Vijay Sethupathi: “அஜித் சாரோட நடிக்கிற வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு!'' -விஜய் சேதுபதி

`ஏஸ், டிரெயின், காந்தி டாக்ஸ்’ என அடுத்தடுத்துப் பல படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதை தாண்டி இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் பெரம்பலூரில் ஒரு கல்லூரியில் விஜய் சேதுபதி அஜித்துடன் நடிப்பது பற்றி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நிறைய இடத்துல அஜித் சார்கூட சேர்ந்து நடிக்கிறதைப் பற்றி கேட்கிறாங்க. இதுவரைக்கு நடந்த விஷயங்கள் … Read more

Painkili Review: `இதெல்லாம் ஜோக் கிடையாது ப்ரதர்!' – காமெடியால் சோதிக்கும் `ஆவேஷம்' கூட்டணி

தன்னுடைய சொந்த ஊரில் சொந்தமாகத் தொழில் ஒன்றைத் தொடங்கிக் கவனித்து வருகிறார் சுகு (சஜின் கோபு). குடும்பத்தினர், நண்பர்கள் எனத் தனது வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர், தன்னுடைய தொழிலுக்காக ஒரு பொருளை வாங்கி வருவதற்காகக் கோவைக்குச் செல்கிறார். அங்கு தன்னுடைய பைக்கைத் திருடிச் செல்லும் நபரிடமிருந்து பைக்கை மீட்கப் போராடும் சுகு, எதிர்பாராத வகையில் அவரைக் கொலை செய்து விடுகிறார். அங்கிருந்து தப்பி ஓடி கொலை வழக்கைச் சமாளிக்கத் தான் மனநலம் பாதிக்கப்பட்டவன் எனப் போலியாகச் சான்றிதழ்களைத் … Read more

கல்வி நிதி விவகாரம்: “தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்" -உதயநிதி ஸ்டாலின் காட்டம்

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இது தமிழ்நாட்டின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முதல் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை … Read more

“உணவில் 50% ஊட்டச்சத்து குறைவு… இதுதான் தீர்வு'' -ஈரோட்டில் நடந்த இயற்கை உழவர் மாநாடு

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் சார்பில், `இயற்கை உழவர் உணவுப் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில், 1500-க்கும் மேற்ப்பட்ட இயற்கை விவசாயிகள்,50-க்கும் மேற்ப்பட்ட இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பாரம்பரிய விதைகள், இயற்கை வேளாண் பொருள்கள் கொண்ட 120 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மாநாட்டை மண்ணியல் நிபுணரும், மாநிலத் திட்ட குழு உருப்பினருமான பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தொடக்கி … Read more

Yogi Babu: “எனக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன்!'' -யோகி பாபு விளக்கம்!

காமெடி கதாபாத்திரங்களிலும், முன்னணி கதாபாத்திரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் யோகி பாபு. இன்று காலை அவர் படப்பிடிப்புக்குச் செல்லும்போது அவருடைய கார் விபத்துக்குள்ளானதாகவும் அதனால் அவரும் அவருடைய உதவியாளரும் பலத்த காயமடைந்ததாக பல்வேறு செய்திகள் வெளியானது. அப்படி எந்த விபத்துக்கும் எனக்கு ஏற்படவில்லை என யோகி பாபு தற்போது விளக்கமளித்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து யோகி பாபு, “எனக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக … Read more

விகடன் இணையதளம் முடக்கம்: “நெருக்கடி நிலை காலத்தையே மிஞ்சுகிற அளவுக்கு..'' – வைகோ கண்டனம்!

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலகிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து எந்த விஷயமும் பேசவில்லை. இதனை விமர்சிக்கும் வகையில் விகடன் ஒரு கார்டூனை வெளியிட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு விகடன் இணையத்தளத்தை முடக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு … Read more

விகடன் இணையதளம் முடக்கம்: `நாடாளுமன்றத்தில் பேசுவோம்' – எம்.பி மாணிக்கம் தாகூர் கண்டனம்!

அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கை,கால்கள் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர். ஆனால் இது குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. இதை விமர்சிக்கும் விதமாக விகடன் ஒரு கருத்துப்படத்தை வெளியிட்டது. இந்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் விகடன் வாசகர்கள் இணையதளத்தை பயன்படுத்துவதில் சில சிக்கல்களை சந்திப்பதாக சொல்கின்றனர். ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த … Read more

US aircraft: “நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது; இந்திய ராஜாதந்திரத்துக்கு ஒரு சோதனை..'' -ப.சிதம்பரம்

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின், அந்த நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். கடந்த மாதம் ஜனவரி 20-ம் தேதி, 104 இந்தியர்கள் கை கால்கள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கை, கால்கள் விலங்கிடப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதமானது. இந்த நிலையில், 2-வது கட்டமாக நேற்றிரவு 11.35 மணியளவில் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு, 119 அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். இன்று 3-வது அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் வந்தடைய உள்ளது. இந்த … Read more

“ஏன் மும்மொழி வேண்டாம்?'' -பேரறிஞர் அண்ணாவின் உரையுடன் பதிவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

பா.ஜ.க அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட திணிப்புகள் காரணமாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்று தமிழக ஆளும் தி.மு.க அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. மேலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மத்திய பா.ஜ.க அரசு கல்விக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதாகவும் தி.மு.க அரசு குற்றம்சாட்டி வருகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இத்தகைய சூழலில்தான், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், “மும்மொழி கொள்கையைத் தமிழக அரசு ஏற்க மறுப்பதேன்? அரசியல் காரணங்களுக்காகத் தேசிய … Read more

`கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம்!’ #VikatanForFreedomOfExpression

விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு … Read more