Delhi: டெல்லியில் நிலநடுக்கம்… வீடுகள் குலுங்கியதால் வெளியேறிய மக்கள்; வைரலாகும் காணொலிகள்

டெல்லியில் இன்று (பிப் 17) அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க அதிர்வானது டெல்லியைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளான நொய்டா மற்றும் குர்கானில் ஏற்பட்டிருக்கிறது. அதிகாலை தூக்கத்தில் இந்த நில அதிர்வை உணர்ந்த மக்கள், பதறி அடித்து வீடுகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். டெல்லியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. Earthquake AlertMagnitude: 4.0Time: 17/02/2025 05:36:55 ISTDepth: 5 kmEpicenter: New Delhi (28.59°N, … Read more

Beauty: பாட்டி வைத்தியம் முதல் பியூட்டி பார்லர் வரை… இயற்கை அழகி முல்தானி மட்டி!

முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு செம மவுசு! ‘முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள். ‘அது ஒரு பவுடர்…’ என்பதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் தெரியாமல் விழிப்பார்கள். சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரனிடம் முல்தானிமட்டி பற்றி கேட்டோம். முல்தானி மட்டி பட்டு போல் வேண்டாம்! முல்தானிமட்டி என்பது, ஆற்றுப்படுகைகளில் இருந்து … Read more

ஒரே ஒரு எலுமிச்சை பழம் ₹5,09,000-க்கு ஏலம்… தைப்பூசத்தில் வியக்க வைத்த பழனி சம்பவம்..!

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் உள்ளனர். இந்த சமூகத்தினர் மேல்முகம் என்ற மேல சீமை, நடுமுகம் என்ற நடுசீமை, கீழ முகம் என்ற கீழ சீமை என்று பல்வேறு பகுதிகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் குறிப்பாக, மேல சீமையில் உள்ளவர்கள் கீரனூர், ஆரியூர், அன்னவாசல், வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், நடு சீமையில் உள்ளவர்கள் ஆலங்குடி, மறமடக்கி, வடகாடு, கரம்பக்குடி போன்ற பகுதிகளிலும், கீழ சீமையில் உள்ளவர்கள் நெடுவாசல், நெய்வேலி, பிலாவிடுதி, காடுவெட்டிவிடுதி ஆகிய … Read more

“துன்புறும் சிறுமிகள் `அப்பா.. அப்பா' எனக் கதறுவது ஸ்டாலினுக்கு கேட்கலையா?'' -எடப்பாடி பழனிசாமி

வேலூர் கோட்டை மைதானத்தில், இன்று (பிப்ரவரி-16) மாலை, அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசும்போது, “ `அ.தி.மு.க-வின் அறிக்கை பா.ஜ.க-வின் அறிக்கையையொட்டி இருக்கிறது’ என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எந்தக் காலத்திலும் அ.தி.மு.க யாரையும் நம்பி இல்லை. யாரை ஒட்டியும் அரசியல் செய்தது கிடையாது. இது மக்களை நம்பியிருக்கும் கட்சி. நாங்கள் யாரையும் … Read more

“கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாஜக அரசின் ஃபாசிசத் தாக்குதல்..!'' -திருமாவளவன் கண்டனம்

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பேசவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் விகடன் ஒரு கார்டூனை வெளியிட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு விகடன் இணையத்தளத்தை முடக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. விகடன் குழுமத்தின் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் … Read more

“மும்மொழிக் கல்வி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதுங்குவது ஏன்?'' -செந்தில் பாலாஜி

மும்மொழிக் கல்வி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதைக் கண்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார். ‘தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால், தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்’ என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் … Read more

Suriya: “நீங்க எனக்குக் கொடுத்த வருமானத்தின் மூலமாக உருவான இடம் இது!'' -நெகிழும் சூர்யா!

அகரம் அறக்கட்டளையின் மூலமாக பல ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. சென்னை தி. நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளையின் அலுவலகத்தை இன்று சூர்யா திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சூர்யா, “2006-ல தோன்றிய விதைதான் இன்று ஆலமரமாக வளர்ந்து நிக்குது. 2006-ல கஜினி படத்திற்குப் பிறகு நமக்கு அன்பைக் கொடுக்கிற மக்களுக்காக அர்த்தமுள்ளதாக என்ன விஷயம் பண்ண முடியும் யோசிச்ச சமயத்துல இயக்குநர் … Read more

IPL 2025 : 'CSK க்கு முதல் போட்டியே மும்பையோடு!' – வெளியானது ஐ.பி.எல் அட்டவணை!

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் இன் 18 வது சீசன் மே 25 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. MI Matches இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. அதேமாதிரி, சென்னை அணியின் முதல் இரண்டு போட்டிகளுமே பரபர போட்டிகளாக அமையவிருக்கிறது. சென்னை … Read more