக்கிறோம். அந்த கார்ட்டூன்களில் சில இதோ! தற்போது www.anandavikatan.com … Read more

Tamil Cinema: “மலையாளம், தெலுங்கு சினிமா போல தமிழ்ச்சினிமா ஒரு குடையின் கீழ் இல்லை'' – வசந்த பாலன்

மலையாள திரையுலகமும் தெலுங்கு திரையுலகமும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கே தமிழ்சினிமா ஒரு குடையின் கீழ் இல்லாமல் இருப்பதாகத் தோற்றமளிப்பதாகவும், இயக்குநர் வசந்த பாலன் முகநூலில் பதிவிட்டிருக்கிறார். அந்த முகநூல் பதிவில், “நேற்று பிரபல திரைத்துறை நண்பர்களுடன் நீண்டநேரமாக தமிழ்ச்சினிமா குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். இடைவிடாது தொடர்ந்து வரும் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள் மீது மக்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்டு விட்டதாக விவாதம் துவங்கியது. அதற்கு பல படங்களை உதாரணமாகக் காட்டத் துவங்கினார்கள். வன்முறை … Read more

'தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்கும்' – மும்மொழிக் கொள்கை… சூடாகும் தமிழகம்!

சொந்த அரசியல் நலன்களுக்காக..! பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராததால், தமிழகம் உட்பட சில மாநிலங்களுக்கு எஸ்.எஸ்.ஏ நிதியை மத்திய நிறுத்தி வைத்திருக்கிறது. இதன்படி கடந்த 2023-24 கல்வியாண்டுக்கு ரூ.249 கோடி, 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.2,152 கோடி நிதியும் விடுவிக்கப்படவில்லை. இதனால் மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தசூழலில்தான் சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், ‘காசி தமிழ்ச் சங்கம் 3.0’ நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய … Read more