IND vs NZ: `வருண் ஒரு ரெட் டிராகன்' – ஸ்பின்னர்களை வைத்து சண்டை செய்த இந்தியா; சரிந்த நியூசிலாந்து

இந்தியா வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி துபாயில் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணியே முதலில் பேட் செய்து சுமாரான ஸ்கோரைத்தான் எடுத்தது. அந்த சுமாரான டார்கெட்டையும் எட்ட முடியாமல் இந்திய ஸ்பின்னர்களிடம் விக்கெட்டைக் கொடுத்து சரிந்து விழுந்திருக்கிறது நியூசிலாந்து. டாஸ் டாஸ் டாஸை நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர்தான் வென்றிருந்தார். ஆனாலும் முதலில் பேட்டிங் ஆட வேண்டும் என்பதைத்தான் தானுமே விரும்பியதாக ரோஹித் கூறினார். முதல் இரண்டு போட்டிகளிலும் டார்கெட்டை சேஸ் செய்தோம். … Read more

Varun Chakaravarthy : “பதற்றமாக இருந்தேன்; ரோஹித்தான் தேற்றினார்.." – ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி

ஆட்டநாயகன்! சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். வெற்றிக்குப் பெரியளவில் உதவிய வருணுக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. வருண் சக்கரவர்த்தி – கோலி ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு வருண் சக்கரவர்த்தி பேசுகையில், “ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். இந்திய அணிக்காக நான் அவ்வளவாக ஓடிஐ ஆடியதில்லை. அதனால்தான் பதற்றம் அடைந்தேன். ரோஹித், ஹர்திக், … Read more

திருப்பத்தூர்: சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை; அச்சத்தில் பயணிகள்! – சீரமைக்கப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திரியாலம் என்ற கிராமத்தின் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையில் பயணியர் நிழற்குடை ஒன்று உள்ளது. இவ்விடத்தில் நாட்றம்பள்ளி, பச்சூர், பர்கூர் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்வதற்காகப் பயணிகள் இங்கு நின்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பயணியர் நிழற்குடை இருந்தும், அதைப் பயன்படுத்த முடியாமல் வெளியே நிற்க வேண்டிய நிலை உள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து நம்மிடம் வந்து பேசிய சமூக ஆர்வலர்கள், “இந்தப் பகுதியைச் சுற்றி தனியார்ப் … Read more

'பெரும்பாலும் உங்க பாட்டுதான் கேட்பேன்…' – இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்

இங்கிலாந்தில் இசைஞானி இளையராஜா முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ள இளையராஜாவை வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து, இருவரும் உரையாடிக் கொண்டனர். “இசைஞானி என்பதை கலைஞர்தான் வைத்தார். அதை மாற்ற முடியவில்லை” என்றார். அதற்கு, … Read more

Jyothika: `மை டியர் ஜோ சேச்சி!' – ஜோதிகாவுடன் நடித்தது குறித்து நிமிஷா சஜயன் நெகிழ்ச்சிப் பதிவு!

ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற `டப்பா கார்டெல்’ வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஜோதிகாவுடன் இணைந்து நடித்தது குறித்து நிமிஷா சஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் நிமிஷா சஜயன், “ மை டியர் ஜோ சேச்சி! நான் சந்தித்ததில் மிகவும் கனிவான, அன்பு நிறைந்த அற்புதமான நபர் நீங்கள். `டப்பா கார்டெல்’ பயணம் முழுவதும் நீங்கள் எனக்காக செய்த அனைத்திற்கும் … Read more

Sai Pallavi: `தெலுங்குல நடிகையா தெரியுறேன்; தமிழ்ல ரௌடி பேபியா தான் தெரியுறேன்னு..!' – சாய் பல்லவி

சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது . படக்குழுவினர் மற்றும் விநியோகஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். இந்த நிகழ்வின் காணொளிகள் ஒவ்வொன்றாக யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகிறது. இதில் சாய் பல்லவி பேசிய சில விஷயங்கள் காணொளிகளாக இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சாய் பல்லவி, “படத்துல வரும் வசனம், இசை, ஆக்ஷன் எல்லாத்தையும் திட்டமிட்டது இயக்குநர் ராஜ்குமார்தான். இந்தக் கதையை எழுதுறது ரொம்பவே கஷ்டம், அவரு எப்படி எழுதினாருனு … Read more

”இந்தித் திணிப்பை ஆதரிப்பவர்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்வதாக அர்த்தம்” – அமைச்சர் எ.வ.வேலு

கும்பகோணம் அருகே வளையப்பேட்டையில் உள்ள கலைஞர் கோட்டத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழகத்தில் அரசியலுக்கு, அப்பாற்பட்டு ஒட்டு மொத்தமாக ஒரே குரலாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கை தான் ஒத்து வரும், மூன்றாவது மொழி என்பது அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்றுக்கொள்வதில் மாற்றம் இல்லை. எ.வ.வேலு தமிழகத்தில் மலையாளம், கன்னடம், தெலுங்கு படிக்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறவில்லை. இந்தி மொழியைத் … Read more

Coolie: ரஜினியின் கூலி படத்தில் நான் நடிக்கிறேனா?- சந்தீப் கிஷன் அளித்த விளக்கம்

மாநகரம், மாயவன், தனுஷுடன் கேப்டன் மில்லர், ராயன் உள்ளிட்டப் படங்களில் நடத்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து லைகா தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் தெலுங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘மசாக்கா’. மசாக்கா இப்படத்தில் இவருடன் சேர்ந்து ராவ் ரமேஷ், அன்ஷுல், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கடந்த 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் மக்களிடடையே நல்ல வரவேற்பைப் பெற்று … Read more

INDvNZ: சூப்பர் மேனாக கேட்ச் பிடித்த பிலிப்ஸ்; அதிர்ச்சியில் கோலி – தடுமாறும் இந்தியா

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி பவர்ப்ளே முடிவில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. Ind v Nz டாஸை நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர்தான் வென்றிருந்தார். ஆனாலும் முதலில் பேட்டிங் ஆட வேண்டும் என்பதை தானுமே விரும்பியதாக ரோஹித் கூறினார். முதல் இரண்டு போட்டிகளிலும் டார்கெட்டை சேஸ் செய்தோம். இந்தப் போட்டியில் எங்களை நாங்களே … Read more

'என் கண்ணீர் உன்னை சும்மா விடாது சீமான்; இனி தப்பிக்கவே முடியாது'- வீடியோ வெளியிட்ட நடிகை

‘நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான்? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது’ என சீமான் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள நடிகை, வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ‘பெண்கள் குறித்து பேசும் போது தலைவர்கள் கண்ணியமாக பேச வேண்டும்’ என்று பிற அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “எது கண்ணியமான பேச்சு என்று நீங்கள் சொல்லுங்கள்? சீமான் என்னை … Read more