“அனைத்துப் பள்ளிகளிலும் பாலியல் புகார்களுக்கு புகார் பெட்டிகள்!'' -புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி தவளக்குப்பம் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்படடதாக எழுந்த புகார் மாநிலத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் காவல்துறை தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “தனியார் பள்ளியில் மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரத்தில், யாருடைய தலையீடும் இன்றி செயல்படும் காவல்துறை, குற்றவாளிக்கு தண்டனை … Read more

Vikatan Cartoon: இதுவரை விகடனில் வெளியான கார்ட்டூன்களில் சில உங்கள் பார்வைக்கு!

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் (www.vikatan.com) சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. என்றைக்குமே குறிப்பிட்ட ஒரு தரப்பை மட்டுமே ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ விகடன் செயல்பட்டதில்லை. சமூகப் பிரச்னைகளுக்கு எதிராக பொதுமக்களின் பக்கம் நின்று, அறத்தின் குரலாக எந்தவித விருப்பு வெறுப்பின்றி பல கார்ட்டூன்களை வெளியிட்டிருக்கிறோம். அந்த கார்ட்டூன்களில் சில இதோ! தற்போது www.anandavikatan.com … Read more

Tamil Cinema: “மலையாளம், தெலுங்கு சினிமா போல தமிழ்ச்சினிமா ஒரு குடையின் கீழ் இல்லை'' – வசந்த பாலன்

மலையாள திரையுலகமும் தெலுங்கு திரையுலகமும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கே தமிழ்சினிமா ஒரு குடையின் கீழ் இல்லாமல் இருப்பதாகத் தோற்றமளிப்பதாகவும், இயக்குநர் வசந்த பாலன் முகநூலில் பதிவிட்டிருக்கிறார். அந்த முகநூல் பதிவில், “நேற்று பிரபல திரைத்துறை நண்பர்களுடன் நீண்டநேரமாக தமிழ்ச்சினிமா குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். இடைவிடாது தொடர்ந்து வரும் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள் மீது மக்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்டு விட்டதாக விவாதம் துவங்கியது. அதற்கு பல படங்களை உதாரணமாகக் காட்டத் துவங்கினார்கள். வன்முறை … Read more

'தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்கும்' – மும்மொழிக் கொள்கை… சூடாகும் தமிழகம்!

சொந்த அரசியல் நலன்களுக்காக..! பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராததால், தமிழகம் உட்பட சில மாநிலங்களுக்கு எஸ்.எஸ்.ஏ நிதியை மத்திய நிறுத்தி வைத்திருக்கிறது. இதன்படி கடந்த 2023-24 கல்வியாண்டுக்கு ரூ.249 கோடி, 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.2,152 கோடி நிதியும் விடுவிக்கப்படவில்லை. இதனால் மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தசூழலில்தான் சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், ‘காசி தமிழ்ச் சங்கம் 3.0’ நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய … Read more

திருமணம் மீறிய உறவைக் கைவிடாத கணவன்; ஆத்திரத்தில் மனைவி அதிர்ச்சி செயல் – கும்பகோணம் அதிர்ச்சி!

விருதுநகர் மாவட்டம், கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (42). இவருடைய மனைவி கலைவாணி (38). இவர்களுக்கு 12 மற்றும் 9 வயதில், இரண்டு மகன்கள் உள்ளனர். அன்பரசன், கடந்த ஆறு ஆண்டுகளாக குடும்பத்துடன், கும்பகோணம் அருகே உள்ள மாதுளம்பேட்டையில், வாடகை வீட்டில் வசித்து வந்தார். திருப்புவனத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ மாஸ்டராக அன்பரசன் வேலை செய்து வந்தார். கைதான பெண் இந்த நிலையில் அன்பரசனுக்கும், அதே பேக்கரியில் வேலை செய்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் … Read more

“சாராயமா, முன்பகையா'' -இரட்டை கொலை விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை! பின்னணி என்ன?

சாராய விற்பனையை தட்டி கேட்ட இளைஞர்கள்.. மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ் (28), ஹரிஷ் (25). இவர்களது நண்பர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிசக்தி (20) தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார். அதே முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மூவேந்தன், தங்கத்துரை இருவரும் சகோதரர்கள். இவர்களது மைத்துனர் ராஜ்குமார். மூன்று பேரும் கடந்த சில வருடங்களாக பாண்டிச்சேரியிலிருந்து சாராயம், மதுப்பாட்டில் கடத்தி வந்து வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்ததாக … Read more

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்; ஜே.சி.பி முன்பு குழந்தையோடு அமர்ந்த பெண்கள்! – கரூர் களேபரம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த்தாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த அரசு புறம்போக்கு நிலத்தை அதிகாரிகள் மூலம் கடந்த ஆண்டு மீட்கப்பட்டது. அந்த இடத்தில் பொது கழிவறை கட்டுவதற்கு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குழந்தையுடன் போராட்டம் … Read more

Bison: “வாழ்நாள் அனுபவம், ஆன்மாவை வலிமைப்படுத்தியது.." -துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் சொல்வதென்ன?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வந்த பைசன் (Bison) படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் 5-வது திரைப்படம் பைசன் – களமாடன். கபடி விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் குறித்து முன்னதாக அவர், “இது படம் உண்மை மற்றும் புனைவு கலந்த கதையாக உருவாகி வருகிறது” எனக் கூறியிருந்தார். துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி, … Read more

“மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் அரசியலில் இல்லை… நான் சாதாரண தொண்டன்!'' -செங்கோட்டையன்

திருச்சி, ஸ்ரீரங்கத்துக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புது கேள்விகள் எல்லாம் கேட்டால் நான் எப்படி பதில் கூறுவது?, அந்தியூர் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி. அங்கு சில துரோகிகளால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை ஏற்கெனவே தெளிவுப்படுத்தி விட்டேன். பா.ஜ.க உடன் அ.தி.மு.க கூட்டணி வைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் பேசி இருப்பது குறித்து, ஓ.பி.எஸ்ஸிடம் தான் கேட்க … Read more

Sivakarthikeyan: `அந்தக் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது!' – எஸ்.கே-வின் அதிரடி லைன் அப்!

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திரைப்படங்கள் தொடர்பான பல அப்டேட்டுகள் நேற்று வந்திருந்தது! போஸ்டர், டைட்டில் டீசர் என எஸ்.கே-வின் ரசிகர்களுக்கு நேற்றைய தினம் அதிரடி டிரீட்தான்! `அமரன்’ படத்தின் வெளியீட்டுப் பிறகு அவரின் படங்களின் மீதான எதிர்பார்ப்பு பல மீட்டருக்கு எகிறியிருக்கிறது. `அமரன்’ படத்தை தொடர்ந்து பல அதிரடியான லைன் அப்களையும் தன் கைவசம் வைத்திருக்கிறார் எஸ்.கே. கடந்த 2014-ம் ஆண்டு `மான் கராத்தே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் … Read more