Sivakarthikeyan: "தீ பரவட்டும்…" – 'பராசக்தி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் | Photo Album

பராசக்தி பராசக்தி பராசக்தி பராசக்தி பராசக்தி பராசக்தி Parasakthi: `எதிர்நீச்சல் டு பராசக்தி’ – சிவகார்த்திகேயனும் ரெட்ரோ தலைப்புகளும் – ஒரு பார்வை! இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play Source link

Sivakarthikeyan: மீண்டும் ஆக்ஷன் களத்தில் சிவகார்த்திகேயன்… முருகதாஸ் படம் டைட்டில் அறிவிப்பு!

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். படத்திற்கு ‘மதராசி’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். `மான் காராதே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஷங்கர் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதே என்னுடைய கனவு எனக் கூறியிருந்தார். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கனவு எஸ். கே-வுக்கு நிறைவேறி இருக்கிறது. அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக இப்படத்தில் நடித்திருக்கிறார். Sivakarthikeyen … Read more

Delhi Earthquake: "மக்கள் நிதானமாக இருக்கவும்…" – டெல்லி நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிரதமர் அறிவுரை

தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 4.0 ரிக்டர் அளவில் 5 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. டெல்லி, நொய்டா, குர்கான் ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், உயரமான கட்டடங்களிலிருந்து அவசரமாக வெளியேறினர். Delhi Earthquake இந்த நிலநடுக்கம் தொடர்பான வீடியோகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை, அவசர உதவிக்கு 112 என்ற எண்ணைத்தொடர்பு … Read more

Vetrimaaran: "'விடுதலை' எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கு; இதுபோல் இன்னொரு படம்…" – வெற்றிமாறன்

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘விடுதலை’ இரண்டு பாகங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அரசியல், கருத்தியல், மக்களுக்கான போராட்டம், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை எனத் துணிச்சலுடன் மக்கள் போராளிகள் பற்றிப் பேசியிருந்தன. ‘விடுதலை’ படப்பிடிப்பில் சூரி, வெற்றிமாறன், விஜய் சேதுபதி இந்நிலையில் ‘விடுதலை 2’ படத்திற்காக வெற்றிமாறனுக்கு ‘Caib Award’ விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழா மேடையில் பேசியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், “எங்க … Read more

Delhi: டெல்லியில் நிலநடுக்கம்… வீடுகள் குலுங்கியதால் வெளியேறிய மக்கள்; வைரலாகும் காணொலிகள்

டெல்லியில் இன்று (பிப் 17) அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க அதிர்வானது டெல்லியைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளான நொய்டா மற்றும் குர்கானில் ஏற்பட்டிருக்கிறது. அதிகாலை தூக்கத்தில் இந்த நில அதிர்வை உணர்ந்த மக்கள், பதறி அடித்து வீடுகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். டெல்லியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. Earthquake AlertMagnitude: 4.0Time: 17/02/2025 05:36:55 ISTDepth: 5 kmEpicenter: New Delhi (28.59°N, … Read more

Beauty: பாட்டி வைத்தியம் முதல் பியூட்டி பார்லர் வரை… இயற்கை அழகி முல்தானி மட்டி!

முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு செம மவுசு! ‘முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள். ‘அது ஒரு பவுடர்…’ என்பதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் தெரியாமல் விழிப்பார்கள். சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரனிடம் முல்தானிமட்டி பற்றி கேட்டோம். முல்தானி மட்டி பட்டு போல் வேண்டாம்! முல்தானிமட்டி என்பது, ஆற்றுப்படுகைகளில் இருந்து … Read more

ஒரே ஒரு எலுமிச்சை பழம் ₹5,09,000-க்கு ஏலம்… தைப்பூசத்தில் வியக்க வைத்த பழனி சம்பவம்..!

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் உள்ளனர். இந்த சமூகத்தினர் மேல்முகம் என்ற மேல சீமை, நடுமுகம் என்ற நடுசீமை, கீழ முகம் என்ற கீழ சீமை என்று பல்வேறு பகுதிகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் குறிப்பாக, மேல சீமையில் உள்ளவர்கள் கீரனூர், ஆரியூர், அன்னவாசல், வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், நடு சீமையில் உள்ளவர்கள் ஆலங்குடி, மறமடக்கி, வடகாடு, கரம்பக்குடி போன்ற பகுதிகளிலும், கீழ சீமையில் உள்ளவர்கள் நெடுவாசல், நெய்வேலி, பிலாவிடுதி, காடுவெட்டிவிடுதி ஆகிய … Read more

“துன்புறும் சிறுமிகள் `அப்பா.. அப்பா' எனக் கதறுவது ஸ்டாலினுக்கு கேட்கலையா?'' -எடப்பாடி பழனிசாமி

வேலூர் கோட்டை மைதானத்தில், இன்று (பிப்ரவரி-16) மாலை, அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசும்போது, “ `அ.தி.மு.க-வின் அறிக்கை பா.ஜ.க-வின் அறிக்கையையொட்டி இருக்கிறது’ என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எந்தக் காலத்திலும் அ.தி.மு.க யாரையும் நம்பி இல்லை. யாரை ஒட்டியும் அரசியல் செய்தது கிடையாது. இது மக்களை நம்பியிருக்கும் கட்சி. நாங்கள் யாரையும் … Read more

“கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாஜக அரசின் ஃபாசிசத் தாக்குதல்..!'' -திருமாவளவன் கண்டனம்

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பேசவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் விகடன் ஒரு கார்டூனை வெளியிட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு விகடன் இணையத்தளத்தை முடக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. விகடன் குழுமத்தின் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் … Read more