`கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம்!’ #VikatanForFreedomOfExpression

விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு … Read more

`Vikatan Stands Strong for Freedom of Expression!’ #VikatanForFreedomOfExpression

There have been numerous reports stating that, the Vikatan website has been blocked by the central government. Many users from different locations have reported that, they are unable to access the Vikatan website. However, as of now, there has been no official announcement from the central government regarding the blocking of the Vikatan website. Earlier, … Read more

Manipur: “குடியரசு தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுங்கள்" – மணிப்பூரில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்

மணிப்பூரில் 2024 மே மாதத்தில் குக்கி, மெய்தி சமூகத்தினருக்கு இடையே வெடித்த மோதல், இன்னும் ஓயாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்லை. இவ்வாறிருக்க, கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி கூடிய மணிப்பூர் சட்டமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிப்ரவரி 12-ம் தேதிக்குள் கூட்டியாக வேண்டிய சூழலில், பிப்ரவரி 9-ம் தேதி ஆளும் பாஜக-வைச் சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். மணிப்பூர் … Read more

`நம் கதைகளை நாம்தானே சொல்ல வேண்டும்!' – புகைப்படங்கள் ஊடே வாழ்வியலை விளக்கிய பள்ளி மாணவர்கள்

ஆவி பறக்கும் கொத்து பரேட்டா கடை, இரைச்சல் கொட்டும் கல் குவாரிகள், அதிகாலை குளிரில் செங்கல் சூளையில் பதியும் கால்கள், அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் பேருந்து ஓட்டுநர், கத்திகள் தயாரிக்கும் புலம் பெயர்ந்த நாடோடிகள், விறகு வெட்டிகள், கறி கடை பாய், மட்பாண்டங்கள், ஆலமரத்தடியில் பீடி சுருட்டும் தாத்தா என் குட்டி தமிழ்நாட்டை நம் கண்ணெதிரே வடித்து காட்டியது இந்த கண்காட்சி. எழும்பூர் அருங்காட்சியகத்தில் பழனி குமார் தலைமையில் மாதிரி பள்ளிகள் துறை சார்பில் இந்த … Read more

'பிரசாந்த் கிஷோர் தான் வர வேண்டுமா… உங்களுக்கு மூளை இல்லையா?' – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு தேவை இருக்கிறது. இந்த மக்களுக்காக களத்துக்கு வந்திருக்கிறேன். நான் தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சைரன் வைத்த வாகனம் வேண்டாம் என்று சொன்னார். வந்த வாகனத்தை திரும்பி போக சொன்னவர் அவர். மக்கள் அரசியலில் பாதுகாப்பு தேவையில்லை. தம்பி விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு என்னை மாதிரி … Read more

Amaran 100: `இங்க வாங்குற சம்பளத்தை பிடிங்கிட்டு போகிற குரூப்பும் இருக்கு!' – வெற்றி விழாவில் எஸ்.கே

கடந்தாண்டு தீபாவளி பண்டிகை வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த `அமரன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. எஸ்.கே-வின் கரியரில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் இதுதான். இப்படம் வெளியாகி 100 நாட்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் இத்திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் தயாரிப்பாளர் கமல், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நினைவு பரிசையும் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “ இந்தப் படத்துக்கு எனக்கு … Read more

டெல்லி: அடுத்தடுத்து வந்த 100 பீட்ஸாக்கள்; எல்லாம் கேஷ் ஆன் டெலிவரி! – Ex லவ்வரை அதிர வைத்த பெண்

காதலில் பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால், சில சந்தர்ப்பங்களில் இரண்டு பேரில் ஒருவர் எதாவது வழியில் மற்றவர்களை பழிவாங்குவதுண்டு. டெல்லியில் அது போன்று பிரேக்அப் ஆன பெண் ஒருவர் தனது காதலனை நூதன முறையில் பழிவாங்கி இருக்கிறார். அப்பெண் காதலர் தினத்தன்று தனது காதலனுக்கு ஆன்லைனில் பீட்ஸா ஆர்டர் செய்தார். ஒன்று, இரண்டு அல்ல. மொத்தம் 100 பீட்ஸாக்களை தொடர்ச்சியாக ஒரே நாளில் ஆர்டர் செய்தார். ஆனால் ஆர்டர் செய்யப்பட்ட பீட்ஸாக்களுக்கு அப்பெண் பணம் கொடுக்கவில்லை. கேஷ் ஆன் டெலிவரி … Read more

`செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்று…’ – ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்ன?

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (DISHA) குழுவின் மாநில அளவிலான 4வது ஆய்வுக் கூட்டம் இன்று (15.02. 2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் … Read more

Odisha: ஒரே பத்ம ஶ்ரீ விருதுக்கு உரிமை கோரும் இரண்டு நபர்கள்; யார் உண்மையான அந்தர்யாமி மிஸ்ரா?

ஒரிசா உயர் நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்துள்ளது. 2023ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்ம ஶ்ரீ விருதை, இரண்டு நபர்கள் `எனது… எனது’ என்று கருதுவதனால் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. விருது யாருடையது எனத் தீர்மானிக்க முயற்சிகளை மேற்கொண்டுவரும் நீதிமன்றம், பிப்ரவரி 24ம் தேதி இரண்டு தரப்பினரையும் நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளது. 2023ம் ஆண்டு அந்தர்யாமி மிஸ்ரா என்ற பெயருள்ளவருக்கு கல்வி மற்றும் இலக்கியத்தில் அவரது பங்களிப்புக்காக பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அந்தர்யாமி மிஸ்ரா … Read more

அணைக்கட்டு: `மகளிர் திட்ட அலுவலகத்திலேயே மகளிருக்கான கழிவறை சரியாக இல்லை…' – குமுறும் பெண்கள்!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது மகளிர் திட்ட அலுவலகம். இந்த அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதில் அணைக்கட்டு வட்டாரத்தில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர். இந்த அலுவலகத்தில் கழிவறை இருந்தும் பயன்பாட்டில் இல்லாமல், தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாக அலுவலகத்திற்கு பயிற்சிக்கு வரும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அருகிலேயே கெங்கநல்லூர் பகுதியில் மகளிர் … Read more